சனி, ஜூன் 12, 2010

மேக திரை விலக்கி......
மேக திரை விலக்கி......


மேக திரை விலக்கி நிலவும் சன்னல் திரை விலக்கி நீயும் பார்ப்பது எனக்கு ஒன்று தான்

ரோஜாவில் பனி துளியும் உன் இதழ்களில் நீர் துளியும் ஒன்று தான்

பட்டாம் பூச்சியின் படபடப்பும் உன் இமைகளின் படபடப்பும் ஒன்று தான்

பொன் நகையின் மினுமினுப்பும் உன் புன்னகையின் மினுமினுப்பும் ஒன்று தான்

ஆப்பிள் சிவப்பும் உன் வெட்க சிவப்பும் ஒன்று தான்

தென்றலின் தொடுதலும் உன் விரல்கள் என் மீது படுதலும் ஒன்று தான்

அன்பே

உன்னால் இன்று என் கவிதைகள் உயிர் பெற்றதும் நன்று தான்

ஆர்.வி.சரவணன்

6 கருத்துகள்:

 1. காத‌லியின் வ‌ர்ண‌னை ந‌ல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
 2. //ரோஜாவில் பனி துளியும் உன் இதழ்களில் நீர் துளியும் ஒன்று தான் //

  சூப்பர்

  பதிலளிநீக்கு
 3. கவிதை அருமை...சின்ன ஆலோசனை... சற்று பிரித்து எழுதவும் இன்னும் சிறப்பாக இருக்கும்...நானும் இப்படி தான் எழுதிக்கொண்டு இருந்தேன்...ஒரு பதிவர் தான் ஆலோசனை சொன்னார்...

  உதாரணம்:
  //மேக திரை விலக்கி நிலவும் சன்னல் திரை விலக்கி நீயும்
  பார்ப்பது எனக்கு ஒன்று தான் //

  மேக திரை விலக்கி
  நிலவும்
  சன்னல் திரை விலக்கி
  நீயும்
  பார்ப்பது
  எனக்கு ஒன்று தான்...

  பதிலளிநீக்கு
 4. நன்றி nadodi
  நன்றி jeevadharshan
  நன்றி ராசராச சோழன் உங்கள் யோசனைக்கு நன்றி இனி மேல் உங்கள் யோசனை

  படி எழுதுகிறேன் உங்கள் வருகைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. உங்கள் பதிவிற்கு வந்ததும்
  காணும் அருவி அழகு என்றால்...

  உங்கள் கவிதை அதை விட
  அழகாய் இருக்கிறது.. :)

  பதிலளிநீக்கு
 6. உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
  பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

  http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்