ஞாயிறு, டிசம்பர் 16, 2012

இளமை எழுதும் கவிதை நீ-16


இளமை எழுதும் கவிதை நீ-16
என் மனது ஆசை எனும் அலைகளால் சூழ்ந்திருக்க 
நீ மட்டும் ஆழ் கடல் அமைதியில் கீதாவுக்கு, தனக்கு கல்யாணம் நடக்கிறது என்பதை நினைத்தாலே ஆச்சரியமாய்  இருந்தது. அதுவும் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போதே திருமணம் என்பது கொஞ்சம் கூச்சத்தையும் தந்தது 

 சிறு வயது முதல் கார்த்திக் உனக்கு தான் என்று பெற்றோர் முதல் உறவினர் வரை அனைவரும் பால பாடம் போல் அவள் மனதில் பதித்து விட்டனர். அவளது அத்தைக்கு பெண் குழந்தை யின்  மேல் ஆவல் இருந்தும் அவருக்கு பிறந்த இருவருமே பையன்கள் என்பதால், தன் தம்பிக்கு பிறந்த கீதாவை தன்
பெண் போல் பாசத்துடன் கவனித்து கொண்டார்.வீட்டில் மாப்பிள்ளை
 இருக்க  எதற்கு வேறு இடத்தில கொடுப்பது என்பதாலும் அவளை பிரிய வேண்டியிருக்குமே என்பதாலும்  தன் சின்ன பையனுக்கு கீதாவை மணம் முடித்து விட வேண்டும் என்றும் சொன்னார்.  அவர் பேச்சுக்கு அங்கே மறுப்பேது. சோ கார்த்திக் கீதா திருமணம் சிறு வயதிலேயே நிச்சயிக்க பட்ட ஒன்றாயிற்று.

தொடரும்

ஆர்.வி.சரவணன்

The story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

7 கருத்துகள்:

 1. திருமணத்திற்கு சிவா செல்வானா என்பது எதிர்பார்க்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. இன்ஸ். ஜெயச்சந்திரன் மிரட்டுவதைப் பார்த்தால், சிவாவுக்கு ஆபத்து வருமோ என்று படபடப்பாயிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. சிவா வருவானா ? ஆவலுடன் நானும் வழக்கம் போல முதல் இரண்டுவரிகள் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 4. அருமை...
  தொடருங்கள்...
  பகிர்வு ரொம்ப நீளமாக இருக்கிறதே.... இதையே இரண்டு அத்தியாயமாக ஆக்கியிருக்கலாமே.

  பதிலளிநீக்கு
 5. ஆந்திரா மிளகாய் மாதிரி இருந்த சிவா நம்ம ஊர் தயிர் சாதம் மாதிரி ஆகிட்டாரே! :-) ரமணிச்சந்திரன் கதைகளில் இது போல கதாப்பாத்திரங்களை படித்து இருக்கிறேன்.

  தொடருங்கள்..

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்