புதன், ஆகஸ்ட் 18, 2010

கோயில் நகரம் கும்பகோணம்கோயில் நகரம் கும்பகோணம்

இந்த இடுகையில் கும்பகோணம் பற்றிய தல வரலாறு கொஞ்சம் சொல்லலாம் என்றிருக்கிறேன் . உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் .இருந்தாலும் குடந்தையூர் என்று தளம் வைத்து கொண்டு அதை பற்றி சொல்லாவிட்டால் எப்படி அதனால் தான். ஹி ....ஹி.... இதனுடன் நான் 2004 மகாமகத்தின் போது எடுத்த சில படங்களையும் அதனுடன் சில ஆலயங்களையும் தந்துள்ளேன் .

ஒரு முறை ஊழிப் பெரு வெள்ளத்தால் உலகம் அழியும் நிலை வந்த போது தேவர்கள் சிவனிடம் சென்று வேண்ட, சிவன் ஒரு கும்பத்தில் அமுதத்தை நிரப்பி பூஜை செய்யும் படி ஆணையிட்டார். அதன் படியே கும்பத்திற்கு பூஜைகள் நடைபெற ஊழி பெருவெள்ளம் வந்து கும்பத்தை அடித்து சென்றது. அதை ஒரு குன்றின் மேல் கொண்டு சேர்த்தது. தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். பூமிக்கு வந்த சிவபெருமான் கும்பத்தை அம்பெய்து உடைத்தார். கும்பம் உடைந்து அமுதம் பூமியில் பரவியது. அமுதம் வழிந்த இடம் தான் மகாமக குளம். கும்பம் வந்து சேர்ந்த இடம் குடமூக்கு என்று பெயராயிற்று.( கும்பம் என்பது குடம் கோணம் என்பது மூக்கு ) காலப்போக்கில் குடந்தை என்று வழங்கப்பட்டு கும்பகோணம் என்று பெயராயிற்று.
உச்சி பிள்ளையார் கோவில்
ராமசாமி கோயில்

ராமசாமி கோயில் உற்சவர்

சாரங்க பாணி கோயில்
சாரங்க பாணி கோயில் உள்ளே கோபுரம் ஒன்று


மகாமக குளத்தில் இருபது கிணறுகள் உள்ளன குரு பகவான் சிம்ம ராசியில் இருக்கும் போது மாசி மாதத்து பௌர்ணமியும் மக நட்சத்திரமும் கூடும் நாள் மகாமக நாள் .இந்த படங்களில் இருக்கும் பக்தர்களில் நானும் ஒருவன்

ஹி ....ஹி....

ஆர்.வி.சரவணன்

6 கருத்துகள்:

 1. கூட்ட‌த்தில் உங்க‌ளை நான் க‌ண்டுபிடிச்சிட்டேன்.. என்ன‌து யாரா?.. அந்த‌ நாலாவ‌து நிக்கிற‌வ‌ர் ப‌க்க‌த்துல‌ நிக்கிற‌ மூணாவ‌து ஆள்... :)))))))

  பதிலளிநீக்கு
 2. நல்ல தகவல்கள். அழகான படங்கள்.

  பதிலளிநீக்கு
 3. படங்களுடன் கும்பகோணம் குறித்த உங்கள் பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
 4. வலுக்கு நன்றி , படங்கள் சூப்பர் .

  பதிலளிநீக்கு
 5. தகவலுக்கு நன்றி, படங்கள் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 6. //இந்த படங்களில் இருக்கும் பக்தர்களில் நானும் ஒருவன்//

  சூப்பரப்பு! :-))

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்