வியாழன், செப்டம்பர் 13, 2012

சினிமாவுக்கு பாட்டு எழுதினேன்....


சினிமாவுக்கு பாட்டு எழுதினேன்....

பல்லவி

மலரை தேடும் வண்டிங்கே
கண்ணே நீ சென்ற வழியெங்கே
என் ராகம் கேட்டு என் கஷ்டம்
தீர்க்க வாராயோ நீ இங்கே

மலரை....

சரணம் 1

காற்றிலாடும் தீபமாகிறேன்
கரையை தேடும் அலைகளாகிறேன்
ஒளியை தேடும் இருட்டாகிறேன்
வானை தேடும் மேகமாகிறேன்
கார்குழல் நான் மலரை தேடி துடிக்கிறேன்
விழிகள் நான் கண்ணீரிலே குளிக்கிறேன்

மலரை ....

சரணம் 2

காதலில் அகப்பட்ட மனம் ஒன்று
மங்கையிடம் வைத்தது அது அன்று
சோகத்தில் அழுகிறது மனம் இன்று
உன் மணாளனை ஆனால் அதுவே நன்று
நீ வரும் வழியில் என் விழிகளை பதிக்கிறேன்
அவ் வழியெங்கும் என் ஏக்கங்களை விதைக்கிறேன்

மலரை ....

நான் கல்லூரி படிக்கும் காலத்தில் எழுதி தான் பார்ப்போமே என்று மெட்டு எதுவுமில்லாமல்
கிறுக்கிய பாட்டு இது தளத்தில் வெளியிடுங்கள் என்று சொன்ன நண்பர் கரைசேரா அலை அரசன் டி.ஆர். பாதிப்பு தெரியுதே சார் என்றார். உண்மை தான் அப்போது டி.ஆர் பாடல்கள் பட்டையை கிளப்பி கொண்டிருந்த நேரம் அது


ஆர்.வி.சரவணன்

15 கருத்துகள்:

  1. பாடல் சிறப்பாக உள்ளது
    உண்மையில் தொடர்ந்து முயன்றிருந்தால்
    உச்சம் தொட்டிருப்பீர்கள்
    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வார்த்தைகள் என்னை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறது ரமணி சார் வாழ்த்திற்கு நன்றி

      நீக்கு
  2. நல்லா இருக்கு... நீங்களும் பட்டைய கிளப்பிட்டீங்க சார்...

    இன்னும் என்னென்ன திறமைகள் இருக்கு ...?

    பதிலளிநீக்கு
  3. முதல் முயற்சி என்று நினைத்துவிட முடியாதுங்க அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  4. ஆமா சார் டீ ஆர் சாயல் தெரிகிறது... இக்களத்திற்கு ஏற்றது போல் சீக்கிரம் ஒன்று எழுதிப் பாருங்கள்

    பதிலளிநீக்கு
  5. பாடல் வரிகளை சந்தம் மாறாமல் அமைக்க வருகிறது உங்களுககு. நல்லாவே இருக்குது. ஏற்கனவே ஹிட்டான பாடல்களை எடுத்து அவற்றுக்கு வேறு வரிகள் கொடுத்து எழுதிப் பாருங்கள் சரவணன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பால கணேஷ் சார் தாங்கள் சொல்லிய படி முயற்சிக்கிறேன்

      நீக்கு
  6. எனக்கு 80 டூ 90களில் வந்த டி.ஆர் பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும் அதே மாதிரி வந்த பாடலை நான் ரசித்தேன். திரைப்படத்தில் பாடல் இடம்பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. மிகவும் சிறப்பாக இருக்குங்க சார் .. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அதான் உடனே பதிவிடுங்க என்று சொன்னேன் ..
    அப்ப அப்ப இப்படி எழுதுங்க சார்

    பதிலளிநீக்கு
  8. மலரை தேடும் வண்டிங்கே
    கண்ணே நீ சென்ற வழியெங்கே
    என் ராகம் கேட்டு என் கஷ்டம்
    தீர்க்க வாராயோ நீ இங்கே

    அருமை அண்ணா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்