புதன், ஜூலை 09, 2014

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்


முதலில் நண்பர் கேபிள் சங்கர் அவர்களுடன் என் அறிமுகம் பற்றி பார்ப்போம். ஆனந்த விகடனில் ப்ளாக் எழுதுபவர்களை பற்றி ஒரு பகுதி ஆரம்பித்தார்கள். அதில் முதலில் இடம் பெற்றவர் கேபிள் சங்கர். அதை படித்த போது தான் அவரை பற்றி முதன் முதலாக தெரிந்து கொண்டேன். 

முதல் முறை பதிவர் திருவிழா 2012 இல் தான் அவரை நான் சந்திக்க நேர்ந்தது.அவர் நீங்க என்றவாறு  கேள்விகுறியுடன் எனை பார்க்க, நான் இப்படி பதிலளித்தேன்.நீங்க இப்ப இருக்கிற இடத்துக்கு வர முயற்சி பண்ணிட்டு இருக்கும் ஒரு சாதாரண மனிதன் என்று.இப்படி சொன்னவுடன் கேள்வி அகன்று போய் அவர் முகத்தில் சந்தோஷம் மின்னியது. என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க என்று சொன்னதுடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள் என்றும் சொன்னார். அடுத்து புத்தக கண் காட்சியில்  
சந்தித்த போது அவரது ப்ளாக் தொடர்ந்து படித்து வருவதையும் முகநூளில் தொடர்வதையும்  சொன்னேன். அவர் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருவது எனக்கு பிடித்த ஒன்று. 

எனக்கு எப்போதுமே ஒருவரின் அறிமுகம் கிடைத்தால்  அவரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முயற்சிப்பேன். அந்த வகையில் அவர் எழுதிய மீண்டும் ஒரு காதல் கதை, சினிமா வியாபாரம்,கொத்து பரோட்டா  
புத்தகங்களை வாங்கினேன்.சினிமா வியாபாரம் புத்தகம் படித்தேன்.
அதில் சினிமா வியாபாரம் பற்றி கரைத்து (குடித்திருக்கிறார் ) கொடுத்திருக்கிறார் 

மீண்டும் ஒரு காதல் கதையில் தனக்கு படம் இயக்கும் எண்ணம் இருப்பதை தெரிவித்திருப்பார்.

கொத்து பரோட்டா உண்மையாகவே கொத்தி போட்ட பரோட்டா தான் அதை படித்த பின் பரோட்டாவுக்கு (பதிவுக்கு) ரசிகன் ஆனேன்.

எனது நாவல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அழைத்த போது அவர் பட வேலையில் பிஸி என்பதால் நேரமிருப்பின் அவசியம் கலந்து கொள்கிறேன் என்று வாழ்த்தி  பதில் அனுப்பினார்.
 அவர் தொட்டால் தொடரும் படம் தொடங்கியது முதல் படம் 
பற்றிய செய்திகளை தொடர்ந்து ஆர்வமுடன் கவனித்து வந்தேன். 
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  பற்றிய அறிவிப்பு  வந்த போது 
எனக்கு விழாவுக்கு செல்லும்  ஆர்வம் வந்தது.இதற்கு ஏதேனும் அனுமதி சீட்டு உண்டா எப்படி எங்கு  யாரை கேட்பது என்ற யோசித்ததில் அவரையே கேட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்து  அவருக்கு மெசேஜ் அனுப்பி கேட்டேன்.  அவர் தாராளமா வாங்க  என்று  பதில் அனுப்பினார்.
பதிவுலக நண்பர்கள் சிவகுமார்  மற்றும் பாலகணேஷ் இருவரையும் தொடர்பு கொண்ட போது காலை ஏழரை மணிக்கு வந்து விடுங்கள் என்று சொன்னார்கள். நான் வந்து கொண்டிருக்கையில் ஸ்கூல் பையன் சரவணன் எங்கே சார் இருக்கீங்க என்று போன் அடித்தார்.பத்து  நிமிடத்தில் உங்கள் அருகே வந்து விடுவேன் என்றேன் . 8 மணிக்கு சத்யம் தியேட்டர் வந்தேன். ஸ்கூல் பையன் சரவணன் மற்றும் கே.ஆர்.பி செந்தில் சிவகுமார் பாலகணேஷ் உடன் பேசி கொண்டிருந்த போது சுரேகா சார் வந்தார். எல்லோரும் ஒரே வரிசையில் அமர்ந்தோம். விழா (தாமதமாக) தொடங்கியது.


