செவ்வாய், நவம்பர் 02, 2010

ரஜினி எனும் காந்தம்



ரஜினி எனும் காந்தம்



எந்திரன் படம் வெளியானவுடன் என்னை சுற்றி நடந்தவைகளை பற்றியும் நான் கவனித்ததை பற்றியும் உங்களோடு கொஞ்சம் பகிர்கிறேன்

என் அலுவலகத்தில் படம் வெளியான அன்று அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு நண்பர் மூலமாக நானும் என் நண்பரும் சனி காலை டிக்கெட் பெற்றோம் அந்த நண்பருக்கு நன்றி சொல்ல போன் செய்தால் அவர் அங்கு இல்லை அவருக்கு படம் வெளியான அன்றே டிக்கெட் கிடைத்ததால் அலுவலகத்தில் லீவ் போட்டு விட்டு சென்று விட்டதாக தகவல் வந்தது


நானும் என் நண்பரும் சனி காலை தியேட்டர் சென்றோம். மவுண்ட் ரோடு சரவணபவனில் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று சென்றால் அந்த காலை ஏழு மணிக்கு அவ்வளவு கூட்டம். குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள் தேவி தியேட்டரில் அந்த காலையிலும் ஏழு மணிக்கு கூட்டம் இருந்தது . குடும்பமாக வந்திருந்தவர்கள் தான் ஜாஸ்தி .நாங்கள் சென்ற தியேட்டர் சத்யம் எஸ்கேப் இன்னொரு அலுவலக நண்பரும் வந்திருந்தார்


ஒரு அலுவலக நண்பர் ஒருவர் ராக்கி தியேட்டரில்
காலை நான்கு மணி ஷோ படம் பார்த்து விட்டு வந்தார் அவரிடம் நான் கேட்டதற்கு அவர் சார் குடும்பம் குடும்பமா வந்திருக்காங்க சார் எப்ப எழுந்திருச்சு எப்ப குளிச்சு ரெடியாகி வந்தாங்க என்றே தெரியவில்லை என்றார்சிரித்து கொண்டே .


இன்னொரு நண்பன் தியட்டருக்கு அவ்வளவாக செல்லாதவன் சனி அன்றே குடும்பத்துடன் பார்த்து விட்டு வந்து விட்டான் என்னடா என்றால் நான் பார்க்காமலிருந்தால் நீங்க எல்லாரும் படத்தை பற்றி சொல்லி என்னை நோகடிசுடுவீங்க என்றான்
இரண்டாவது முறை தன பெண்ணை அழைத்து செல்வதற்காக எந்த தியேட்டர் செல்லலாம் என்று யோசனை கேட்டான் .


எனது நெருங்கிய உறவினர் ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும் பெண்மணி பேரன் இருக்கின்றான் அவர்களிடம் கேட்டேன் படத்திற்கு போவீர்களா என்று போவேன் ஆரம்ப ஆர்ப்பாட்டம் முடிந்து பத்து நாள் ஆகட்டும் அப்புறம் தான் போவோம் என்றார். இதுக்கு முன்னாடி என்ன படம் பார்த்தீர்கள் என்று கேட்டதற்கு சிவாஜி என்றார். இருக்கும் பிரச்னை பார்க்கவே டயம் சரியாக இருக்கு என்று அலுத்து கொள்பவர் அவரா இப்படி சொல்கிறார் என்று எனக்கு ஆச்சரியம்


என் அம்மா படத்துக்கு போகலாம் வாருங்கள் என்று சொன்னால் வேண்டாம் டிவி யில் பார்க்கும் படங்களே போதும் என்பார் ஆனால் ரஜினி படம் வரும்போது வருகிறேன் என்பார் இதற்கு முன்பு சிவாஜி படத்துக்கு வந்திருந்தார் இப்போது எந்திரன் படத்துக்கு வந்திருந்தார் .
என் பையன் டார்ச்சர் தாங்க முடியாமல் அடுத்த சண்டே பத்தாம் தேதி டிக்கெட் புக் பண்ண முயன்றேன் எங்கும் கிடைக்கவில்லை . சரி என்று ராக்கி திரை அரங்கம் சென்றேன்.
காலை ஏழரை மணி ஷோ இருப்பதாக சொன்னார்கள். காலை யிலேயே எப்படி வரது என்று தயங்கினேன். டிக்கெட் புக் பண்றவர் என் பக்கம் மானிட்டரை திருப்பி சார் முக்கால் வாசி முடிஞ்சிடுச்சி புக் பண்ண எல்லாரும் பாமிலி மெம்பெர்ஸ் தான் என்றார் .நான் உடனே டிக்கெட் புக் பண்ணி விட்டேன் வீட்டில் எல்லோரும் காலையிலேயே எப்படி என்று தயங்கினர். நான் அது ஒரு புது அனுபவமா இருக்கும் நாம எப்பயாவது தானே படத்துக்கு போறோம் வாங்க என்று அவர்களை சமாதானபடுத்தி அழைத்து சென்றேன்.
திரை அரங்கில் அந்த காலை வேளையில் எங்கு திரும்பினாலும் குடும்ப சகிதம் தான் வந்திருந்தார்கள் .



