திங்கள், ஏப்ரல் 21, 2014

விளையாடிய பொழுதுகள்

விளையாடிய பொழுதுகள்

வலைபதிவர்  நண்பர் மனசு செ.குமார் அவர்கள் என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். அதாவது ஒரு வருடத்திற்கு முன்.விளையாட்டுக்களில் சரியான நண்பர்கள் அமையாததால் என்னால் எந்த ஒரு விளையாட்டிலும் பங்கேற்க முடியவில்லை எனவே என்ன எழுதுவது என்றே தெரியவில்லை என்றேன். அவர் உங்கள் கண்ணோட்டத்தில் சிறு வயது விளையாட்டு நினைவுகளை தெரிந்து கொள்ள ஆர்வபட்டு தான் அழைத்தேன் என்றார். முயற்சிக்கிறேன் என்று சொல்லி விட்டாலும் அவரது பின்னூட்டம் பார்க்கும் போதும் அவரது பதிவுகள் படிக்கும்  போதும் என் நினைவில் அவர் அழைத்த தொடர்பதிவு உறுத்தி கொண்டே இருந்தது. ஒரு வழியாக இதோ எழுதி விட்டேன் நண்பா. தாமதத்திற்கு மன்னிக்கவும் .குமார் அவர்களை பற்றி சொல்வதென்றால் அண்ணா என்ற  உரிமையுடன் என் மேல் அன்பு செலுத்தி வருபவர் இணையம் எனக்கு தந்த வியக்கத்தக்க நட்புக்களில் அவரும்  ஒருவர் 

வாருங்கள்  என் சிறு வயது  உலகத்திற்குள் சென்று வருவோம்  

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில் இருக்கிறது மேலகொட்டையூர் என்ற ஊர் நான்காம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை அங்கே தான் என் வாசம். கூட்டு குடும்பமாக இருந்தோம் என்னுடன் என் தம்பி என் தங்கை மாமா பெண்கள் என்று  சிறுவர் பட்டாளமே இருந்தது  


கிராமம் என்பதால் கபடி கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் அங்கே பார்ப்பது அரிது. நாங்கள் விளையாட என்றே எங்கள் பொழுதை போக்க என்றே விளையாடிய விளையாட்டுக்களின்  பட்டியலை இங்கே தருகிறேன் 
டயர் விளையாட்டு அதாவது சைக்கிள் டயர் இருக்கும் அல்லவா  சிறு குச்சி வைத்து ஒரு கையால் ஓட்டிய  படியே ஓடி வருவது. ஒரு கடைக்கு போய்  ஏதேனும் வாங்கி வர சொன்னால் கூட இதை ஓட்டிய படியே செல்வோம். வண்டியை நிறுத்துவது போல் டயரை சுவற்றில்  சாய்த்து வைத்து விடுவோம்.என் வண்டியை நீ ஏன் எடுத்தே என்றெல்லாம்  எங்களுக்குள் வாய்க்கால் தகறாரு கூட நடந்திருக்கிறது 

காபி கடை 
இன்ஜெக்சன் மருந்து  பாட்டில் அங்கே கிடைக்கும். அதை எடுத்து கொள்வோம் எங்கள் வீட்டுக்கு பின்னே சாக்பீஸ் பாக்டரி இருந்தது. அதில் உடைந்து விழும் சாக்பீஸ்கலை எடுத்து கொண்ண்டு தண்ணீரில் கரைத்து பால் போல் வைத்து கொள்வோம் வீடு கட்டும் செங்கல்  தூள் சுவரை பெயர்த்து கொண்டு விழுந்திருக்கும். அதை சேகரித்து தண்ணீர் கலந்து டிகாக்சன் போல் வைத்து கொண்டு இரண்டையும் கலந்து பாட்டிலில் ஊற்றுவோம் அது காபி நிறத்துக்கு வந்து விடும் அதை வைத்து காபி விற்பது  போல் விளையாடுவோம் 

சமையல்  
வீட்டில் கிச்சனில் சமையல் பார்த்து அது போல் செய்ய ஆசைப்பட்டு அரிசி எல்லாம் எடுத்து போய் அடுப்பு பற்ற வைக்க முடியாமல் திணறி இருக்கிறோம் அதிலும் நான் எப்படியாவது ஒரு சாதமாவது செய்து பார்த்திட ஆசைப்பட்டு எப்படியோ முயற்சி செய்தும் அடுப்பு பற்ற வைப்பது என்ற ஒரு விஷயத்தால் முடியாமல் போய் விட்டது 