விழாவில் கலந்து கொண்ட கே.ஆர் பேசுகையில்
ஐந்து  படங்கள் தயாரித்தும் தயாரிப்பாளர் முகத்தில் தெரியம் புன்னகை சந்தோசமான விஷயம் இது தொடர வேண்டும் என்று பாராட்டினார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேசும் போது தானே படம் தயாரிக்க ஆசைப்பட்டு கேபிள் சங்கரிடம் பேசிய போது அவர் விவரித்ததில் 
படம் தயாரிக்காமல் தப்பித்து விட்டதை குறிப்பிட்டார்.

இயக்குனர் பத்ரி பேசும் போது கேபிள் சங்கர் நிறைய விசயங்களை தொட்டிருக்கிறார்.அவற்றை தொடர்ந்து கொண்டும் இருக்கிறார். இந்த முயற்சியும் வெற்றி பெறும் என்பதுடன்,தனது  அடுத்த படமான ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் கேபிள் சங்கர் நடித்திருப்பது பற்றி குறிப்பிட்டார் (தகவல் வெளியிட்டார்) 

தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் பேசும் போது  விழா 8.30 மணிக்கு என்பதால் அப்போதே வந்து விட்டதை பற்றி குறிப்பிட்டு இது விழாக்களில் சகஜம் தான்  என்று குறிப்பிட்டார் 

இசையமைப்பாளர் பி.சி.சிவன் நிறைய பேரை மேடையில் குறிப்பிட்டு
பேசினார்.சீக்கிரம் பேசி முடிங்க என்ற வேண்டுகோள் மீறி பேசினாலும் 
அவர் வார்த்தைகளில் நெகிழ்ச்சி எட்டி பார்த்தது.  

கதாநாயகி அருந்ததி பாஸு பாடல் பற்றி குறிப்பிட்டு கேபிள் சங்கரை பாராட்டினார்

ஹீரோ தமன் ரொம்ப சிம்பிளாக மேடையோரம் கேபிள் சங்கருடன் பேசியவாறு இருந்தார். எனக்கு அவரை அங்கே பார்க்கும் போது, இந்த படம் ஹிட் ஆகிய பின் அவரே நினைத்தால் கூட அப்படி ஓரமாய் நிற்க முடியுமா நிற்க தான் விடுவார்களா என்று பரந்த விரிந்த என் கற்பனை யை இழுத்து நிறுத்தினேன். ( கற்பனை தான் எனினும் உண்மையாகட்டுமே) 

இசையமைப்பளர் சந்தோஷ் நாராயணன் பேசும் போது தனது அட்ட கத்தி சாங் நன்றாக இருக்குனு சொன்னவர் பீட்சா பட சாங் நல்லாயில்ல என்று என்னிடம் சொன்னதோடு மட்டுமில்லாமல் கூடவே ஆன் லைனிலும் அதை போட்டுட்டார் என்றதோடு இந்த படத்தை அவரே நல்லா இருக்குனு எழுதற அளவுக்கு படம்   இருக்கும் என்றார் 
கே.ஆர். இசை தட்டை வெளியிட ஏ .எம் . ரத்னம் பெற்று கொண்டார். விழாவில் முன்னதாக படத்தின் ட்ரைலர் மற்றும் மூன்று பாடல்கள் திரையிடப்பட்டது. 

