வெள்ளி, மே 14, 2010

நீ கண்டும் காணாது சென்றாலும் ......


கமல் பட பெயர்களை கொண்டு காதல் கவிதை ஒன்று முயற்சித்திருக்கிறேன் எப்படி இருக்கு என்பதை சொல்லுங்கள்


நீ கண்டும் காணாது சென்றாலும் ......





அன்பே



மகளிர் மட்டும் பேருந்தில் தினம் வந்து இறங்குகிறாய் நீ




பேருந்து நிறுத்தத்தில் ஒரு புன்னகை மன்னனாய் நிற்கிறேன் நான்



நீ கண்டும் காணாது சென்றாலும்


என் வாழ்வே மாயம் ஆகி விடும் என்றாலும்



உனை வைத்து என் இளமை ஊஞ்சலாடி கொண்டு தானிருக்கிறது



உனை பற்றி நினைத்தாலே இனிக்கும் எப்போதும்



என் கையில் சிகப்பு ரோஜாக்கள் இதோ இப்போதும்



என் காதலை சொல்ல தான் நினைக்கிறன்



மூன்று முடிச்சிட்டு உன் நாயகன் நானே ஆக வேண்டும் என்று துடிக்கிறேன்



சொன்னால் மறுப்பாயா



இல்லை காதலா காதலா என்று ஏற்பாயா



மனது ஆடுகிறது ஆடு புலி ஆட்டம்



இப்படியே தொடர்கையில்



இன்றும் வந்து இறங்குகிறாய் நீ



என் ராஜ பார்வை உன் மீது



எனை நோக்கி வருகிறாய்



மனதுக்குள் டிக் டிக் டிக்



எனை நெருங்குகிறாய்



எல்லாம் இன்ப மயம் ஆனது எனக்கு



உன் கரங்களால் நீட்டுகிறாய் திருமண அழைப்பிதழ்



பெற்றோர் நிச்சயித்த பையனோடு திருமணம்



வர வேண்டும் என்று வார்த்தைகளில் வைத்தாய் கண்டிப்பை



என் காதல் அலை வரிசைக்கு கொடுத்தாய் துண்டிப்பை



அந்த ஒரு நிமிடம் என் இதயம் எரிமலையாய் வெடித்தது



அதற்கு துணை நின்று என் கண்கள் கண்ணீரை வடித்தது



நான் உயர்ந்த உள்ளத்தோடு



என் சந்தோசங்கள் அனைத்தும் உனக்கே வாய்க்கட்டும்



என்று உளமார வாழ்த்திட்டேன்



இதையே என் காதல் பரிசாக அளித்திட்டேன்



ஆர். வி .சரவணன்

10 கருத்துகள்:

  1. படப்பெயர்களை உரிய இடத்தில் நுழைத்த
    விதம் நன்று!!

    பதிலளிநீக்கு
  2. ஒரு பட குவியலையே சைலண்டா உள்ளே தள்ளீட்டீங்களே!!! சூப்பர் .

    பதிலளிநீக்கு
  3. ப‌ட‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளை அழ‌காக‌ க‌விதையாக்கியுள்ளீர்க‌ள்.... ந‌ல்லா இருக்கு ..வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  4. ம்ம்... படங்களை வைத்தே ஒரு காதல் (கதை) கவிதையா! வெரி நைஸ்!

    பதிலளிநீக்கு
  5. கவிதையிலேயே ஒரு கதை
    சொலிட்டிங்க.

    பதிலளிநீக்கு
  6. thanks to saivakothuparotta
    thanks to jailaani
    thanks to priya
    thanks to nizamuden
    thanks to nadodi

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கு "விருது" கொடுத்துள்ளேன், வந்து பெற்று கொள்ளவும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கு "விருது" கொடுத்துள்ளேன், வந்து பெற்று கொள்ளவும்.
    நன்றி.



    விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி

    சைவ கொத்துபரோட்டா

    பதிலளிநீக்கு
  9. எனக்கு பிடித்த நாயகனின் பெயர்களை வைத்து எழுதிய கவிதை மிகவும் நன்று... தோழரே....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்