சனி, நவம்பர் 13, 2010

எது புண்ணியம்

எது புண்ணியம்




கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்த தன் முதலாளியிடம் வந்து நின்றான் வேலையாள் முத்து.

அவன் தலை சொரிந்த படி நிற்பதை பார்த்த அவன் முதலாளி "என்னப்பா" என்றார்.


"முதலாளி ஒரு உதவி வேணும்"

"என்னனு சீக்கிரம் சொல்லு"


"பொண்ணுக்கு கல்யாணம் பேசியிருக்கேன் செலவுக்கு கொஞ்சம் பணம் கடனா வேணும்"


"உன் மூத்தபொண்ணு கல்யாணத்திற்கு வாங்கின கடனே நீ இன்னும் அடைச்சபாடில்லே அதுக்குள்ளே மறுபடியும் கடனா "முதலாளியின் மனைவி கேட்டார் இளக்காரமாய்


"என்னம்மா பண்றது, வளைகாப்பு , பிரசவம் னு செலவு செய்யவே சம்பளம் சரியா போயிடுது"


"உனக்கு இன்னும் எத்தனை பொண்ணு இருக்கு" இது முதலாளி

"இன்னும் ஒரு பொண்ணு இருக்குங்க" என்றான் சங்கோஜத்துடன்

"அந்த பொண்ணு கல்யாணத்திற்கும் எங்க கிட்டே தான் காசு கேட்டு வருவியா "முதலாளி மனைவி


"உங்களை விட்டா எனக்கு யாருங்க இருக்கா"


"சரியா போச்சு போ, ஏன்யா அளவா பெத்து குடும்பம் நடத்தறதை விட்டுட்டுஇப்படி இங்கே வந்து நிக்க உனக்கு கஷ்டமா இல்லையா"


இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலை குனிந்தான் முத்து


"இதோ பார் ஏதோ என்னாலே முடிஞ்சது ஒரு பத்தாயிரம் தான் தர முடியும் கேசியர் கிட்டே சொல்றேன் வாங்கிட்டு கிளம்பு"

"முதலாளி விலைவாசி இருக்கிற இருப்பிலே இது எப்படி போதும் கொஞ்சம் பார்த்து செய்யுங்க"

என்று கெஞ்சும் அவனை சட்டை செய்யாமல் அவர்கள் இருவரும் சென்று
டிரைவரிடம்

" சீக்கிரம் போப்பா டயமாயிடுச்சு"

என்று அவசரமாய் சொல்லியபடியே காரில் ஏறிக் கொண்டனர்.

அவர்கள் இருவரின் ஒரே மகளின் திருமணம் முப்பது வயதுக்கு மேல் ஆகியும் தடைப்பட்டு வருகிறதே என்பதற்காக ஜோசியர் சொன்ன படி கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் செய்து வைப்பதற்காகவே அவசரமாய் சென்று கொண்டிருந்தனர்

காரின் உள்ளே ஸ்டிக்கரில் இருந்த முருகன் அவர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தார்.

ஆர்.வி.சரவணன்

7 கருத்துகள்:

  1. இதுபோல் நிறைய நடக்கிறது... அருமையான கதை... ரொம்ப நல்லாயிருந்தது.

    பதிலளிநீக்கு
  2. இது போன்று பரவலாக நடந்து கொண்டு தானிருக்கிறது ....

    பதிலளிநீக்கு
  3. மனிதர்கள் பலவிதம். நல்ல சிறுகதை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நல்லகதை... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. Super Story Saravanan..

    http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்