என்

பையன் சந்தோசத்திற்கு அளவேயில்லை அந்த காலை வேளையில் குடும்பத்துடன் அமர்ந்து பார்த்தது எல்லோருக்கும் ஒரு புது அனுபவமாக தான் இருந்தது .

எதற்கு சொல்கிறேன் என்றால் வாழ்க்கையில் கஷ்டபடுபவர்கள் முதல் நன்றாக இருப்பவர்கள் வரை சிறியோர் முதல் பெரியோர் வரை என்று பெரும்பான்மையானோர் ரஜினி மேல் ஈர்ப்புடன் இருப்பதை காணும் போது இந்த மக்கள் ஆதரவு கடவுள் அவருக்கு கொடுத்த வரப்ரசாதம் என்றே சொல்லலாம்.


புவனா ஒரு கேள்விகுறி படத்தில் ரஜினி பாடும் ராஜா என்பார் மந்திரி என்பார் .........என்ற பாடலில் சுமித்ரா அவர்கள் ரஜினியை பார்த்து பாடுவதாக ஒரு வரி வரும் .


உலகில் உனக்கு சரித்திரம் உண்டு.... என்று


ஆகா இந்த பாடல் வரிகளை உண்மையாக்கிய மனிதன் அல்லவோ இவர்


ஆர்.வி. சரவணன்
*********************************************************************
அடுத்த இடுகை தீபாவளி ஸ்பெஷல்
என்னடா ஓவர் பில்டப் கொடுக்கிறே அப்படின்னு கோவபடாதீங்க
ஹா ஹா
சும்மா ஒரு விளம்பரம்
******************************************************************

13 கருத்துகள்:

  1. ரைட்டு, அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கலக்கிட்டிங்க... தல.... சூப்பர்..

    அடுத்த சூப்பர் ஸ்டார் யார்..?
    தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

    பதிலளிநீக்கு
  3. கலக்கிட்டிங்க... தல.... சூப்பர்..

    அடுத்த சூப்பர் ஸ்டார் யார்..?
    தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

    பதிலளிநீக்கு
  4. சூப்பர் அவியலான செய்தி தொகுப்பு....

    சென்னையில் அனைவருமே ரசித்து பார்த்து இருக்க வாய்ப்புண்டு....

    பதிலளிநீக்கு
  5. என் இத்தனை வருட அனுபவத்தில் எனது இரு சகோதரிகள் (அரசு மருத்துவமனையில் ஒருவர் டாக்டர், இன்னொருவர் செவிலியர்) அலுவலகத்துக்கு லீவு போட்டுவிட்டு படத்துக்கு வந்தது தலைவரின் எந்திரனுக்காகத்தான் இருக்கும். அதுவும் முதல் நாள் முதல் ஷோ... அபிராமியில்!

    படம் பார்த்துவிட்டு சொன்னார் என் பெரிய சகோதரி:

    'படம்னா இப்படி இருக்கணுன்டா...!'

    -வினோ

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் ஸ்டார்!!!

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. தீபாவளி வாழ்த்துக்கள் சைவ கொத்து பரோட்டா

    வாங்க தயாநிதி ஸ்ரீராம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    நன்றி கோபி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    நன்றி வினோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  8. தீபாவளி வாழ்த்துக்கள் குமார்

    பதிலளிநீக்கு
  9. தீபாவளி வாழ்த்துக்கள் ஜெயந்த்

    தீபாவளி வாழ்த்துக்கள் சுசி

    பதிலளிநீக்கு
  10. ரஜினி பாடல்களில் மரத்த வச்சவன் தண்ணி ஊட்டுவான் பாடல் அப்படியே ரஜினிக்கு எழுதியது போல இருக்கும்.
    “படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு”
    “காத்து இருப்பவர்கள் எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு”
    போன்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை

    தீபாவளி வாழ்த்துக்கள் தலைவரே..

    பதிலளிநீக்கு
  11. உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் சரவணன். தலைவர் படத்தை முதல்நாள் பார்ப்பதை விட தீபாவளி ஒன்றும் எனக்கு பெரிதாக தெரியவில்லை. எது எப்பிடியோ எமக்கு இந்த ஆண்டு இரட்டை தீபாவளி.

    பதிலளிநீக்கு
  12. //என் அம்மா படத்துக்கு போகலாம் வாருங்கள் என்று சொன்னால் வேண்டாம் டிவி யில் பார்க்கும் படங்களே போதும் என்பார் ஆனால் ரஜினி படம் வரும்போது வருகிறேன் என்பார் //

    பெரும்பாலான அம்மாக்கள் இப்படித்தானோ! :-)

    சரவணன் நான் மூன்று முறை பார்த்து விட்டேன். என் மகனுடன் நான் பார்த்த முதல் படமாக எந்திரனை கூறலாம்.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லாஜூன் 28, 2011 1:44 AM

    Very nice to read the first time flight experience Mr Saravanan. I feel proud that, so many years I had carried Mr Saravanan on my shoulders while he was a child. Yes I his maternal uncle living in Mumbai. Reading all these articles, etc. amazing!!. It is a wonderful moment for us to look at him at this stage. Though there are many hurdles in his personal life, he is getting enough time share his thoughts is just remarkable. All these best Saravanan. God bless you. Only precious things in the world are tested repeatedly and you are one among them. Best wishes!!! - Rajaram, Mumbai

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்