புதன், செப்டம்பர் 26, 2012

நானும் ஒரு வண்டினமாய்....


இது நான் பிளஸ் டூ படிக்கும் போது எழுதியது(தளம் ஆரம்பித்த புதிதில் வெளியிட்டேன் அப்போது யாரும் படித்திருக்க வாய்ப்பில்லை எனபதால்) இன்னும் சில வார்த்தை கோர்ப்பில் இதோ உங்கள் பார்வைக்கு நானும் ஒரு வண்டினமாய்....பருவச் சோலையிலே
பூக்கள் ஏராளம்


மலரினும் மெல்லிய பெண்ணே
உன் அழகு தாராளம்
தென்றலின் தொடுகையில் 
குயில்கள் இசை பாடுகையில் 
பிரம்மன் எனும் கதிரவன் 
கரம் படுகையில்
மலர்ந்தவளே


உன்னை சூறையாட 
தேன் அருந்திட  
ஆடவர் கூட்டம் 
ஒன்று 
வண்டுகளாய் 
முற்றுகையிட்டது

உனை சுற்றி சுற்றி 
வந்து நாள் பார்த்தது 

அக் கூட்டத்தில் நானும் ஒரு வண்டினமாய் 
இருந்தும் உனை பார்த்த பார்வை கண்ணியமாய் 
உனை அடையும் எண்ணமில்லை 
காக்கும் எண்ணமுண்டு 

ஆகவே 
உன் அருகில் ஆயுதமாய் 
இருந்திட்ட 
முள்ளின் மேல் பட்டு 
எனை வருத்தி கொண்டேன் 

என் உயிரை மாய்த்தேன் 
தீயவர் தம் ஆசையை தகர்த்தேன்

ஆடவ வண்டினம்  என் நிலை கண்டனர் 
தன் நிலை கடந்தனர் 
உனை விட்டு அகன்றனர் 

நீ நினைத்திருப்பாய்
உனை அடைய வந்தவன் தான் நான் என்று


ஆனால் உணர்வாயா
உனை காக்க என் உயிர் போக்கியதை 
கொஞ்சம் அறிவாயா 


ஆர்.வி.சரவணன் 


6 கருத்துகள்:

 1. ப்ளஸ்டூவிலயே ஆரம்பிச்சுட்டீங்கள்ஆ?!

  பதிலளிநீக்கு
 2. தென்றலின் தொடுகையில்
  குயில்கள் இசை பாடுகையில்
  பிரம்மன் எனும் கதிரவன்
  கரம் படுகையில்
  மலர்ந்தவளே
  >>
  அடடா, ரொம்ப கவுந்துட்டீங்க போல இருக்கே

  பதிலளிநீக்கு
 3. உண்மையா உணர்ந்திருப்பார்கள் படித்திருந்தால் அருமைங்க.

  பதிலளிநீக்கு
 4. எழுதியதை இப்படி மறைத்து வைப்பதே நம் ஆடவர்களின் வாடிக்கை சார் ..
  வரிகள் நறுக்கென்று உள்ளது ... வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்