சம்மர் ஹாலிடே என்பதால் வீட்டில் என் மனைவி பசங்க எல்லாம் அவங்க அம்மா வீட்டுக்கு ஊருக்கு சென்றிருக்கிறார்கள். என் அம்மா என் தங்கை வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்
சோ நான் மட்டும் தனியே
ஹோட்டல் லே சாப்பிடலாம் னா அது பாக்கெட் ஐ பதம் பார்க்கும் என்பதால் வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம் (ஏற்கெனவே சமைத்த அனுபவம் உள்ளதால்) என்று முடிவு செய்தேன்.
சண்டே வீட்டில் இருந்ததால் டீ போட்டு விட்டு உப்புமா செய்யலாம் என்று அடுப்பை பற்ற வைத்தேன் பால் கவர் கட் செய்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு சமையலறையை கிளீன் செய்து முடிப்பதற்குள் பால் பொங்கி ஊற்றி விட்டது.
அதை இறக்கி வைத்து விட்டு பாத்திரம் வைத்து ரவாவை போட்டு வறுத்த போது அது தீய ஆரம்பிக்க அடடா என்று இறக்கி தட்டில் கொட்டிவிட்டு மீண்டும் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கடலை பருப்பு தேடுகிறேன் தேடுகிறேன் கிடைக்கவில்லை சரி என்று பச்சை மிளகாய் தேட அதுவுமில்லை.
சே என்று வெறுப்பான போது , அப்பொழுது தான் ஆகா வெங்காயம் நறுக்க மறந்து விட்டோமே என்று நினைப்பு வர, உடனே அடுப்பை நிறுத்தி விட்டு வெங்காயம் நறுக்கி சிகப்பு மிளகாய் கிள்ளி போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி உப்பு பயந்து கொண்டே போட்டு கொதிக்க வைத்து விட்டு நிமிர நான் போட்டு வைத்த டீ ஆறி போய் ஆடை விழுந்து இருந்தது .
சரி என்று குடித்து விட்டு திரும்பினால் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து விட்டிருந்தது . ரவாவை எடுத்து கொட்டி கிண்ட ஆரம்பித்தேன் பாருங்கள் கிண்ட கிண்ட உப்புமா இறுகவேயில்லை.
என் மனைவிக்கு போன் செய்து "என்ன செய்வது" என்று கேட்டேன் " நீங்கள் தண்ணீர் நிறைய சேர்த்து விட்டீர்கள் . இனி ஒன்றும் செய்ய முடியாது" என்று சொன்னார்கள்.
சரி என்று முடிந்த வரை கிளறிய போது பாத்திரமே என் கையோடு வந்தது . பாத்திரத்தை இறக்கி அடுப்பை நிறுத்தி விட்டு சாப்பிட அமர்ந்தேன்.
உப்புமா போஸ்டர் ஒட்ட தயாரித்த பசை போன்று தான் இருந்தது.
( ஒரு முறை மனைவி அவசரத்தில் உப்புமா செய்தார் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் ஒரு உப்புமா கூட உனக்கு சரியாய் சமைக்க தெரியலை என்று கோபப்பட்டு சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வர பெண்கள் சமையலில் எவ்வளவு கஷ்டப்பட்டு சமைக்கிறாங்க நாம ஒரு நிமிசத்திலே நல்லா இல்லை என்று சொல்லிடரோமே என்று தவறை உணர்ந்தேன்.)
சரி என்று நான் உப்புமா சாப்பிட ஆரம்பிக்க உப்பு ரொம்பவும் கம்மியா இருப்பது தெரிய வர என்ன பண்றது என்று சர்க்கரையை வைத்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன்
இவ்வளவு நேரம் இதை கேட்ட உங்களை விட்டுட்டு நான் பாட்டுக்கு சாப்பிடறேன் பாருங்க.
சாரி. வாங்க எல்லோரும் பகிர்ந்து சாப்பிடலாம் .
என்னங்க நழுவறீங்க.
ஆர்.வி .சரவணன்
ஆர்.வி .சரவணன்
கலக்கல்... அனுபவிங்க...
பதிலளிநீக்கு"பசையா" அவ்வ்..........