விழா முடிந்த பின் நாங்கள் எழுந்து கிளம்ப தயாரானோம். கேபிள் சங்கர்  அவர்களை பார்த்து வாழ்த்துக்கள் சொல்ல நினைத்தேன்.இருந்தும் அவர் மேடையில் பிஸி யாக இருந்ததால் அவரை தொந்தரவு செய்ய கஷ்டமாகவும்  இருந்தது.இருந்தும் விழாவுக்கு வந்து விட்டு ஒரு வாழ்த்து  கூட சொல்லாமல் செல்லவும்  மனது இடம் கொடுக்கவில்லை. 
எனவே சரி என்று மேடைக்கு அருகே சென்று கீழே நின்ற படி அவரை அணுகினேன். கை குலுக்கி வாழ்த்து  சொன்னேன். கூடவே அவருடன் நின்றிருந்த ஹீரோ தமனுக்கும் கை குலுக்கி வாழ்த்து சொன்னேன். சத்யம் தியேட்டருக்கு இது வரை படம் பார்க்க மட்டுமே சென்றிருக்கிறேன். ஒரு ஆடியோ விழாவுக்கென்று சென்றது இது தான் முதல் முறை  

படம் பற்றிய தகவல்கள் 

இந்த படத்தின் கதாநாயகன் தமன்,கதாநாயகி அருந்ததி, ஹலோ எப்.எம் பாலாஜி, வின்சென்ட் அசோகன் போன்றாரும் நடித்திருக்கும் இந்த படம் 
ஒரு ரொமாண்டிக் த்ரில்லர்.பி.சி.சிவன் இசை அமைக்க நா .முத்துக்குமார் 
மற்றும் கார்க்கி பாவா கேபிள் சங்கர் பாடல்கள் எழுத விஜய்ஆர்ம்ஸ்டராங்க் 
ஒளிப்பதிவில்   FCS கிரியேசன்ஸ் சார்பில் துவார் சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். கேபிள் சங்கர் எழுதி இயக்கியிருக்கிறார்.பாடல்கள் டைகர் ஆடியோ வெளியிட்டிருக்கிறது.

தொட்டால் தொடரும் படத்தின் ட்ரைலர்  http://t.co/k8Tocf3AIx


பாடல்கள் பற்றிய என் பார்வை சில வரிகளில் 

பாஸு பாஸு 

இப் பாடல் இணையத்தில் ஆடியோ வெளியீட்டிற்கு முன்னரே வெளியாகி முன்னணியில் இருக்கிறது. இந்த பாடல் பற்றி நான் முகநூலில் குறிப்பிட்டிருந்ததை இங்கே தருகிறேன் இயக்குனர் Cable Sankar ன் தொட்டால் தொடரும் பட பாடலான யாருக்கும் ஈவு இல்ல இரக்கம் இல்ல பாஸு பாஸு பாடல் சிவனின் இசையை தொட்டு கொண்டு கார்க்கி பாவா மற்றும் கேபிள் சங்கரின் வரிகளில் நாட்டின் அவலங்களை விளாசியிருக்கிறது. ஒரு வரி கேட்டவுடன் அடுத்த வரி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடுகிறது. உதாரணத்திற்க்கு ஆரம்ப வரியையே எடுத்து கொள்வோமே. யாருக்கும் ஈவு இல்ல இரக்கம் இல்ல பாஸு பாஸு என்று சாடலுடன் ஆரம்பமாகி, எல்லார்க்கும் வேலை வெட்டி இருக்குதாம்பா என்ற சலிப்புடன் அடுத்த வரிக்கு தாவுகிறது. எப்படி ? வேலைக்கு லீவு விட்டால் இரக்கம் வருமா பாஸு பாஸு என்ற வரிகள்  நக்கலுடன் கெஞ்சலையும்  குழைத்து கொள்கிறது. இப்படியான வரிகள் தான் பாடலெங்கும் சமுதாய அவலத்தை தொட்டு பாடல் முழுக்க தொடர்கிறது.பாடலை கேட்டு முடித்த பின் பாடலின் இடையே நான்கு பேர் கோரஸ் பாடும் ஹோ ஹோ என்பது போல் நம்மையும் சொல்ல வைக்கிறது என்றால் அது மிகையல்ல. தொட்டால் தொடரும் படத்தின் பீவரை ஆரம்பித்து வைத்திருக்கும் இந்த பாடல் படத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல ஒப்பனிங்.


