வெள்ளி, பிப்ரவரி 17, 2012

நான் சொல்வது யாதெனில்....
நான் சொல்வது யாதெனில்....
(கோச்சடையான் + நீ தானே என் பொன் வசந்தம் + நண்பன் + மின்வெட்டு + ரயில் பயணம்)

கோச்சடையான் ஸ்டில் பார்த்து விட்டு எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்திருக்கிறது என்றால் அது மிகையில்லை பிடித்த படம் தியேட்டரில் சென்று அமர்ந்து பார்க்கும் போது முக்கியமான கட்டம் வரும் போது நாம் உட்கார்ந்திருக்கும் சீட்டில் இன்னும் சரியான படி அமர்ந்து ஆவலுடன் படத்தில் ஒன்றி விடுவோம் அல்லவா அது போல் தான் கோச்சடையான் ஸ்டில் பார்க்கும் போது தோன்றுகிறது படம் சிறப்பாய் வெளி வர வாழ்த்துக்கள் தலைவா
( கோச்சடையான் வெற்றியுடையான் )


------

அதே போல் ஜீவா நடிக்க கெளதம் மேனன் இயக்கும் நீ தானே என் பொன் வசந்தம் படம் என் முக்கிய எதிர்பார்ப்பில் இருக்கிறது காரணம் நம் இசை அரசர் இளையராஜா அவர்கள் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். படத்தின் ட்ரைலர் நன்றாக இருக்கிறது என்று படித்தேன் பார்க்கவில்லை இளையராஜாவின் தீவிர ரசிகனான எனக்கு இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை தந்திருக்கிறது (உன் இசை தானே எங்கள் பொன் வசந்தம்)

------


நண்பன் படம் பார்த்தேன் இந்த படத்தில் சைலன்சர் கேரக்டரில் சத்யன். மனிதர் என்னமாய் வெளுத்து வாங்குகிறார் அவரை பார்த்து விட்டு யாரும் சைலன்சாய் இருக்க முடியாது. இந்த படம் அவருக்கு ஒரு முக்கியமான படம் வாழ்த்துக்கள் சத்யன் இந்த படம் பற்றி விமர்சனம் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் சரியாக வரவில்லை என்பதால் எழுதியும் வெளியிடவில்லை இருந்தாலும் படம் பார்த்து விட்டு நான் நினைத்ததை சொல்ல ஆசைபடுகிறேன் நான் விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுக்க என் வீட்டில் யாருமே கண்டிப்பாக அனுமதிக்கவில்லை என்னை உதவாக்கரை என்றே முடிவு கட்டும் நிலை என்பதால் என்னால் நான் ஆசைப்பட்டதை தேர்ந்தெடுக்க முடியவில்லை நான் இருக்கும் வேலையில் கடமைக்காக (பணத்திற்காக) இயந்திரத்தனமாய் சுழலும் சூழல் தான் இப்போதும் எனக்கு. நான் விரும்பிய பத்திரிகை துறையிலோ அல்லது திரைப்பட துறையிலோ மட்டும் இருந்திருந்தால் எப்படி சந்தோசமாய் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருப்பேன் என்பதை நினைத்து பார்க்கிறேன் இந்த துறைகளில் யாரேனும் புதிதாக வந்து வெற்றி பெறும் போதெல்லாம் ஒரு ஏக்க பெருமூச்சு எனக்கு வெளிபடுகிறது ( நண்பன் படம் நன்பேண்டா என்று சொல்ல வைக்கிறது)

------

மின் வெட்டு வெட்டோ வெட்டென்று இருக்கிறது சென்ற வாரம் எங்கள் வீட்டில் சில மின்சார வேலைகள் இருந்ததால் எலேக்ட்ரிசியன் அழைத்திருந்தேன் ஒரு டியுப் லைட் எரியவில்லை அதற்கு மெனக்கெட்டு கொண்டிருந்தார் அவர் கரென்ட் போறதுக்குள்ளே முடிச்சுடுறேன் இல்லேன்னா செக் பண்ண முடியாம போயிடும் என்று அவசர அவசரமாய் வேலை பார்த்து கொண்டிருந்தார் இருந்தும் கரண்ட் நின்று விட்டது இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருந்தால் வேலை முடிந்திருக்கும் கரண்ட் போய் விட்டதால் அவர் மீண்டும் இதற்காக மாலை ஒரு முறை வந்திருந்து முடித்து கொடுத்தார் அப்போது அவர் சொன்னது பாருங்க கரென்ட் இல்லேன்னா எனக்கு கூட வேலை கிடையாது எனக்கே இப்படின்னா எத்தனையோ தொழிற்சாலைகள் நிலைமையை நினைச்சு பாருங்க என்றார் உண்மை தான் (மின் வெட்டு இல்லாத நிலை வேண்டும் )

