செவ்வாய், பிப்ரவரி 14, 2012

வாழும் வரை காதலோடு....


வாழும் வரை காதலோடு....


அன்பே உனை பார்க்கும் வரை என் பொழுதே போகவில்லை
பார்த்த பின்னோ என் பொழுதே போதவில்லை


பிரம்மன் உனை மிக அழகாய் படைத்திருக்கிறான் இருக்கட்டும்
என்னை படைத்தது உனக்காக தானா ?


அன்பே உன் சொந்தங்களை கொண்டு நீ எனை கூறு போட்டாலும்
என் ஒவ்வொரு கூறும் உன் பெயர் சொல்லுமே


உன் கண்ணீர் துளியை கூட தாங்கும் வலிமை
இல்லாதது என் கருங்கல் இதயம்


என் உடலின் அனைத்து செல்களுக்கும் செவி முளைத்தது
உன் சொல்லை கேட்பதற்காகவே


என் வெற்றிக்கு நான் அடையும் மகிழ்ச்சியெல்லாம்
உன் வெற்றி எனக்கு தரும் மகிழ்ச்சிக்கு ஈடாகுமா


நான் எழுதி வரும் இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதையில்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் வரிகள் இவை


சென்ற வருடம் நான் எழுதி வெளியிட்ட காதலர் தினம் சிறுகதை இதோ

http://kudanthaiyur.blogspot.in/2011/02/blog-post_14.html

ஆர்.வி.சரவணன்

6 கருத்துகள்:

 1. எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கும்போது ஒரு அருமையான காதல் பாடல் வந்து விட்டது....

  பதிலளிநீக்கு
 2. பாராட்டுக்கள்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  பதிலளிநீக்கு
 3. குறுங்கவிதைகள் அனைத்தும் இன்று நெடுங்கவிதைகளாய் ... எல்லாத்தையும் ஒன்று சேர்த்து படிக்கும்போது
  இன்னும் சிறப்பா இருக்கின்றது .. வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
 4. விருது ஒன்று உங்களோடு பகிர்ந்துள்ளேன் .. நேரம் இருப்பின் வருகைதாருங்கள் .. நன்றி
  http://karaiseraaalai.blogspot.in/2012/02/blog-post_16.html

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்