பெண்ணே பெண்ணே 

எனக்கு மேலோடி சாங் எப்போதுமே ரொம்ப பிடிக்கும் உதாரணமாக ரஜினி ஷங்கர் படங்களில் ஏதாவதொரு மெலடி சாங் கண்டிப்பாக இருக்கும். அவர்கள் பட ஆடியோ வெளி வரும் போது இதை கவனிப்பேன். இந்த படத்தில் மனதை மயக்கும் மெலடிக்காக ஆர்வமாய் காத்திருக்க,
பெண்ணே பெண்ணே என்ற இந்த மெலடி  பாடல் ஏனிந்த மயக்கம் 
என்ற கேள்வியுடன் என் இப்போதைய ஹம்மிங்காக இருக்கிறது.  

யாருடா மச்சான் 

இந்த பாடலில் ஒலிக்கும் குரல்களின் இனிமை எனை கவர்ந்தது. இப் பாடலில் ஒரு வரி வருகிறது. உன்னை ஒரு முறை பார்த்தால் ஒரு நாள் ஆயுள் கிடைக்கும் என்று. இந்த பாடல் கேட்கும் போது மீண்டும் ஒரு முறை கேட்கும் ஆர்வம் நமக்கு போனசாக கிடைக்கும்.

பூ போல பூ போல  

இந்த பாடல் கொஞ்சம் பாஸ்ட் ஆக இருந்தாலும் இதில் வரும் சரணங்களின் ராகம் எனக்கு பிடித்திருக்கிறது.  

kiss of the fate 

இசையமைப்பாளர் பாடியுள்ள இரண்டு நிமிட பாடல் இது 


நல்லதொரு விமர்சகராக ஹிட் அடித்த  கேபிள் தன் முதல் படமான இதிலும் ஹிட் கொடுக்க வேண்டும்.  எவ்வளவு உயரம் சென்றாலும் அவரது  சிம்பிளாக பழகும் இந்த தன்மையும் தொடர வேண்டும்.

FINAL PUNCH 

சொல்றது எல்லாம் சொல்லிட்டே இன்னும்  என்ன இருக்கு னு கேட்றீங்களா சொல்றேன். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும் போது  வீடியோ ஷாப் நடத்தி கொண்டிருந்த ராம்கோபால் வர்மா படங்கள் பார்த்து கற்று கொண்டு இன்று பெரிய இயக்குனர் ஆகியிருக்கிறார்  என்றும் கே.ஆர்  பேசும் போது  ஏற்கனவே இவர் பெயரில் ஒரு பெரிய இயக்குனர் சங்கர் இருக்கிறார் என்றும் மேற்கோள் காட்டி அது போல் இவர் வெற்றி பெற வேண்டும் என்றும் பேசினார்கள்.  

இனி வர போகும் புது இயக்குனர்களுக்கு உதாரணமாக யாரையேனும் குறிப்பிட வேண்டும், மேற்கோள் காட்ட வேண்டும் என்றால்  கேபிள் சங்கரை குறிப்பிட வேண்டும்  என்று ஒரு நண்பராக விரும்புகிறேன். வாழ்த்துகிறேன் 

 படங்கள் சத்யம் அரங்கில் நான் க்ளிக்கியது 

ஆர்.வி.சரவணன் 

22 கருத்துகள்:

 1. சிறப்பான பகிர்வு அண்ணா.
  சென்னையில் இருப்பது இது போன்று நண்பர்கள் கிடைக்க அரிய வாய்ப்பு...
  கேபிள் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அருமையா பதிவு செஞ்சுட்டீங்க.. நாயகி அருந்ததி குறிப்பிட்டது "யாருடா மச்சான்" பாடலை அல்லவா? வீடியோவில் பார்த்தேன்.. :)

  பதிலளிநீக்கு
 3. கேபிள் சங்கர் அவர்களின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. கோவை ஆவி, யாருடா மச்சான் பாடலை பற்றி அவர் குறிப்பிட்டது ஒளிப்பதிவாளர் இந்தப் பாடலில் தன்னை அழகாக படம் பிடித்திருக்கிறார் என்பதற்காக.