பதிலளிநீக்குமீ எஸ்கேப்பு.............. :))
இத்தனை விளக்கமும் கொடுத்திட்டு சாப்பிட வாங்கன்னா.....எஸ்கேப்ப்ப்:)
பதிலளிநீக்கு//பெண்கள் சமையலில் எவ்வளவு கஷ்டப்பட்டு சமைக்கிறாங்க நாம ஒரு நிமிசத்திலே நல்லா இல்லை என்று சொல்லிடரோமே என்று தவறை உணர்ந்தேன்.)//.....அப்பாடா,ஒருவழியாக உணர்ந்திங்களே. உணரவைத்த உப்புமாவிற்கு நன்றி!
//சாரி. வாங்க எல்லோரும் பகிர்ந்து சாப்பிடலாம் .
பதிலளிநீக்குஎன்னங்க நழுவறீங்க. //
ஏன் இந்த கொலவெறி !!
ஞாபகத்திற்கு வரும் பாட்டு, சுருளிராஜன்
பதிலளிநீக்குபாடியது.
"உப்புமா கிண்டி வையடி - அடியே
உப்புமா கிண்டி வையடி
குப்பம்மா மகளே
தப்பேதும் இல்லாம
உப்புமா கிண்டி வையடி - அடியே
உப்புமா கிண்டி வையடி!
அரப்படி தண்ணி ஊத்தி...
ஒருப்படி உப்பு போட்டு...
அரப்படி தண்ணி ஊத்தி,
ஒருப்படி உப்பு போட்டு - மிக
விருப்பமுடனே நீயும்
உப்புமா கிண்டி வையடி - அடியே
உப்புமா கிண்டி வையடி"
நல்லா உப்புமா கிண்டினீங்க சார்!
.....அப்பாடா,ஒருவழியாக உணர்ந்திங்களே. உணரவைத்த உப்புமாவிற்கு நன்றி!
பதிலளிநீக்குpriya
நான் கஷ்டப்பட்டு உப்புமா செய்ததுக்கு நன்றிசொல்லாமே உப்புமாவுக்கு
நன்றி சொல்லறீங்களே பிரியா
nadodi, saivakothuparotta, jailaani, nizamudheen priya
கருத்துரையிட்ட
அனைவருக்கும் நன்றி
//பெண்கள் சமையலில் எவ்வளவு கஷ்டப்பட்டு சமைக்கிறாங்க நாம ஒரு நிமிசத்திலே நல்லா இல்லை என்று சொல்லிடரோமே என்று தவறை உணர்ந்தேன்...
பதிலளிநீக்குநீங்கள் உணர்ந்தது போல் எல்லோரும் உணர்ந்தால் நல்ல இருக்கும்.
நிறைய பேர் கோபத்தில் த்ட்டை தூக்கி எறிவார்களாஅம்.
பிடிக்கலைன்னு சாப்பாட்டிலேயே கைய கழுவுவார்கள்.
/ஏன் பக்கம் வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க ந்ன்றி//
ஆஹா... படத்தவேற போட்டு நாக்குல எச்சில் ஊற வக்கிறீங்களே.... நல்ல அனுபவம்.... நான் பேச்சிலருங்க... நானும் சமைச்சிதான் சாப்பிடுறேனுங்க...
பதிலளிநீக்குunga blog nala eruku...padikka padikka swarasyam...nanum thanjavur than
பதிலளிநீக்கு//உப்புமா போஸ்டர் ஒட்ட தயாரித்த பசை போன்று தான்இருந்தது...சாரி. வாங்க எல்லோரும் பகிர்ந்து சாப்பிடலாம் //
பதிலளிநீக்குஏங்க உங்க தளத்திரு வந்தா இப்புடினா சொல்லி பயமுடுத்தறேங்க..மீ த எஸ்கேப்பு.
// ஒரு முறை மனைவி அவசரத்தில் உப்புமா செய்தார் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் ஒரு உப்புமா கூட உனக்கு சரியாய் சமைக்க தெரியலை என்று கோபப்பட்டு சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வர பெண்கள் சமையலில் எவ்வளவு கஷ்டப்பட்டு சமைக்கிறாங்க நாம ஒரு நிமிசத்திலே நல்லா இல்லை என்று சொல்லிடரோமே என்று தவறை உணர்ந்தேன்.)// இப்பவாது புரிந்துகொண்டீர்களே....
பதிலளிநீக்கு