ஞாயிறு, அக்டோபர் 25, 2015

அகம் புறம் குறும்பட அனுபவங்கள் -2அகம் புறம் குறும்பட அனுபவங்கள் -2

நண்பர் செங்கோவியிடம்  ஸ்க்ரிப்டை அனுப்பிய போது, படித்து விட்டு நாளை சொல்கிறேன் சார் என்று சொல்லியிருந்தார்.  ஆனால் அன்று இரவே படித்து விட்டு  பதில் அனுப்பினார். நல்லா எழுதிருக்கீங்க சார். க்ளைமாக்ஸ் மட்டும்  கொஞ்சம் இயல்பா இருந்தா நல்லாருக்கும் என்று கூறி அவரது யோசனையும் தெரிவித்திருந்தார். அவர் சொன்னதையும்  கருத்தில் எடுத்து கொண்டு படபிடிப்பிற்க்கு தயாரானேன்.

இதில் வரும் கதாபாத்திரங்கள் மொத்தம் 15 பேர். (ஒரே டிரஸ் தான் ) இரண்டே நாட்கள் தான் படப்பிடிப்பு என்பதால் ஒவ்வொருவருக்கும் எப்போது படப்பிடிப்பு என்பதை குறிப்பிட்டு ஒரு அட்டவணை  தயாரித்தோம் அதன் படி அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று முடிவு  செய்திருந்தோம். 
(ஆனால் அது முடியவில்லை என்பது வேறு விசயம் ) எல்லோரையும் சரி வர நடிக்க வைத்து விட முடியுமா, பெரிய ரிஸ்க் எடுக்குறோமோ  எதுனா சொதப்பிடுமோ என்றெல்லாம் கேள்விகள் துளைக்க ஆரம்பித்தன .ஏனெனில் யாராவது ஒருவர் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றாலும் கதை கந்தல் ஆகி விடுமே  ஆனால் அனைவருமே கலந்து கொண்டு சிறப்பாக சிறப்பாக ஒத்துழைத்தார்கள்.  ஒவ்வொருவரின்  காஸ்டியூம்  என்ன என்பதை அனைவருக்கும் தெரிவித்திருந்தோம்..அதன்படியே வந்திருந்தார்கள் .

ஒளிப்பதிவாளர் அஸ்வின்  சில இடங்களில் லைட்டிங் பத்தாது் எனவே லைட் ஆர்டர் பண்ணிடுங்க என்று சொல்லியிருந்தார்.  முந்தைய படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜோன்ஸ்  கொடுத்த முகவரி கோடம்பாக்கத்தில் இருந்தது. ஆவியும் கீதாவும் அங்கே சென்று லைட் வாடகைக்கு ஆர்டர்  செய்து விட்டு வந்தார்கள். அதை நான் படபிடிப்புக்கு முதல் நாளிரவு சென்று வாங்கி கொண்டு வந்தேன் (என்னா வெயிட்) 

படப்பிடிப்பு அன்று காலை சிவக்குமார் மற்றும் செல்வின் சீனு இவர்களுக்கு போன் செய்து வர சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.நான் போன் செய்யும் முன்பே  சிவக்குமார்  போன் அடித்து விட்டார். "என்ன சார் இன்னிக்கு ஷூட்டிங்காமே வாழ்த்துக்கள்" என்று சொன்ன போது "ஆமாம் நானே உங்களுக்கு போன் செய்ய இருந்தேன்.கண்டிப்பாக வாருங்கள்" என்றேன் செல்வினுக்கும் போன் செய்து தெரிவித்தேன். இருவருமே  வந்திருந்தார்கள். 

படப்பிடிப்பு ஆரம்பமானது. முக்கிய பிரச்னை என்னவென்றால் படப்பிடிப்பு நடந்த அந்த வீடு இரண்டு தளங்கள் கொண்ட வீடு. குறுகலான படிக்கட்டுகள். ஒருவர் தான் செல்ல முடியும் இதில் காமெராவை வைத்து கொண்டு படப்பிடிப்பு நடத்துவது மிக பெரிய சவாலாகவே  இருந்தது.கீழ் படிக்கட்டுக்கு சென்று அங்கிருந்த கோணத்தில் எடுக்க வேண்டும் பின் மேல் படிக்கட்டுக்கு வந்து அங்கிருந்து கோணம் பார்க்க வேண்டும். நடு நடு நடுவே அங்கே வீட்டில் வசிப்போர் வருவார்கள் அவர்கள் நகர்ந்து செல்லும் வரை பொறுமை காக்க வேண்டும். அவர்களுக்கு  சிரமம் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். எப்படியும் அன்று 25 பேர் அந்த வீட்டில் இருந்தோம் என்றால் வீடு எப்படி இருந்திருக்கும் என்று பார்த்து கொள்ளுங்கள்.இப்படியாக முதல் நாள் படப்பிடிப்பை முடித்தோம் இரண்டாவது நாள் படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒளிப்பதிவாளர் அஸ்வின் என்னுடன் நன்றாக ஒத்துழைத்தார்.  (அவரது கேமரா CANON 70 D) படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்த பின் அடுத்து எடிட்டிங் வேலைகள் ஆரம்பமானது 

எடிட்டருக்காக  தான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியதாகி விட்டது. (ஒரு மாத காலம் ) நான் ஒரு பக்கமும்  கீதாமேம்  மற்றும் ஆவி மற்றொரு பக்கமுமாக எடிட்டரை தேடினோம் .அப்போது தான் குறும்படங்களில் பணியாற்றி கொண்டிருக்கும்  வினோத் என்ற எடிட்டர் அறிமுகமானார். எடிட்டிங் தொடங்கியது. 