  பதிலளிநீக்கு
 5. நன்றி குமார்
  நன்றி கோவை ஆவி
  நன்றி ஜெயக்குமார்

  பதிலளிநீக்கு
 6. கேபிள் சங்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  உங்களின் எண்ணமும் ஒருநாள் நிறைவேறும்...

  பதிலளிநீக்கு
 7. விழாவின் நேரடி வர்ணனைப் போல் இருக்கிறது உங்கள் பதிவு ,பாடல்களைப் பற்றியும் அலசி ஆராய்ந்து காயப் போட்டு விட்டீர்கள் !
  கேபிள் சங்கர் அவர்களின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்கூறும் அதே நேரத்தில் ,அடுத்த கேபிள் சங்கராய் மாற உங்களுக்கும் வாழ்த்துக்கள் !
  உங்களுக்கான என் நன்றி ,காண்க >>>http://www.jokkaali.in/2014/07/blog-post_8.html
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பாடல்கள் எனக்கு பிடித்த விதத்தை பற்றி மட்டும் தான் சொல்லியிருக்கிறேன். மேலும் கேபிள் எங்கே நான் எங்கே அவர் அளவுக்கு எல்லாம் என்னால் வர முடியாது நன்றி பகவான்ஜி

   நீக்கு
 8. //படங்கள் சத்யம் அரங்கில் நான் க்ளிக்கியது /

  தயாரிப்பாளர் தியேட்டரில் கேபிள் சங்கருக்கு செக் தந்தாரா!! :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும்.தயாரிப்பாளர் மற்றும் கேபிள் சங்கர் இருக்கும் படம் தவிர மற்றவை எனது கிளிக்ஸ்

   நீக்கு
  2. //தயாரிப்பாளர் தியேட்டரில் கேபிள் சங்கருக்கு செக் தந்தாரா!! :))// ஓவ் இதெல்லாம் ஓவர் ஆமா...

   நீக்கு
 9. தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் மற்றும் கேபிள் சங்கர் படம் , திரைப்படம் ஆரம்பித்த புதிதில் வெளியானது.இயக்குனரின் முக நூலில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 10. சரவணன் சார்! நல்ல அருமையான தொகுப்பு! கேபிள் சங்கர் அவர்களின் படம் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்கள்! கேபிள் சங்கரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், பாலகணேஶ் சார் அவர்கள் அவரது வலைத்தளத்தில் கேபிள் சங்கரைப் பற்றிக் குறிப்பிட்டு படத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் உடன் கேபிள் சங்கரின் வலைத்தளம் பார்த்து அறிந்து கொண்டோம், தொடர்கின்றோம். ஆவியும் இசை பற்றிக்குறிப்பிட்டிருந்தார்...பார்த்தால் தாங்கள் இசை வெளியீட்டு விழாவையே நேரில் கண்டு தொகுத்தும் விட்டீர்கள் பாடல்கள் குறித்தும் நல்ல ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள்! பாடல்கள் இனிதான் கேட்க வேண்டும்! படம் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்!

  தங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி சார்! நாங்களும் நேரில் பார்த்தது போல இருந்தது சார்!

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 11. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! சிம்பிளான மனிதர் என்பதை படங்களே உணர்த்துகிறது! நன்றி!

  பதிலளிநீக்கு
 12. பதிவுலகத்தில் இருந்து முதல் இயக்குனராக அடி எடுத்து வைத்துள்ள கேபிளுக்கு பாராட்டுக்கள். ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாழ்த்திய உங்களுக்கும் பாராட்டுக்கள். வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. கேபிள் சங்கர் அவர்களின் படம் வெற்றி பெற எனது வாழ்த்துகளும்..

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்