வியாழன், ஜூன் 09, 2011

சூப்பர் ஸ்டாருக்காகசூப்பர் ஸ்டாருக்காக

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பூரண நலம் பெற்று வர வேண்டி, சென்னை அருள் மிகு காளிகாம்பாள் திருகோயிலில் என்வழி வாசகர்கள் சார்பில் பூஜை மற்றும் பிரார்த்தனைக்கு வினோ அழைத்திருந்தார் ஆர்வமுடன் கலந்து கொண்டேன் அந்த அனுபவத்தை பல்சுவை பகிர்வாய் இங்கு தருகிறேன்


பார்த்தது

இணைய தள நண்பர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களை பார்க்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது. வந்திருந்தவர்கள் அனைவரும் பல் வேறு ஊர்களில் இருப்பவர்கள். ஒவ்வொரு துறைகளில் வேலையில் இருப்பவர்கள் இவர்கள் அனைவரும் ரஜினிக்காக ரஜினி ரசிகன் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு வந்திருந்து பிரார்த்தனையில் பங்கேற்றது பார்க்க சந்தோசமாய் இருந்தது


61 நெய் தீபங்கள் ரஜினி நலம் பெற வேண்டி ஏற்றப்பட்டது. கலந்து கொண்ட நாங்கள் தீபங்கள் ஏற்றியதுடன் மட்டுமில்லாமல் பொதுமக்களையும் ஏற்ற வைத்தது ஒரு சிறப்பு என்றால் பொதுமக்களும் விரும்பி வந்து நெய் தீபங்கள் ஏற்றியது இன்னுமொரு சிறப்பு

படித்தது

சிதம்பரம் ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து வந்திருந்த நண்பர்கள் சிவாஜி படத்தின் போது அவர்கள் வெளியிட்டிருந்த சிறப்பு மலரை அனைவருக்கும் அளித்தனர் சிறப்பாக அச்சிடபட்டிருந்த அந்த மலரில் இருந்த வாசகங்களில் ஒன்று இதோ

ஆயிரம் மின்னல் நீல வானில்

நீ அபூர்வ மின்னல் திரை வானில்கேட்டது


கோயிலில் அம்பாளுக்காக நாங்கள் மாலை வாங்கும் போது பூ விற்கும் பெண்மணி என்னிடம் கேட்டார் என்ன போட்டோ எல்லாம் எடுக்கறீங்க என்ன விசஷம் என்றார் நான் ரஜினிக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று சொன்னேன் அவர் உடனே உற்சாகமாகி அப்படியா நான் கூட ரஜினி ரசிகை தான் அவர் குணமாகனும்னு நல்லா வேண்டிக்குங்க நானும் வேண்டிக்குறேன் என்றார் கேட்ட எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது


மகிழ்ந்தது

அருள் மிகு காளிகாம்பாள் அன்னையை வழிபட்டோம் திருப்தியுடன் பூஜை மற்றும் அன்னதானம் முடித்து விட்டு பிரசாதத்தையும் வெட்டி வேரால் செய்யப்பட்ட ஸ்பெஷல் மாலையையும் ரஜினி வீட்டில் கொடுப்பதற்காக நாங்கள் சென்றோம் நான் போயஸ் கார்டன் செல்வது இது தான் முதல் முறை ரஜினி வீட்டை பார்ப்பதும் இப்போது தான்நெகிழ்ந்தது

ரஜினி வீட்டில் அவரது உதவியாளரிடம் நாங்கள் பிரசாதத்தை கொடுத்தோம். இன்முகத்துடன் பெற்று கொண்டார் கூடவே, தலைவர் உடல் நலம் பெற்று குணமாகி வருகிறார் இந்த அளவுக்கு அவர் உடல் நலம் தேறி வருவது ரசிகர்கள் அனைவரின் பிரார்த்தனையும் அன்புமே காரணம் என்றும் தெரிவித்தார் இதில் நான் நெகிழ்ந்தது என்னவென்றால் எங்களை உள்ளே அனுமதித்து நாங்கள் செல் போனில் போட்டோ எடுத்து கொள்ள வும் அனுமதி தந்தது எங்களை நெகிழ வைத்தது

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்காக இதோ
அடுத்த பிரார்த்தனை தொடர்கிறது

ஜூன் 12-ம் தேதி உலகம் முழுக்க தலைவருக்காக பிரார்த்தனை… பரங்கிப்பேட்டை பாபாஜி கோயிலில் சிறப்பு வழிபாடு!

ஜூன் 12 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு சிதம்பரம் அருகே பரங்கிபேட்டையில் உள்ள மகாவதார் பாபாஜி கோயிலில் சர்வமத பிரார்த்தனை நடைபெற உள்ளது


தலைவர் ரஜினிக்காக உலகளாவிய சர்வமத பிரார்த்தனைஎன்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ரஜினிக்காக இயங்கும்என்வழிஇணைய தள நண்பர்கள், ரஜினிபேன்ஸ்.காம் மற்றும் ரஜினிலைவ்.காம் ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.ஆனாலும் பிரார்த்தனையை நடத்தப்போவது முழுக்க முழுக்க ரசிகர்களே என்பது குறிப்பிடத்தக்கது.


இப் பிரார்த்தனை சிறப்புற அமையவும் ரஜினி அவர்கள் நலம் பெற்று வரவும் எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரியட்டும்

ரஜினிக்காக உலகளாவிய இந்த சர்வமத பிரார்த்தனை
குறித்த மேலும் தகவல்களுக்கு என்வழி யின் இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்


http://www.envazhi.com/?p=26047ஆர்.வி.சரவணன்

4 கருத்துகள்:

 1. சூப்பர்!! இத்தனை ரசிக உள்ளங்களின் அன்பும் ப்ரார்த்தனையும் வீண் போகாது!

  பதிலளிநீக்கு
 2. மனம் ஒன்றி பிரார்த்தனை செய்யும் போது வெற்றி நிச்சயம்!வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. தலைவர் மீண்டு வருவார் சார் ..
  பிரார்த்தனைக்கு பலன் நிச்சயம் உண்டு...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்