சனி, அக்டோபர் 30, 2010

உன் இதழ்களின் அசைவில் ....


உன் இதழ்களின் அசைவில் ....


அன்பே நம் முத்த பரிமாற்றங்களில்

பத்துக்கு ஒன்று

என்ற உன் கணக்கு

மிகவும்தவறானது


அன்பே தேநீரில் சர்க்கரை இல்லை என்றேன்

வாங்கி சுவைத்து பார்த்து இருக்கிறதே

என்று தந்தாய்

ஆம்

இப்போது இனிக்கிறது


நீ உதிர்க்கும் சொற்களுக்கு

மயங்காவிடினும்

உன் உதடுகளின்

அசைவிற்கு

நான் மயங்கி தான் ஆக வேண்டும்


நீ வசை பாடினாலும்

உன் இதழ்களின் அசைவில்

எனக்கு அது

நீ இசை பாடுவது

போல் தான்


கைபேசி யில் என்னோடு

நீ பேசினாலும்

வார்த்தைகளுக்கான உதட்டசைவை

இங்கிருந்தே

உணர்கிறேன்


ஆர்.வி.சரவணன்

படம் நன்றி கூகுள்

***********************************************************************

விரைவில் தீபாவளி ஸ்பெஷல்

ரொம்ப எதிர்பார்ப்பு வேண்டாம்

அதற்காக எதிர்பார்ப்பு இல்லாமலும்

இருக்க வேண்டாம்

************************************************************************

11 கருத்துகள்:

 1. நன்றி குமார்
  உங்களை நேரில் பார்க்கும் போது கண்டிப்பாக sweets parcel உடன் சந்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. நல்லாயிருக்கு, தீபாவளிக்கும் கலக்குங்க.

  பதிலளிநீக்கு
 3. நன்றி jeevadharshan

  நன்றி சைவ கொத்து பரோட்டா

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்