வியாழன், அக்டோபர் 22, 2015

அகம் புறம் – குறும்பட அனுபவங்கள்
அகம் புறம் – குறும்பட அனுபவங்கள்

குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தவுடன் நான் எடுத்து கொண்ட சப்ஜெக்ட் வேறு. இருந்தும் முன் அனுபவம் இல்லையாதலால்  முதலில் ஒரு ஐந்து நிமிடம் ஓட கூடிய அளவில் ஒரு படம் பண்ணி பார்த்துடுங்க என்ற நண்பர்களின் அறிவுரை சரி என்று படவே, அவசரத்தில் நான் எடுத்த குறும் படம் தான் சில நொடி சினேகம். வெளிப்புற படப்பிடிப்பில்   கிடைத்த அனுபவங்கள்,  அடுத்த படம் எடுக்கும் போது  வெளில கேமராவை வச்சி ஒரு ஷாட் கூட எடுக்காத அளவுக்கு ஒரு கதை பண்ணனும் என்ற முடிவுடன் பேனாவை (சரி கீ  போர்டை) எடுக்க வைத்தது. அப்போது கிடைத்த ஒன் லைன் தான் இதோ இப்போது அகம் புறம் என்ற குறும் படமாகி இருக்கிறது.

இந்த படத்தின் கதை முடிவாகி திரைக்கதையை  எழுதி முடித்து படித்த போது எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. கதையை தோசையை திருப்பி போடுவது போல் போட்டு வேறு ஓர் முறையில் முயற்சி செய்து பார்த்தேன். (இந்த தொடர் முடியும் போது இதை பற்றி விரிவாக குறிப்பிடுகிறேன் ) இந்த முயற்சி  நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் கேள்விகளை  எழுப்பின. நண்பர் கிரியிடம் அனுப்பி படிக்க சொன்னேன். அவருடன்,அரசன், கோவை ஆவி சகோதரி கீதா,மற்றும்  துளசிதரன் போன்றோரும்  இதே கேள்விகளை என்னிடம் கேட்டிருந்தனர். அந்த கேள்விகளுக்கு பதிலளித்து திரைக்கதை மற்றும் வசனத்தை நிறைவு செய்த பின், இப் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டிருந்த நண்பர்கள் பாலகணேஷ் சார், ஆரூர் மூனா, கார்த்திக் சரவணன் போன்றோருக்கு அனுப்பி படிக்க சொன்னேன். அவர்களும் படித்து விட்டு ஓகே சொல்லவே அடுத்து படப்பிடிப்புக்கான இடம் தேட ஆரம்பித்தோம். 

கீதா மேம் அவரது வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு வீட்டை காண்பித்தார். அங்கு சென்று பார்த்த போது அந்த வீடு கதைக்கு செட் ஆகவில்லை. வேறு வீடு தேடி கொண்டிருக்கையில் தான் எனது அலுவலக நண்பர் தேவராஜ் அவர்களின் வீடு இந்த ஸ்கிரிப்ட் டுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. நண்பரிடம் கேட்ட போது உடனே ஓகே சொல்லி விட்டார். (என் எழுத்துக்களை அவ்வபோது படித்து அது சரி இது சரியில்லை என்று உடனே சொல்லி விடுபவர். எனது முன்னேற்றத்தில் அவர் காட்டும் ஈடுபாடு எனக்கு ஒரு ஊன்று கோல் எனலாம்.) அவர் ஓகே சொல்லி விட்டார் என்றாலும் அவரது வீட்டில் உள்ளவர்கள் இதை எப்படி எடுத்து கொள்வார்கள் என்பது தெரியாததால் அவரது அம்மா, மனைவி, மற்றும் தம்பிகளையும் ஒரு வார்த்தை கேட்டு விடுவது நல்லது என்று அவரது வீட்டுக்கு சென்று விசயத்தை சொன்னேன். அவர் அம்மா சொன்ன பதில் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.

"இது உன் வீடுப்பா. எங்க ஷூட்டிங் எடுக்கணுமோ எடு. ஷூட்டிங் முடியும் வரை நாங்க வேணும்னா வெளில உட்கார்ந்துக்குறோம்" என்றார். அவர் தம்பிகளும் ஆர்வமாய் தலையசைத்தார்கள். நண்பரின் மனைவியிடம் "வீட்டுக்குள்ள எல்லாம் ஷூட்டிங் எடுக்க வேண்டியிருக்கு. உங்களுக்கு ஒன்றும் தொந்தரவில்லையே" என்ற போது  அதற்கு அவர் சொன்ன பதில் இன்னும் எனக்கு ஊக்கத்தை தந்தது.

