புதன், அக்டோபர் 05, 2011

பிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்


பிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்


நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒன்றும் எழுதவில்லை மற்ற பதிவர்களின் பதிவுகள் படிக்கவில்லை.

(யாரேனும் ஒருவராவது என்னப்பா இவனை காணுமே என்று நினைத்திருக்கலாம் இல்லியா அதற்காக மட்டுமே இந்த செய்தி )

இந்த இடுகை எனது நூற்றைம்பதாவது இடுகை. கொஞ்சம் நடுநடுவே பழைய இடுகைகள் மீண்டும் வந்திருக்கின்றன என்றாலும் கணக்கு படி 150 வது பதிவு என்பதால் நான் வணங்கும் எனது இஷ்ட தெய்வத்தை பற்றி இந்த பதிவில் சொல்ல வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்ததால் ஒரு பதிவாக தந்திருக்கிறேன்

1991 நான் சென்னையில் வேலை கிடைக்காமல் கஷ்டபட்ட போது (கஷ்டம் என்றால் குடும்பத்தின் மூத்த மகன் நான். தம்பி தங்கை வேலையில் இருந்து நான் மட்டும் வேலையில்லாமல் தத்தளித்த நேரம் அது. நம்மை விட வயதில் சிறியவர்கள் வேலையில் இருக்கும் போது நாம் வேலையில் இல்லையென்றால் அது மிக பெரிய கொடுமை (பேருந்தில் செல்லும் போது பக்கத்துக்கு இருக்கையில் இருப்பவர் நம்மிடம் ஏதேனும் பேசினாலே , பேச்சு வாக்கில் உங்கள் கம்பெனி யில் ஏதேனும் வேலை இருக்குதா என்று கேட்கும் அளவு கொடுமை என்றால் பார்த்து கொள்ளுங்கள்) வீட்டில் வேலையில்லை என்றால் வெளியே போ என்று தந்தை சொல்லிவிட என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீருடன் சைதாபேட்டை வந்து நான் இறங்கிய போது, எதிரில் இருந்தது பிடாரிஸ்ரீ இளங்காளி அம்மன் ஆலயம் மனதில் கனத்துடன் உள்ளே சென்றேன்.

முதல் முறை அந்த கோவிலுக்கு அப்போது தான் செல்கிறேன் அம்மனை வணங்கி நிற்கும் போது நான் வேண்டியது , எனக்கு இன்றே ஏதேனும் வேலைக்கான பிடிமானம் கொடு இல்லையெனில் என்னை இந்த உலகத்திலிருந்து வெளியேற்றி விடு. இதனால் யார் குடியும் முழுக போவதில்லை என்று உறுதியாய் கூறி விட்டு கண்ணீருடன் வெளி வந்தேன்

அப்போது என் கையில் இருந்த அன்றைய தினசரியில் ஸ்க்ரீன் பிரிண்டிங் கம்பெனிக்கு ஆள் தேவை என்பதை படித்தவுடன் அந்த கம்பெனி அட்ரஸ் தேடி கொண்டு சென்றேன் நம்பிக்கையில்லாமல். ஆனால் பாருங்கள் சென்று பார்த்தவுடன் அன்றே வேலை கிடைத்தது அப்போதே வேலையில் சேர்ந்து விட்டேன். அன்று மாலை தலை நிமிர்ந்து வீடு சென்றேன் பின்பு அந்த கம்பெனியில் இருந்து வேறு இன்னும் நல்ல கம்பெனி வேலை கிடைத்தது தொடர்ந்து மென் மேலே கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து இப்பொழுது பெரிய நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வாழ்வதற்கு தேவையான சம்பளத்தில் இருக்கிறேன். கஷ்டங்கள் பலவற்றை கடந்து இன்று வரை எந்த தொய்வில்லாமல் தொடர்ந்து இன்று நல்ல நிலையில் நான் இருக்கிறேன்


அன்று பைசா காசில்லாமல் இருந்த நான் இப்போது அலுவலக வேலைக்காக விமானத்தில் சென்று வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால்
அதற்கு என் உழைப்பும், எப்படியாவது முன்னுக்கு வந்தே ஆக வேண்டும் என்ற எனது வெறியும் ஒரு சிறு காரணம் என்றாலும், இந்த தெய்வத்தின் அருள் இல்லையில் இதெல்லாம் சாத்தியமாகுமா சொல்லுங்கள் .

அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் தேதி அன்று அதி காலை முதல் வேலையாக குளித்து எதுவும் சாப்பிடாமல் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்து அர்ச்சனை செய்து அங்கு கொடுக்கும் முதல் பிரசாதம் சாப்பிட்ட பின் தான் வேறு ஏதேனும் சாப்பிடுவேன் அதற்க்கப்புறம் தான் வேறு வேலை ஆரம்பமாகும் (இது சென்னையில் ஜனவரி முதல் தேதி அன்று இருந்தால் ) அதே போல் ஒவ்வொரு தீபாவளிக்கும் புடவை எடுத்து கொண்டு சென்று கொடுத்து விடுவேன்.இருந்தும் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது

கஷ்டம் என்று யாரேனும் வந்து என்னிடம் சொன்னால் கோயிலுக்கு சென்று குறைகளை சொல்லி வாருங்கள் என்று சொல்வேன் அதே போல் பலரும் சென்று குறை நீங்கி என்னிடம் வந்து திருப்தியுடன் சொல்லும் போது சந்தோசமாக இருக்கும்

எனக்கென்று ஏதேனும் வேண்டினால் பலன் கிடைக்காது அனால் அதுவே மற்றவர் நலனுக்காக வேண்டினால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
சொந்தகாரங்களில் இருந்து நண்பர்கள் வரை என்னை வேண்டி கொள்ளுங்கள் என்பார்கள் வேண்டியிருக்கிறேன் நடந்திருக்கிறது.இதற்காக நான் கவலைப்படவில்லை அடுத்தவருக்காக பிரார்த்திக்கும் உரிமை எனக்கு கிடைத்திருக்கிறதே அதுவே ஒருசந்தோசம் தானே

கஷ்டங்களில்லாத மனிதன் ஏது இருந்தும் அந்த கஷ்டங்களை நம்மால் தீர்க்க முடியாத போது இறை அருளை நாடி நிற்கிறோம்

வேலையில்லை, பணமில்லை என்ற ஒரு காரணத்திற்க்காக நான் அவமானப்பட்ட காலம் போய் பரவாயில்லையே முன்னுக்கு வந்து விட்டானே என்று எல்லோரும் சொல்லத்தக்க வகையில் நான் இன்று இருப்பதற்கு பிடாரிஸ்ரீ இளங்காளி அம்மன் அருள் மிக முக்கியமானது.

அம்மன் அருள் என்றும் என்னை வழி நடத்தும்
உங்களுக்கும் அம்மன் அருள் பரிபூரணமாய் கிட்டட்டும்

இந்த ஆலயம் இருக்கும் இடம் சைதாபேட்டை மெயின் ரோடில் உள்ளது இந்த கோயில் பற்றிய வரலாறு, செய்திகளை பின்னே ஒரு பதிவாக தருகிறேன்

ஆர்.வி.சரவணன்

13 கருத்துகள்:

  1. நூற்றைம்பதாவது இடுகை./

    வாழ்த்துக்கள்..

    அம்மன் அருள் என்றும் வழி நடத்தும்
    அம்மன் அருள் பரிபூரணமாய் கிட்டட்டும்

    வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. 150க்கு முதலில் வாழ்த்துக்கள்...

    தொடரட்டும் உங்கள் எழுத்து...

    அம்மன் அருள் இருந்தால் நன்மைகளை பெறலாம் என்று உங்கள் வாழ்வின் மூலமாக விளக்கியிருக்கிறீர்கள். அம்மன் அருள் தொடர்ந்து கிடைத்து நீங்கள் வளமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி

    உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ரத்னவேல்

    பதிலளிநீக்கு
  5. தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி குமார் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் அம்மன் அருள் கிடைத்திட வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் சரவணன்.

    முடிந்த வரை பதிவுகளை மீள் பதிவு செய்வதை தவிருங்கள். தாமதமாக பதிவிட்டாலும் புதிய பதிவே நல்லது.

    பதிலளிநீக்கு
  7. 150க்கு வாழ்த்து!

    நெகிழ்வான பதிவு! மேலும் விவரங்களைச் சீக்கிரம் பதிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வாழ்த்திற்கு நன்றி கிரி
    தளம் ஆரம்பித்த புதிதில் நான் எழுதிய சில இடுகைகளை அப்போது யாரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் மீண்டும் பதிவிட்டேன்

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி மாதவி

    விரைவில் விவரங்கள் தருகிறேன்

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சார் ..
    அம்மனை பற்றி அறிந்து கொண்டேன் ,..
    நன்றி ...

    பதிலளிநீக்கு
  11. உங்களின் இளமை கால நினைவுகள் என் போன்றவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் ...
    நன்றிங்க .. சார் ... கடின உழைப்பும் , விடா முயற்சியும் தான் வெற்றிக்கு வழி ,.. அதை உங்களிடம் காண்கிறேன் .. நன்றிங்க சார் .. உடல்நிலையை கொஞ்சம் கவனமுடன் பார்த்து கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  12. 150
    வது பதிவுக்கு வாழ்த்துக்கள் .. மேலும் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. மனம் நெகிழ்ந்தேன்.
    சென்னை வரும்போது அம்மனை தரிசிக்க ஆசை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்