அடுத்து டப்பிங்  தொடங்கியது . ஞாயிறு ஒரே நாள்  தான் . எல்லோருக்கும் அட்டவணை போட்டு கொடுத்து அதன் படி  அவரவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வரும் படி சொல்லியிருந்தோம். அனைவரும் அட்டவணையின் படி அனைவரும் வந்திருந்து ஒத்துழைத்தனர். துளசிதரனின் டப்பிங் காக பாலக்காடு சென்றோம். விடுமுறையில் இருந்தவர் இதற்காகவே அவர் பாலக்காடு வந்து டப்பிங் முடித்து கொடுத்தார் அடுத்து காதல் போயின் காதல் படத்தில் பணி புரிந்த இசையமைப்பாளர் திரு. ரவி அவர்களே இந்த படத்திலும் இசைக்கு ஒப்பந்தம் செய்திருந்தோம்.  இருவருமே அலுவலகங்களில் பணி புரிவதால் மாலை வேலைகள்  மற்றும் ஞாயிறு தான் உட்கார்ந்து இசை கோர்ப்பு வேலைகளை கவனிக்க முடிந்தது..ஒரு வழியாக அதுவும் முடிந்து எடிட்டரிடம் பைனல் கட்டுக்கு வந்து விட்டது. 

இதற்கிடையில் இந்த படத்திற்கு டீசர் ஒன்றை நாமே கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமே என்ற ஆர்வத்தில் என் மகன் ஹர்ஷவர்தனிடம்  நான் ஐடியா சொல்ல அவனும் ஆர்வமுடன் அமர்ந்து டீசர் ரெடி செய்து கொடுத்தான். அதற்கான இசைக்கு இணையத்தில் தேடிய போது கிடைத்த ட்யூன் ஒன்று நன்றாக இருக்கவே அதையே பொருத்தி பார்த்தோம். நண்பர்களிடம் காண்பித்த போது அனைவரும் இதையே டீசரா போட்டுடுங்க சார் ரொம்ப நல்லாருக்கு என்றனர். சரி என்று அதையே வெளியிட்டு விட்டோம். 

agam puram teaser link

இந்த படத்தின் கதாபாதிரங்களுக்கு பொருத்தமான நபர்களை தேடி அலையும் வாய்ப்பே இல்லை. இதில்  நடித்த அனைவருமே நம்  இணைய நண்பர்கள் என்பது படத்திற்கு கூடுதல் பிளஸ்.    ஒரு கேர்ரக்டர்க்கு மட்டும் மட்டும் துளசிதரனின் உறவினர் பையனை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் கடைசி நிமிடத்தில் விருப்பமிருந்தும் அவரால் வர இயலாது போகவே வேறு ஆள் தேட வேண்டி  வந்தது. கோவை ஆவி தன் சகோதரரை பற்றி சொல்லவே  அவரை ரிகர்சலுக்கு அழைத்தோம். அவர் பெயர் கார்த்திக். கேரக்டருக்கு செட் ஆவாரா என்ற தயக்கம் எனக்கு எனக்கு இருந்தது. ஆனால் அவரோ என்னை என்னனு நினைச்சீங்க என்பது   போல் ரியாக்சன் காட்டினார். கூடவே " சார் நான்  இன்னொரு டயலாக் சேர்த்து பேசவா"  என்று அனுமதி கேட்டு ஆர்வமுடன் நடித்து கொடுத்தார்.

இன்னும் நண்பர்களை பற்றி சொல்ல வேண்டியிருக்கு. அதுக்குள்ள படம் ரீலீஸ் தேதி  வந்துருச்சே.(அக்டோபர் 26 ) பரவாயில்ல நாளை   அகம்  புறம் படம் வெளி வருது. படத்தை பார்த்துடுங்க .மிச்சத்தை பற்றி நாளை பேசுவோம் 

ஆர்.வி.சரவணன் 


9 கருத்துகள்:

 1. வெளியீடு தேதி நாளையா? வாழ்த்துகள்!

  தங்கள் அனுபவங்களையும் சிறப்பாக சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா நாளை வெளியீடா? பார்த்து விடுகிறேன். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. நாளை படத்தினைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. இன்று வெளியீடா! பார்த்துவிடுகிறேன்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. சுவாரஸ்யமான அனுபவங்கள் சரவணன். நேற்று படத்தினை பார்த்தேன். சிறப்பாக இருந்தது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

 6. நாடகத்தில் நான் பேக் ஸ்டே ஜ் ஒர்க்
  பார்பதைத்தான் அதிகம் விரும்புவேன்
  அதிலுள்ள சவால்கள் சுவாரஸ்யமானவை
  தங்கள் பதிவிலும் அதைக் கண்டு மகிழ்ந்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்