வியாழன், அக்டோபர் 13, 2011

ஒரு கிளைமாக்ஸ் காட்சி....ஒரு கிளைமாக்ஸ் காட்சி....


நான் எழுதிய ஒரு கதையின் கிளைமாக்ஸ் பற்றி இந்த இடுகையில் சொல்கிறேன். அதாவது கதையின் முடிவில் நான் வருவதாக எழுதியிருந்தேன் (இந்த கதை நான் பத்து வருடங்களுக்கு முன் எழுதியது)

இந்த கதையில் ஹீரோ ஹீரோயின் மேல் அதீத காதல் கொண்டு நல்லது பல செய்வார். ஹீரோயினின் நோயை குணமாக்கி அவரது வாழ்க்கையையே மீட்டு கொடுத்திருப்பார். இது எதுவும் ஹீரோயினுக்கு தெரியாது. ஹீரோயினுக்கு தான் விரும்பிய பையனுடன் திருமணம் என்று நிச்சயமான சூழ்நிலையில் ஹீரோ வெறுத்து போய் வெளிநாடு சென்று செட்டில் ஆகி விடலாம் என்று கிளம்புவார்.

அப்போது அவர் நண்பனாக நான் கதையில் (நுழைவேன்) வருவேன் " உன்னை நானே ஏர்போர்ட்டில் ட்ராப் பண்றேன் " என்று சொல்லி அவரை அழைத்து செல்வேன். ஹீரோயின் க்கு அப்போது தான் ஹீரோவின் தியாகம்
பற்றியும் ,தான் விரும்பிய பையனின் நடத்தை பற்றியும் தெரிய வரும். விஷயம் தெரிய வந்தவுடன் ஹீரோவை தடுத்து நிறுத்த கிளம்பி வருவார்.

இதற்கிடையில், உன்னை விரைவாக கொண்டு போய் சேர்த்து விடுகிறேன் பார் என்று சொல்லி நான் குறுக்கு வழியில் ஹீரோவை அழைத்து செல்வேன். அந்த வழியில் நடந்த ஒரு விபத்தால் நாங்கள் டிராபிக்கில் மாட்டி கொள்ளும் சூழ்நிலை உருவாகும். ஹீரோ என்னை பார்த்து கடுப்படிப்பார். பின் ரூட் சரியானவுடன் கிளம்பலாம் என்று பார்த்தால் நான் விரலில் வைத்து சுற்றி கொண்டிருந்த கார் சாவி எங்கேயோ புதரில் சென்று விழுந்து விடும் . ஹீரோ என்னை திட்டி கொண்டே என்னுடன் சேர்ந்து கொண்டு சாவியை தேடுவார்.சாவி கிடைத்து நாங்கள் சென்று சேரும் போது விமானம் கிளம்பியிருக்கும் ஹீரோ என்னை கோபத்தில் அடிக்க ஓடி வர நான் நழுவ, அந்த நேரம் பார்த்து ஹீரோயின் அங்கு பதட்டத்தில் வருவார்.

ஹீரோ வை பார்த்ததும் ஆச்சரியத்தில் வேகமாய் வந்து கட்டி பிடித்து கொண்டு அழுவார் . ஹீரோ பரவசமாய் அணைத்து கொண்டு ஹீரோயின் தலையை தடவி கொடுப்பார்

அந்த நேரம் நான் ஹீரோவை பார்த்து , " நான் வந்த வேலை முடிஞ்சிடுச்சு வரட்டா " என்று கை அசைப்பதோடு கதை முடியும்.

இது எப்படி இருக்கு


இதை எதற்கு சொல்கிறேனென்றால் வரும் தீபாவளி முதல்
நம் குடந்தையூர் தளத்தில் இளமை தொடர்கதை ஒன்று எழுதலாம் என்று
முடிவு செய்திருக்கிறேன் .


அதற்காக தான் என் கதைகளில் ஒன்றில் வரும் கிளைமாக்ஸ் காட்சியை இங்கு உதாரணத்திற்கு தந்திருக்கிறேன்

உங்கள் ஊக்கமும் ஆதரவும் இருந்தால் மட்டுமே எனது இந்த தொடர்கதை முயற்சி வெற்றி பெறும் என்பதையும் உங்களுக்கு அன்புடன் நினைவு படுத்துகிறேன்

ஆர்.வி.சரவணன்

19 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் நிச்சயம் எழுதுங்கள்...

  பதிலளிநீக்கு
 2. எழுதுங்கள் நண்பரே வாசிக்க வருகிறேன் ,எனக்கு கதைன்ன மிகவும் பிடிக்கும் .

  பதிலளிநீக்கு
 3. பின்னுட்டம் 2.
  கதையின் க்ளைமாக்ஸ் நன்றாயிருப்பதால்... புதுக் கதை தொடங்குங்கள்

  பதிலளிநீக்கு
 4. உங்களின் பயணத்தோடு நாங்கள் தொடர ஆவலாக உள்ளோம் ..
  தொடருங்கள் சார் ..
  முன் வாழ்த்துக்கள் சார் கதைக்கு

  பதிலளிநீக்கு
 5. கட்டாயம் எழுதுங்கள்... காத்திருக்கிறோம்!

  பதிலளிநீக்கு
 6. கதை கேட்க நாங்க ரெடி;கதை சொல்ல நீங்க ரெடியா?!!!!

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள் நிச்சயம் எழுதுங்கள்...

  பதிலளிநீக்கு
 8. கதை பிடிச்சிருக்கு ...........
  தொடர்ந்து எழுதுங்கள் நண்பா

  பதிலளிநீக்கு
 9. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி கலாநேசன் எழுதுகிறேன்

  பதிலளிநீக்கு
 10. படிக்க என்னை ஊக்கபடுத்த வாருங்கள் எம்.ஆர் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 11. நிஜத்தில் எனக்கு கார் ஓட்ட தெரியாது நிசாமுதீன் உங்கள் வருகைக்கு நன்றி தொடர்கதை தொடங்குகிறேன்

  பதிலளிநீக்கு
 12. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அரசன்

  பதிலளிநீக்கு
 13. உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி மாதவி கட்டாயம் எழுதுகிறேன்

  பதிலளிநீக்கு
 14. உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி தென்றல் சரவணன் கதை சொல்ல நான் ரெடியாகி கொண்டு இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 15. உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி மாலதி

  பதிலளிநீக்கு
 16. உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி பவி

  பதிலளிநீக்கு
 17. கற்பனை வளம் இருக்கிறது
  எழுதும் திறன் இருக்கிறது
  தொடர்பவர்கள் அதிகம் இருக்கிறோம்
  அவசியம் தொடர்கதையை துவங்குங்கள்
  தொடர்ந்து வருகிறோம்.
  தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்