புதன், டிசம்பர் 12, 2012

நான் ரசிக்கும் ரஜினி....

நான் ரசிக்கும் ரஜினி....
ஒரு பத்திரிகை நிருபரின் கேள்விகளுக்கு ரஜினி ரசிகனான 
நான் சொன்ன பதில்கள் இவை நீங்கள்  பார்த்த முதல் ரஜினி படம் ?

நான் சிகப்பு மனிதன்

ஈர்த்த படம் ?

மாப்பிள்ளை

பரவசப்படுத்திய படம் ?

ஸ்ரீ ராகவேந்திரர் 

முழு ரசிகனாக ஆனது ?

அண்ணாமலை

ரஜினியின் நடிப்பில் கவர்ந்தது ?

அவரது ஸ்டைல் நகைச்சுவை மற்றும் அதிரடி 

நிஜத்தில் ரஜினியிடம்  கவர்ந்தது ?

அவரது எளிமை, தன்னடக்கம்,விளம்பரமில்லாமல் செய்யும் உதவிகள் 

பார்க்க சலிக்காத   படங்கள் ?

 தில்லு முள்ளு, மாப்பிள்ளை, பாட்சா , சந்திரமுகி, எந்திரன்

தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற வித்தியாசமான அனுபவம் ?

எந்திரன் படம் காலை ஏழு மணி காட்சி  குடும்பத்துடன் சென்று பார்த்தது 

பிடித்த பஞ்ச் டயலாக்  ?

நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி

ரொம்ப பிடிச்ச காட்சி ?

பாட்சா படத்தில் தன் தங்கை யுவராணியை மெடிக்கல் காலேஜில் சேர்க்க ரஜினி பேசும் காட்சி ?


பிடித்த சண்டை காட்சி ?

தளபதி படத்தில் வரும் காட்சிகள் 

பிடித்த காமெடி காட்சி ?

மன்னன் படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் காட்சி


அவரிடம் நீங்கள் கற்று கொண்டு கடைப்பிடிப்பது ?

நம்மால் யாருக்கும் எந்த நஷ்டமும் கஷ்டமும் வர கூடாது என்ற கொள்கை

அவரிடம் பெற்ற ஏமாற்றம் ?

அவர் 1996 ஆம் வருடம்  அரசியலுக்கு வராதது

ஆசை ?

அவருடன் சில வார்த்தைகளாவது  பேசி ஒரு போட்டோ  
எடுத்து கொள்ள வேண்டும்

அவருடன் ஜோடியாக நடித்த நடிகைகளில்  எந்த பட ஜோடி பிடிக்கும் ?

அப்போது, மாப்பிள்ளை ரஜினி அமலா ,

இப்போது, எந்திரன் ரஜினி ஐஸ்வர்யா ராய் 

நீங்க அவருக்காக எழுதிய பஞ்ச் டயலாக் ?

கெட்டது ஒடுக்க தன்னாலே வருவேன்
நல்லது நடக்க என்னையே தருவேன்

அவர் போட்ட கெட்டப் களில் உங்களுக்கு பிடித்தது ?

வேட்டையன் 

நீங்கள் பெருமைபடுவது ?

ரஜினியுடன்  செல் போனில் பேசுவது போன்று நான் எழுதிய பதிவிற்கு ரஜினி ரசிகர்கள் பாராட்டியது, "ஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....":


அவரை ரசிப்பதால் உங்களுக்கு வந்த கஷ்டம் ?

என்னை சுற்றியுள்ளவர்களின் மற்றும் அவரை பிடிக்காதவர்களின் கேள்வி கணைகள் மற்றும் கேலி

அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது ?

நீங்கள் விரும்புவதை நான் எப்படி கேலியோ விமர்சனமோ செய்ததில்லையோ நீங்களும் செய்ய வேண்டாம் என்பதே

பிடித்த காதல் பாடல் ?

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

அடிக்கடி ஹம் செய்வது ?

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் 

அவர் இனி என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்  ?

எப்போதும், சமுதாய பணிகளை  முன்னின்று செய்து   ஒரு முன்னுதாரண

மனிதராக  ஆக வேண்டும்


இப்போது, பாட்சா படம் போல் நச்சென்று ஒரு சூப்பர் ஹிட் படம் நடிக்க  வேண்டும்

நீஙகள் என்ன செய்ய ஆசைபடுகிறீர்கள் ?

எப்போதும், மாற்று திறனாளிகளுக்கு வாழும் வரை  நான் உதவ வேண்டும் 

இப்போது, சிவாஜி 3 D படம் பார்க்க கிளம்பி கொண்டிருக்கிறேன்FINAL PUNCH 

ஒரு பத்திரிகை நிருபர் ரஜினி ரசிகனான என்னிடம் ரஜினி பற்றி கேட்டால் 
என் பதில் எப்படி இருக்கும் என்று கற்பனையாக யோசித்ததின் விளைவு 
இந்த பதிவு (பதில்கள் நிஜம்) 

ச்சும்மா அதிருதில்லேஆர் .வி.சரவணன் 


5 கருத்துகள்:

 1. சூப்பர்..நிஜமாவே அதிருது ..அசத்திடீங்க சார் .

  பதிலளிநீக்கு
 2. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
  //

  எனக்கும் பிடிக்கும் சார்

  பதிலளிநீக்கு
 3. சரவணன் நான் கூட நிஜமாலுமே நீங்க பேட்டி கொடுத்தீர்களோ என்று நினைத்தேன் :-) நன்றாக இருந்தது

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்