சனி, செப்டம்பர் 18, 2010

சில நொடி சிநேகம்


சில நொடி சிநேகம்

அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து வெளி வந்த சரண் கூட்டத்தின் இடையே மிதந்து சென்று அரியலூர் பேருந்து நிலையம் செல்லஆட்டோ பிடித்தான்.
நான்கைந்து பேருடன் ஆட்டோவில் அமர கஷ்டமாக இருந்தாலும் வேறு வழி
இல்லாமல் அட்ஜஸ்ட் செய்து அமர்ந்தான் .

ஆட்டோ கிளம்பியவுடன் அருகில் அமர்ந்திருந்தவர்
" தஞ்சாவூர் செல்ல வேண்டும் பஸ் நிறைய இருக்குமா "என்று கேட்டார்.

சரண் "நிறைய இருக்குங்க "என்றான்.

உடனே "தஞ்சாவூர் போய் டிபன் சாப்பிட ஹோட்டல்
திறந்திருக்குமா" என்றும் கேட்டார்.

"திறந்திருக்கும் "என்றான்.

ஆட்டோ பஸ் ஸ்டான்ட் வந்தவுடன் சரண் இறங்கினான் கூடவே அவரும் இறங்கினார் .

"தஞ்சாவூர் போகும் பஸ் எங்கே நிற்கும்" என்று கேட்டார்.

சரண் "நானும் தஞ்சாவூர் தான் போறேன் வாங்க" என்று அழைத்து கொண்டு பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விரைந்தான்.

அங்கே புறப்பட இருந்த இரண்டு பேருந்துகளும் கூட்டத்தால் நிரம்பி வழியவே சரண்" இதுலே ஏற முடியாது. அடுத்த பேருந்து உடனே வரும் அதுலே போகலாம்" என்றான்.

அவரும் சரி என்றவர் அடுத்த பேருந்துக்கு இருக்கும் கூட்டம் பார்த்து
" நாம வாசலுக்கு போயிடலாம் பஸ் உள்ளே வரும் போது உடனே ஏறிடலாம்" என்றார்.
அவர் சொல்வது சரியென படவே சரண் "சரி வாங்க" என்று அவருடன் சென்றான்.
அங்கு போய் காத்திருக்கையில்அவர்தான்சென்னையிலிருந்து
திருமணத்திற்க்காக வந்திருப்பதாகதெரிவித்தார்.

சரண்" நானும் தான் "என்று சொன்னான்.
அவர் "ஒரு டீ சாப்பிடலாம் வரீங்களா" என்றார்.

அவனுக்கும் சாப்பிடலாம் போலிருந்தாலும்நம்மால் அவருக்கு ஏன் செலவு என்று கருதி வேண்டாம் என்று மறுத்தான்.

"நீங்க போய் சாப்பிட்டு வாங்க" என்றான்.அவர் சென்றார்.

அப்பொழுது தஞ்சாவூர் செல்லும் பஸ் நிற்கும் இடத்தில ஒரு பேருந்து நிற்பது
தெரிய வர சரண் உடனே சென்று நின்ற கண்டக்டரிடம் கேட்டான்.
அவர் ஆமாம் திருச்சி போக வேண்டியது தஞ்சாவூர் போக போகுது ஏறிக்கங்க என்றார்
அவன் உடனே சென்று ஏறி இடம் பிடித்து அமர்ந்து, கூட வந்தவருக்கும் ஒரு இடம் போட்டு வைத்து கொண்டு பேருந்தின் ஜன்னல் வழியே அங்குமிங்கும் அவர் வருகிறாரா என்று பார்த்துகொண்டு அவருக்காக காத்திருந்தான்.

டீ சாப்பிட்டு விட்டு வந்த அவர் கூட வந்தவனை காணுமே என்று தேடியவர் கண்ணில் ஒரு தஞ்சாவூர் செல்லும் பேருந்து வர வேகமாய் சென்று பேருந்தில் ஏறி அமர்ந்து அவனுக்கும் சேர்த்து இடம் போட்டு வைத்து கொண்டு அவனுக்காக காத்திருந்தார்.

ஆர்.வி.சரவணன்


13 கருத்துகள்:

  1. அச்சே சூப்பர் சரவணன்..இதேபோல் வேண்டும் அடிக்கடி..அசத்திட்டீங்க..

    பதிலளிநீக்கு
  2. சிலர் உம்(மணாமூஞ்சி) என்று இருப்பார்கள்;
    சிலர் தாங்களும் கலகலப்பாக இருப்பதோடு
    அடுத்தவரையும் சந்தோஷப்படுத்துவார்கள்.
    இந்த இருவருமே இரண்டாம் இனத்தவர்தான்.

    பதிலளிநீக்கு
  3. சந்தித்தது ஒரு சில நொடிகள்தான் என்றாலும் இருவரும் ஒருவருக்கொருவர் இடம் பிடித்து வைத்திருந்தது... உண்மையிலே இது ஒரு 'நொடி சிநேகம்'தான். நல்லா இருக்குங்க சரவணன்.

    பதிலளிநீக்கு
  4. அடப்பாவமே!! சீக்கிரம் அவர்களிடம் விசயத்தை சொல்லுங்கள் :))

    பதிலளிநீக்கு
  5. ந‌ல்லா இருந்த‌து ச‌ர‌வ‌ண‌ன்.

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமா இருக்கு.. நல்ல சிநேகிதம் தான்..

    பதிலளிநீக்கு
  7. நன்றி இர்ஷாத்
    தங்கள் வலைத்தளத்தில் என்னை பற்றி எழுதியமைக்கு நன்றி

    நன்றி நிஜாமுதீன்

    நன்றி ப்ரியா

    நன்றி சைவ கொத்து பரோட்டா

    நன்றி ஸ்டீபன்

    நன்றி பிரகாஷ் உங்கள் முதல் வருகைக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  8. சூப்பர் கதை. இப்படி மனிதர்களை பார்ப்பது அபூர்வம்.

    பதிலளிநீக்கு
  9. நன்றாக இருக்கிறது சரவணன்

    பதிலளிநீக்கு
  10. நட்பு கவிதை படிச்சுருக்கேன்... ஹைக்கூ கவிதை படிச்சுருக்கேன்... ரெண்டும் சேந்ததை இங்க படிச்சேன்... சூப்பர்

    பதிலளிநீக்கு
  11. அன்பின் சரவணன் - அருமையான கதை - ஒரு நிகழ்வினைக் கதையாக எழுதியது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்