வெள்ளி, ஜூலை 23, 2010

என் சமையலறையில் 2என் சமையலறையில் 2

நேற்று வீட்டில் என் மனைவி தோசைக்கு வெங்காய சட்னி ரெடி செய்திருந்தார் சாப்பிட சுவையாக இருந்தது நல்லாருக்குதே எப்படி இது செய்வது என்று கேட்டேன் சாதரணமா எல்லாரும் பண்றது தான் கொஞ்சம் வித்தியாசமா செய்திருக்கேன் என்றார்.

சரி இது பற்றி எனக்கு சொல்லு ஒரு இடுகையிடுகிறேன் என்றேன் அவர் சொல்லியதை தான் இங்கு தந்திருக்கிறேன்

வெங்காய சட்னி
தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம் 4
காய்ந்த மிளகாய் 6
தக்காளி பெரியது 1
கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
இஞ்சி சிறு துண்டு
பூண்டு பற்கள் 6
தேங்காய் துருவல் கால் கப்
பெருங்காயம் சிறிதளவுவெங்காயம், தக்காளி ,மிளகாய் ,பூண்டு, இஞ்சி ,பெருங்காயம் போன்றவற்றை வாணலியில் போட்டு சிறிது எண்ணை விட்டு இலேசாக வதக்கி (பச்சை வாசம் போக இலேசாக வதக்கி ) எடுத்து கொண்டு தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை,தேவையான உப்பு சேர்த்து அரைத்து கடுகு தாளித்து கருவபிலை போட்டு விட்டால் வெங்காய சட்னி ரெடி

செய்து சாப்பிட்டு பார்த்து நன்றாக இருந்தால் சொல்லுங்கள் நன்றாக இல்லையென்றாலும் சொல்லுங்கள் .
ஆர்.வி .சரவணன்

9 கருத்துகள்:

 1. எனக்கு மிகவும் பிடிச்ச சட்னி....இதுவரை கொத்தமல்லி சேர்த்து செய்ததில்லை. இந்த முறைபடி செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. சொல்லும்போதே தெரியுது ..செம ருசியா தான் இருக்கணும்ன்னு ..
  செய்றோம்

  பதிலளிநீக்கு
 3. ஆஹா தோசை மெல்லிசா சூப்பரா இருக்கே.....!!அப்படியே தட்டை குடுங்க எல்லாத்தையுமே சப்பிட்டுட்டு சொல்ரேன்

  பதிலளிநீக்கு
 4. இது போல‌ தோசை, ச‌ட்னி எல்லாம் க‌ண்ணுல‌ பார்த்து ரெம்ப‌ நாள் ஆகுது.... ஊருக்கு வ‌ந்து தான் ட்ரை ப‌ண்ண‌னும்..

  பதிலளிநீக்கு
 5. நான் கூட உங்கள் ரெசிப்பியாக்கும் என்று ஆர்வத்தில் ஓடிவந்திட்டேன். உங்கள் மனைவியின் ரெசிப்பியா?? நல்லாயிருக்குன்னு சொல்லுங்க அண்ணியிடம்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி பிரியா
  நன்றி பத்மா
  நன்றி வானதி
  நன்றி ஸ்டீபன்
  நன்றி ஜெய்லானி

  பதிலளிநீக்கு
 7. எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும் , அம்மாவிடம் சொல்லி செய்துபார்க்க சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. நல்லாயிருக்கு சட்னி (ஃபோட்டோவில்)!!!

  'தேவையான பொருட்கள்' என்பதைக்
  குறிப்பிட்ட நீங்கள் அடுத்த பத்தியில்
  'செய்முறை' என்றும் ஒரு தலைப்பு
  கொடுத்திருக்கலாம்!!!

  பதிலளிநீக்கு
 9. நன்றி தேவதர்ஷன்

  நன்றி நிசாமுதீன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்