வெள்ளி, செப்டம்பர் 24, 2010

பனி விழும் இரவு


பனி விழும் இரவு

மனம் கவர்ந்த பாடல்கள் 3

மௌன ராகம் படத்தில் இடம் பெற்ற பனி விழும் இரவு ...............

இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் என்றாலும் இந்த பாடலில் இளையராஜா செய்திருக்கும் ஜாலம் தனித்துவம் வாய்ந்தது போல் தோன்றும் (எனக்கு).

இந்த பாடல் ஆரம்பத்தில் அவர் இசையை தொடங்கும் போதே நம்மை கை பிடித்து பனி விழுந்து கிடக்கும் இரவுக்கு அழைத்து சென்று விடுவார்

கூடவே லா...லா...லா... என்று பெண்களின் கோரஸ் நம்மை வரவேற்பது போல் தோன்றும் இனிமை. அதை தொடர்ந்து S.P.பாலசுப்ரமணியம் ,S. ஜானகி குரல்களில் அதே வசீகரம் நம்மை மயிலிறகாய் வருடும் அதிசயம்.

பல்லவி முடிந்தவுடன் வரும் இசை நாம் ஒரு அடர்ந்த மூங்கில் காட்டுக்குள் இருப்பதாய் தோன்றும் ஒரு பிரமை அடடடா ......... இந்த பாடலும் கூட ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் பிரிந்து வாழும் கணவன் மனைவி இணைந்து வாழ ஆசைபடும் போது வார்த்தைகளையும் சந்தர்ப்பங்களையும் தேடும் போது தாஜ்மஹால் பின்னணியில் வரும் இந்த பாடல் காட்சியில் அவர்கள் இணைய உதவி செய்வதாய் அமையும் இந்த பாடல் பிரிந்திருக்கும் தம்பதிகளுக்கு ஒரு தேவாமிர்தம் என்று சொல்லலாம்.

இளையராஜா என்ற இந்த இசை சக்கரவர்த்தியின் இசை ஜாலங்கள் தான்
நம் மனதை எப்படியெல்லாம் வசீகரித்திருக்கின்றன .


வீடியோ லிங்க் முகவரி

http://www.youtube.com/watch?v=25T3nmhlMQM

இந்த பாடலின் படம் மௌனராகம்

நாயகன் நாயகி மோகன் ரேவதி

இந்த பாடல் எழுதியது வாலி

பாடல் பாடியவர்கள் S.P.பாலசுப்ரமணியம் ,S. ஜானகி

இயக்கம் மணிரத்னம்

படம் வெளியான ஆண்டு 1986


ஆர்.வி.சரவணன்

13 கருத்துகள்:

 1. அருமையான் பாடல் பதிவுக்கு நன்றி ..........

  பதிலளிநீக்கு
 2. ம்....ரசித்து எழுதி இருக்கிறீர்கள்!!
  எனக்கும் பிடித்த பாடல்தான்.

  பதிலளிநீக்கு
 3. பனி விழுமிரவில் நனைந்த
  ஞாபகங்களை கிளறி விட்டது உங்கள்
  பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 4. என‌க்கும் ரெம்ப‌ பிடித்த‌ பாட‌ல் தான்.. வாழ்த்துக்க‌ள்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல ரசசனைக்காறாராகத்தான் இருக்கீங்க! :-)

  பதிலளிநீக்கு
 6. நல்ல ரசனை தான். சூப்பர் பாடல்.

  பதிலளிநீக்கு
 7. அருமையான பாட்டு. மவுனராகம் எல்லா பாட்டுமே எப்போதும் என் பேவரிட்.

  //இளையராஜா என்ற இந்த இசை சக்கரவர்த்தியின் இசை ஜாலங்கள் தான்
  நம் மனதை எப்படியெல்லாம் வசீகரித்திருக்கின்றன.//

  வாழ்த்த வார்த்தைகள் இல்லா ஒப்பில்லா கலைஞன்

  பதிலளிநீக்கு
 8. எந்த நேரத்தில் கேட்டாலும் மனதிற்கு அமைதியையும் அழகான காதலையும் கொடுக்கும் பாடல். எனக்கும் ரொம்ப பிடிக்கும் தோழரே...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்