திங்கள், நவம்பர் 07, 2016

வா, காதல் செய்வோம்-1









காட்சி-1

இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை,  பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணியை கோவில் இருந்த பக்கம் திரும்ப வைத்தது.

"பகவானே என் பேரனை ஒரு கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள உன் பாடு என் பாடு ஆகிடுச்சு. ஏதோ நல்லபடியா கல்யாணத்தை முடிச்சிட்டேன். அவன் வாழ்க்கையும்  நல்ல படியா அமையணும்பா" 
என்றவாறு கன்னத்தில் போட்டு கொண்டார்.

" என் பொண்ணை இந்த மாப்பிள்ளைக்கு சம்மதிக்க வைக்கிறதுக்கே போதும் போதும் னு ஆகிடுச்சு. பெரியவங்களா  பார்த்து பேசி முடிச்சிட்டோம். நீ தான்பா அவங்களை கஷ்டம் ஏதும் இல்லாதவாறு  வாழ வைக்கணும்" பக்கத்தில் நின்றிருந்த பெண் கோபுரத்தை பார்த்து கும்பிட்ட படி முணமுணுத்தார்.

அந்த வயதான பெண்மணி அந்த பெண்ணின் தோளில் கை வைத்து, "முரண்டு  பிடிக்கிறவங்க எல்லாருமே கல்யாணத்துக்கு அப்புறம் சரியாயிடுவாங்க. வாழ்க்கைல நாம பார்க்காததா. இதுக்காக நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க" சமாதானம் செய்யும் விதமாக சொன்னார்.

அந்த அம்மா மௌனமாக தலையாட்டினார். கூடவே உள்ளே திரும்பி, சாத்தப்பட்டிருந்த அறைக்கதவை ஒரு முறை பார்த்து கொள்கிறார்.

காட்சி-2

பெட் ரூம் 

அந்த அறை ஒரு பூந்தோட்டத்தில் நுழைந்ததை போன்ற தோற்றத்தில் இருந்தது. அறையின் நடுவே  இருந்த கட்டில் வித விதமான மலர்களை கொண்டு தன்னை அலங்கரித்து மலர் மஞ்சம் என்பது இது தானோ என்ற எண்ணத்தை தர, பழங்கள் மற்றும் பலகாரங்கள் வேடிக்கை பொருள்களாக காட்சியளித்து கொண்டிருந்தது.  கட்டிலின் மையத்தில் பூக்களால் மனோ,  நந்தினி  என்ற பெயர்கள் எழுதப்பட்டு எந்த நேரத்திலும் களைய தயாராய் இருந்தது.

கட்டிலுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு பக்கத்தில் தரையில் மனோ படுத்திருந்தான்.  தூங்கி கொண்டிருந்தவனின் அருகில் இருந்த மது கிண்ணம்  அவன் மதுவுண்ட மயக்கத்தில்
இருப்பதை சொன்னது.

இதற்கு நேர் எதிரே கட்டிலின் அந்த பக்கத்தில் நந்தினி  படுத்திருந்தாள். தன் இடது கையையே தலையணையாக  தலைக்கு கொடுத்த படி இந்த அறையை பார்க்க பிடிக்காதவளாக சுவர் பக்கம் திரும்பி படுத்திருந்தாள்.அவளுக்கு மட்டுமே  கேட்கும் படியான விசும்பலில் இருந்தாள். மனோ செல்போன் எஸ் எம் எஸ் வந்திருப்பதை சத்தமிட்டு சொல்ல அவன் தூக்க கலக்கத்திலேயே செல் போனை எடுத்து பார்க்கிறான்.

"ம். ஹேப்பி பர்ஸ்ட் நைட்டாம். டேய் இது என் பொண்டாட்டிக்கு மட்டும்தான் பர்ஸ்ட் நைட். எனக்கு எத்தனாவது என்கிற கணக்கில்லே" என்கிறான்.

நந்தினி கன்னத்தில் வழிந்த கண்ணீரை தன் வலது கை விரல்களால் துடைத்து கொள்கிறாள்.

அந்த அறையின் சுவரில் இன்றைய தேதியை அறிவித்த படி இருந்த  காலண்டர், காற்றில் பறக்க ஆரம்பிக்கிறது.  மூன்று மாதங்களுக்கு முந்தைய நாள் ஒன்றில்  சென்று நின்று கொள்கிறது.

பிளாஷ் பேக் தொடங்குகிறது.

தொடரும்

ஓவியம் : மாருதி

ஆர்.வி.சரவணன்.

15 கருத்துகள்:

  1. இது அநியாயம் அண்ணா... கொஞ்சூண்டு கதை சொல்லி அடுத்து எப்ப வரும்ன்னு சொல்லாம காக்க வச்சிட்டீங்க அண்ணா....

    ரொம்ப நல்ல ஆரம்பம்....

    நந்தினி... பிளாஷ் பேக்குகிறாள்... காத்திருக்கிறோம்...

    தொடர் வெற்றிகரமான தொடராக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நந்தினிக்கு மட்டுமான பிளாஷ்பேக் அல்ல இது.

      நீக்கு
  2. கண்முன் காட்சிகளை நிறுத்தி விட்டீர்கள். நல்ல தொடக்கம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. விறுவிறுப்பான ஆரம்பம்.மாருதியின் ஓவியம் அழகு.அடுத்த அத்தியாயத்திற்கு waiting...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு வெள்ளியன்றும் வெளி வரும். நன்றி

      நீக்கு
    2. ஒவ்வொரு வெள்ளியன்றும் வெளி வரும். நன்றி

      நீக்கு
  4. திரைக்கதை போல் விரியும் காட்சிகள்! அருமை!!

    பதிலளிநீக்கு
  5. அதிரடி ஆரம்பம்! வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. விறுவிறுனு கதை ஆரம்பம்...

    சுருக்(கமான) அத்தியாயம்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்