------

ரயில் பயணத்தில் கையோடு புத்தகம் வைத்திருந்தாலும் வெளியில் எடுத்து படிக்க யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது காரணம் சென்ற வாரம் ஊருக்கு சென்ற போது வாரஇதழ் ஒன்று படிப்பதற்காக வாங்கினேன் எனக்கு எப்போதுமே புத்தங்கங்கள் என்றால் வாங்கும் போது எப்படி புத்தம் புதிதாக கசங்காமல் இருக்கிறதோ அதே போல் படித்து முடித்த போதும் இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் புத்தகம் வாங்கிய ஐந்து மணி நேரத்திலேயே ரயிலில் ஒவ்வொருவரும் வாங்கி படித்து நான் சென்று இறங்குவதற்குள் அந்த புத்தகம் கசங்கி அட்டை கையோடு வந்து விடும் போல் இருந்தது சரி நீ மத்தவங்க கிட்டே புக் வாங்கினா எப்படி என்கிறீர்களா முழுக்க படித்து விட்டு எப்படி கொடுத்தார்களோ அப்படியே கொடுப்பேன் ஏனெனில் சின்ன ஒரு முக சுளிப்பும் தாங்கும் மன வலிமை என்னிடம் இல்லை (புத்தகம் படிக்கவும் பாதுகாக்கவும் மட்டுமே )

------
நண்பர் கரைசேரா அலை அரசன் அவர்கள் தனக்கு கிடைத்த விருதுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவருக்கு என் மனம் கனிந்த நன்றிநாட்காட்டியில் (கிழிச்சது) படிச்சது

அன்பை கடன் கொடு
அது உனக்கு அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்


கடுகளவு சிறந்த சிந்தனை பூசணியளவு நற்பயனை தரும்


ஆர்.வி.சரவணன்
6 கருத்துகள்:

 1. நல்ல பதிவு.
  விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்.
  நன்கு எழுதுங்கள்; நிறைய எழுதுங்கள்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. oooo...superaa irukku,.,,,

  vaazthukkal ,,,,

  neenga nangu ezuthungal

  பதிலளிநீக்கு
 3. பரபரன்னு இருக்கு தொகுப்பு.
  விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. கொச்சடையான் போஸ்டரை பார்த்ததும் நான் அடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

  அப்புறம் ரயில் பயணங்களில் நான் பெரும்பாலும் வில்லங்கமான புத்தகங்களே படிப்பேன். அதாவது, மாவோயிஸ்ட், ஹிட்லர் இல்லை ஆன்மீகம் என்று. யாரும் கேட்க மாட்டார்கள்.

  இன்னும் பல விருதுகள் பெற கடவுளை மனமார வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. //இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருந்தால் வேலை முடிந்திருக்கும் கரண்ட் போய் விட்டதால் //

  வடை போச்சே! மாதிரி ஆகிட்டீங்களா :-)

  //நீ மத்தவங்க கிட்டே புக் வாங்கினா எப்படி என்கிறீர்களா முழுக்க படித்து விட்டு எப்படி கொடுத்தார்களோ அப்படியே கொடுப்பேன்//

  அதுக்கு தான் நான் நான் கடையில இப்படி வாங்குறதே இல்ல ;-)

  பதிலளிநீக்கு
 6. பல விடயங்களை தொகுத்து இருக்கின்றிர்கள் ..
  கோச்சடையான் அறிமுக படமே அதிருது ..
  அப்புறம் புத்தகம் பற்றிய உங்க கருத்து நச் ..
  நல்ல பகிர்வுக்கு என் நன்றிகள் சார்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்