"அண்ணே. நீங்க நல்லா வரணும் அது தான் எங்களுக்கு முக்கியம். நல்ல படியா படத்தை எடுங்க " என் தயக்கமெல்லாம் மறைந்து போய் படப்பிடிப்புக்கு தயாரானேன்.  அரசன் கோவை ஆவி மற்றும் கீதா ஒளிபதிவாளர் அஸ்வின் எல்லோரும் இடம் பார்க்க வந்திருந்தனர். "இடம் ஓகே தான். இருந்தும் கேமரா வைக்க இடம் பத்துமா தெரியலையே" என்றனர். அஸ்வின் ஓகே சார் பண்ணிடலாம் என்று சொன்னவுடன் ஷூட்டிங்கிற்கு தேதி குறிக்கப்பட்டது. இருந்தும் என் அலுவலக வேலைகள் என்னை நெருக்க ஆரம்பித்தது. எனவே படப்பிடிப்பை தள்ளி வைக்கும் நிலைக்கு ஆளானேன். நண்பர்கள் உற்சாகமாக காத்திருந்த வேலையில் தள்ளி வைத்து விட்டோமே என்ற கவலை என்னை சூழ்ந்தது. 

துளசிதரன் "ஷூட்டிங் தள்ளி போறது நல்லதுக்குன்னு எடுத்துக்குங்க.பீல் பண்ணாதீங்க" என்றார். அவர் சொன்னது சரி தான். ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டதால் அதிக வருத்தம் அடைந்தாலும் அதில் ஓர் நன்மை இருந்தது .திரைக்கதை இன்னும் கொஞ்சம் மெருகேறியது. வசனங்கள் இன்னும் தன்னை கூர் படுத்தி கொண்டன. எல்லோரும் படம் எடுக்கறேன்னு விளம்பரம் பண்ணீங்களே என்னாச்சு என்று கேட்க ஆரம்பித்தனர். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவுடன் ஆகஸ்ட் மாதம் 15, 16 
சனி ஞாயிறு அன்று ஷூட்டிங் என்று முடிவு செய்தோம். அதை நோக்கி எங்களது வேலைகளை தொடங்கினோம். படப்பிடிப்புக்கு இன்னும் சில நாட்கள் இருக்கையில் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது இந்த படத்தின் திரைக்கதை வசனத்தை  இதில் பங்கேற்றிருக்கும் நண்பர்கள் தவிர வெளியில் யாருக்கேனும் கொடுத்து படிக்க வைத்து அவர்களின் கருத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. இப்படி ஒரு எண்ணம் தோன்றியவுடன் என் நினைவுக்கு வந்தவர் நண்பர் செங்கோவி. அவரை சாட்டிங்கில் தொடர்பு கொண்டு கொஞ்சம் தயக்கத்துடனே கேட்ட போது அவர், "அனுப்புங்க சார் படிச்சிட்டு சொல்றேன்" என்றார் அவர் படித்து விட்டு சொன்னது என்ன ? இன்னும் இதில் நடிக்கும் நண்பர்களுடன் ஆன கிடைத்த அனுபவங்கள் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. அவற்றை நாளை பகிர்ந்து கொள்கிறேன். 

ஆர்.வி.சரவணன் 


21 கருத்துகள்:

 1. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  அடுத்த பதிவில் என்ன சொல்லப் போகிறீர்கள் எனத் தெரிந்து கொள்ள நானும் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. குறும்படம் சார்ந்த அனுபவங்களே சுவாரசியமாக உள்ளதே .அடுத்த பதிவையும் படத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் சென்னையில் இருந்தும் பதிவர் சந்திப்பில்தான் தங்களை சந்திக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார். சென்னையில் விரைவில் நாம் சந்திக்கலாம்

   நீக்கு
  2. நன்றி சார். சென்னையில் விரைவில் நாம் சந்திக்கலாம்

   நீக்கு
 3. அனுபவப் பகிர்வு...
  அருமை... தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 4. என்ன கேமிரா, என்ன வகையான எடிட்டிங் சாஃப்ட்வேர், சவுண்ட் ரெகார்டிங் போன்ற டெக்னிகல் விஷயங்களையும் சேர்த்து எழுதுங்கள். குறும்படம் எடுக்கும் ஆர்வத்தில் உள்ளோருக்கு உபயோகமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. அனுபவம் பகிர்வு அருமை. குறும்படம் வெளியீட்டையும் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. அனுபவங்கள் சுவாரசியமானவை
  தொடருங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 7. படிக்கும் போதே ஆர்வமாக இருக்கிறது தங்கள் அனுபவங்கள். தொடருங்கள் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. உங்களது அனுபவம் பலருக்குப் பாடம். நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் சார்! உங்கள் ஆர்வமும் உழைப்பும் கட்டாயம் உயரத்தில் உங்களை ஏற்றிவைக்கும்! தொடருங்கள்! பயணிக்கிறோம்!

  பதிலளிநீக்கு
 10. உங்கள் குறும்பட அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம்...

  தொடர்ந்திடுங்கள் சார்!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்