வெள்ளி, அக்டோபர் 07, 2016

சுயநலம் - குமுதம் ஒரு பக்கக் கதை





சுயநலம் 
(குமுதம் ஒரு பக்கக் கதை )



ராமேஸ்வரம் ரயிலில் ஏறி  தன் சீட்டுக்கு வந்த சேகர் சந்தோசமாய் விசிலடித்தான்.காரணம் இன்று அவனுக்கு லோயர் பர்த் கிடைத்திருந்தது.
எப்போதாவது தான் லோயர் பர்த் கிடைப்பதுண்டு. இன்று கிடைத்திருந்தது.
இருந்தும் சந்தோஷம் உடனே வடிந்தது

சென்ற முறை ஒரு வயதானவர்  அப்பர் பர்த்தில் தன்னால் ஏற முடியாது என்று இவனை ஏற்றி விட்டு விட்டார்.  அது போல் இன்றும் யாரேனும் சீட் கேட்டு வந்தால் ... அவனுக்கு ஒரு யோசனை உதித்தது.

ரயில் கிளம்பிய உடனே படுத்து கொண்டு விட்டான்டி டி ஆரும் வந்து டிக்கெட் செக் செய்து விடவே அவனுக்கு இன்னும் வசதியாக போய் விட்டது.ரயில் தாம்பரத்தை அடைந்தது. இங்கு தான் கூட்டம் நிறைய ஏறும். எதுக்கு முழிச்சுகிட்டு இருக்கே தூங்குடா என்று தனக்கு தானே அதட்டி கொண்டு கண்களை மூடி கொண்டு விட்டான்

கூட்டம் திமுதிமுவென்று ஏற ஆரம்பித்ததுசில நிமிடங்கள் கழித்து எல்லா குரல்களும் தேய்ந்து போய் ரயிலின் தடக் தடக் மட்டும் கேட்க ஆரம்பித்திருந்தது. கூடவே காற்றுடன் சேர்ந்து மழையும் ஆரம்பித்திருந்தது. எழுந்து ஜன்னல் கண்ணாடியை கீழே இழுக்க ஆரம்பித்தவன் அதிர்ந்தான். அந்த கண்ணாடி கதவையும்  ஷட்டரையும் கீழே இறக்கி விட எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை

பிறகென்ன. எல்லோரும் நன்றாக தூங்கி கொண்டிருக்க... மழை சாரல் ஜன்னல் வழியே உள் நுழைந்து அவன் உடல் முழுதும் நனைக்க, சேகர் மட்டும் குளிரில் வெடவெடத்த படி தூங்காமல் விழித்திருந்தான்.

குமுதம் 13-07-2016 வார இதழில் வெளி வந்த எனது ஒரு பக்க சிறுகதை 
சுயநலம். நன்றி குமுதம் வார இதழ் 


ஆர்.வி.சரவணன்

7 கருத்துகள்:

  1. கதையும் தலைப்பும் அருமை. குமுதத்தில் வெளிவந்துள்ளதற்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சுருக்கமாக, அதே சமயம் அருமையாக. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. ஹா...ஹா... சுயநலம்... அருமையான கதை அண்ணா...

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் சார்! நல்லாருக்கு சார்.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. Giriraj
    2:31 PM (19 hours ago)



    உங்கள் தளத்தில் என்னுடைய பின்னூட்டம் பதிய முடியவில்லை.. எனவே இங்கே ..

    சரவணன் உங்கள் கதை நன்றாக இருந்தது :-)

    என்னுடைய ஆலோசனை

    நீங்கள் எழுதியது கதை போல இல்லாமல் Blog ல சொல்வது போல உள்ளது. கதை என்றால், சம்பந்தட்டவர் சொல்வது போல இருந்தால் படிக்க நன்றாக இருக்கும். இன்னொரு நபர் விவரிப்பது போல இருந்தால், கதைக்கான உணர்வு கிடைக்காது.

    நீங்கள் கதை நிறைய எழுதி இருப்பதால், நான் என்ன கூற வருகிறேன் என்று புரிந்து இருக்கும்.

    அப்புறம் அந்த சேகருக்கு இன்னொரு பெயர் சரவணன் என்று இருக்கிறதா? :-) :-) உங்கள் கதையோன்னு நினைத்துட்டேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்