சினிமா காண்பித்தல் 
சினிமா அப்போது எனக்கு ஒரு ஆச்சரிய உலகமாக இருந்தது.இதை பற்றி நான் நிறைய சந்தேகங்கள் கேட்பேன். என் தாத்தா ஒரு பூத கண்ணாடியும்,கேமரா போல் இருக்கும் ஒரு பயாஸ் கோப்பும் வாங்கி கொடுத்தார். பிலிம்கள் கொடுத்திருப்பார்கள் அதை உள்ளே போட்டு படம் பார்க்கலாம். மேலும் நான் லென்ஸ் மூலம் ரூம் இருட்டாக்கி சுவற்றில் ஸ்லைடு போல் மாற்றி மாற்றி காண்பித்தேன் பற்பல படங்களின் பிலிம் துணுக்குகள் இருக்கும் அதையே ஒரு கதை போல் கோர்வையாய் கொண்டு வந்து படம் காண்பிப்பேன் இந்த விளையாட்டு பின் வேஷ்டி யை செவ்வக சட்டத்தில் ஒட்டி சுற்றிலும் கருப்பு கலர் பேப்பர் ஒட்டி முன் புறத்தில் சிறுவர்களை (பெரியவர்கள் கூட) அமர வைத்து பின் பக்கத்தில் படம் ஓட்டியிருக்கிறேன் 


* கிட்டி புள் நிறைய விளையாடி இருக்கிறோம். இதில் என்ன பிரச்னை என்றால் நாம் அடிக்கும் வேகத்தில் எதிரில் வரும் யார் மேலாவது பட்டு விடும்.பின் எங்கள் முதுகில் டின் கட்டுவார்கள் 

* திருடன் போலீஸ் விளையாடியிருக்கிறோம் (பெரும்பாலும் நான் தான் போலீஸ்) தெருவில் இருக்கும் எல்லோரது வீட்டிலும் சென்று ஒளிந்து கொள்ள  வேட்டையாடுவோம் 

 * என் தம்பி நாய் குரைத்து கொண்டே இருக்கிறது என்று கல் எடுத்து எறிய நாய் தப்பித்து விட எதிர் வீட்டு வாசலில் வைத்திருந்த பாத்திரத்தில் பட்டு அது சொட்டையாக அவர்கள் கத்த ஆரம்பிக்க நாங்கள் விழி பிதுங்கி நின்றது இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும் 

* வீட்டு ஹாலில் ஒரு கண்ணாடி அலமாரி இருக்கும் நான் விளையாட்டு உற்சாக மிகுதியில் தரச் லைட் டுக்கு போடும் பாட்டரி யை எடுத்து எறிய அது கண்ணாடியில் பட்டு கண்ணாடி உடைந்தது வாடகை 
வீடு என்பதால் ஹவுஸ் ஓனர் கண்ணாடி உடைபட்டதற்கு சார்ஜ் பண்ணினார்.எனக்கும் வீட்டில் அடி  பின்னி எடுத்தார்கள்

 * பல்லாங்குழி மற்றும் தாயகட்டை நிறைய விளையாடி யிருக்கிறேன். அதில் ஒரு பிரச்னை என்ன வென்றால் தோல்வி யை நெருங்கும் போது எரிச்சல் வரும்.இது தவறான ஒன்று. இதை நான் விரும்பவில்லை எனவே அந்த விளையாட்டை பாதியில் நிறுத்தி விட்டேன்.


* கோவிலிலிருந்து சுவாமி உலா வரும் பாருங்கள் அது போல் நானும் என் தம்பியும் சுவாமி போட்டோ வைத்து வண்டி செய்து சுவாமிக்கு அலங்காரம் செய்து சுவாமி புறப்பட்டு வீதி உலா வருவது போல் விளையாடி 
இருக்கிறோம் 

* மணலில் ஆளுக்கொரு இடம் எடுத்து கொண்டு பூங்கா அமைத்து அழகு படுத்தி இருக்கிறோம்.யார் அழகு செய்த பூங்கா நன்றாக இருக்கிறது என்று வீட்டில் உள்ள பெரியவர்களை அழைத்து காண்பித்திருக்கிறோம் 

இப்படியாக விளையாடிய பொழுதுகள், பத்தாவது படிப்புக்கு பின் நாங்கள் கும்பகோணம் வந்து விட்டதால், கதை புத்தகங்கள் சினிமா, நண்பர்களோடு சுற்றுதல் என்று மாறி விட்டது.காலங்கள் மாறினாலும்  விளையாடிய பொழுதுகளின் சுவடு மாறாமல் அப்படியே எனக்குள் பசுமையாய் இருக்கிறது.

இதெல்லாம் விளையாட்டா என்று கூட நீங்கள் நினைக்கலாம்.நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர்கள் விளையாட்டு பொருள்களை எதிர்பார்க்காமல் இருப்பதை வைத்து விளையாடி மகிழ்வது தானே 
சரியான ஒன்றாகும்.

FINAL PUNCH 

சிறு வயதில் நம்மில் விதைக்கபடுபவை தான் பின் விருட்சமாகும் என்பார்கள் .அது போல் எப்படியாவது ஒரு சாதம் வடித்து பார்த்து விடனும் என்று ஆசைப்பட்டவன், இன்று வேலைக்காக குடும்பத்தை விட்டு தனியே இருப்பதால் நானே தான் 3 வருடங்களாக சமைத்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் சமைக்க தானே ஆசைபட்டே இதோ நீ கேட்டது சலிக்கும் வரை சமைத்து விளையாடு என்பது போல் ஆகி விட்டது நிலைமை. எனது இன்னொரு விளையாட்டான சினிமா காண்பித்தல் தான் என்னை திரை உலகத்திற்குள்  நுழையும் அளவுக்கு என்னை 
தயார் படுத்தி கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் 

ஆர்.வி.சரவணன் 


படம் இணையத்திலிருந்து 

10 கருத்துகள்:

 1. என்னதான் முதுகில் டின் கட்டினாலும் விட மாட்டோம்லே...

  நீங்கள் சொல்வது போல் "எதை ஒரு முறையாவது என்று நினைக்கிறோமோ, அதுவே பலமுறை செய்யும் நிலை" எனக்கும் ஏற்பட்டதுண்டு...

  விரைவில் நாம் அவருடன் சந்திக்க வாய்ப்பு : http://vayalaan.blogspot.com/2014/04/blog-post_21.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப நன்றி தனபாலன் சார். கண்டிப்பாக சந்திப்பேன்...

   நீக்கு
 2. பால்ய கால நினைவுகள் எப்போதுமே இனிமைதான்!!

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் சொல்லிய சில விளையாட்டுக்கள் நானும் விளையாடியது உண்டு. சாமி ஊர்வலம், கோயில் கட்டுவது, சமையல், பல்லாங்குழி, பனை நுங்கு குதக்கையில் வண்டி இதெல்லாம் விளையாடியது உண்டு. இப்போது உள்ளது போல நிறைய விளையாட்டு பொருட்கள் கிடையாது. நடுத்தர குடும்பத்தினரால் வாங்கவும் முடியாது என்பது உண்மை! பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. அண்ணா...

  முதலில் எப்போதோ அழைத்ததை இப்போது நியாபகத்தில் வைத்து எழுதியமைக்கு மிக்க நன்றி.

  டயர் வண்டி, கிட்டிப்புல், திருடன் போலீஸ் என எல்லாவற்றையும் மீண்டும் நினைவில் மீட்டி விட்டீர்கள்.

  காபி வியாபரம் படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை... இது புதுமையான விளையாட்டுத்தான்....

  எழுத்தில் கலக்கும் நீங்கள் சினிமாவிலும் கலக்கும் காலம் வரும் அண்ணா...

  நாமே சமைத்துச் சாப்பிடும் போதுதான் வீட்டிலுள்ளவர்களின் கஷ்டம் தெரிகிறது. இருந்தாலும் நாம் சமைத்து சாப்பிடுவதில் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது....

  தொடர் பதிவை மறக்காமல் எழுதியதற்கு மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. மனதை தொட்ட பதிவுகள்....தொடர வாழ்த்துக்கள் நண்பரே!!

  பதிலளிநீக்கு
 6. விளயாட்டுப்பருவத்தில் விளயாட்டு வயதில் தாங்கள் விளையாடின விளாட்டுக்கள் வித்தியாசமாய் இருந்ததை, சுவாரஸ்யமாய் பதிவில் வழங்கினீர்கள். அருமை!

  பதிலளிநீக்கு
 7. இளமைக் கால நினைவுகள் என்றுமே இனியவைதான்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்