செவ்வாய், நவம்பர் 15, 2011

புத்தகம் பேசுது



புத்தகம் பேசுது


சென்ற வாரம் தீபாவளி சினிமா படம் ஒன்று பார்க்க சென்றிருந்தேன் படம் ஆரம்பிக்கும் போது பக்கத்தில் உள்ளவர் ப்லொக்கில் டிக்கெட் ஐம்பது ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கி வந்ததாக சொன்னார் .நான், நல்ல வேலை கவுன்டரில் ஒரு டிக்கெட் ஓர சீட் தான் இருப்பதாக சொன்னார்கள் பரவாயில்லை என்று வாங்கி கொண்டு வந்து விட்டேன் எனக்கு லாபம் தான் என்றேன் கொஞ்சமே கொஞ்சம் பெருமையுடன்.

சரி விசயத்திற்கு வருகிறேன்

எப்போதும் என் கையில் புத்தகம் இருக்கும் அன்றும் எடுத்து சென்றிருந்தேன் படம் பார்க்கும் போது சீட்டில் வைத்து விட்டு படம் பார்த்தேன் இண்டர்வெல்லின் போது புத்தகத்தை மறந்து விட்டு எழுந்து சென்று விட்டேன் அப்புறம் நினைவு வந்து உடனே அவசரமாய் வந்து பார்க்கையில் புத்தகம் சீட்டில் இல்லை. சரி கீழே விழுந்திருக்கும் என்று அந்த வரிசை முழுக்க தேடியும் கிடைக்கவில்லை. பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. அது ஒரு நாவல்
லைப்ரரி புத்தகம் வேறு.

ஒரு புத்தகத்தை ஒழுங்காக வைத்து கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று கொஞ்சம் மூட் அவுட் ஆகி அந்த சூழலிலேயே படம் பார்த்து விட்டு வெளி வந்தேன். சரி என்று லைப்ரரி சென்று அதற்குண்டான பணம் நாற்பது ரூபாய் செலுத்தி விட்டு வந்தேன். பணம் செலுத்தியதற்காக நான் கவலைப்படவில்லை நுலகத்திற்கு பணம் செலுத்துவது எனக்கு சந்தோஷமே.


இதில் மன கஷ்டம் என்னவென்றால் ,

அந்த புத்தகம் பத்து நிமிஷத்தில் கண்டிப்பாக இன்டர்வெல்லில் யார் கையிலாவது
கிடைத்திருக்கும். அதை உரியவரிடம் சேர்க்காமல் அவர்கள் எடுத்து கொண்டது எனக்கு நியாயமாக தோன்றவில்லை. ஒரு புத்தக விசயத்தில் கூடவா இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
மேலும் அந்த கதை நான் முக்கால்வாசி தான் படித்திருந்தேன். கிளைமாக்ஸ் இன்னும் படிக்கவில்லை.த்ரில்லர் ஸ்டோரி சுபா அவர்கள் எழுதியது.

இதில் கற்ற பாடம்

ஐம்பது ரூபாய் மிச்சமாகிவிட்டது என்று பெருமைப்பட்ட (சரி கர்வப்பட்ட) கொஞ்ச நேரத்திலேயே அந்த நாவலை நான் விட்டு விட்டு அதற்குண்டான அபராத தொகை செலுத்த நேர்ந்தது தான்
கூட்டி கழிச்சி பார்த்தா கணக்கு கரெக்டா வருதுல்ல

இதிலே ஒரு காமெடி என்ன தெரியுமா

நான் திரைஅரங்கில் மறந்து விட்ட அந்த நாவல்

மறக்காத நெஞ்சம்

ஆம் அந்த நாவலின் பெயர் இது தான்


ஆர்.வி.சரவணன்



6 கருத்துகள்:

  1. அட ...
    தங்கள் அனுபவம் கூட ஒரு சிறுகதை போல.

    பதிலளிநீக்கு
  2. ஹஹாஹா.. பொருத்தமான பெயர்தான் :)

    பதிலளிநீக்கு
  3. அந்தக் கதையின் பெயரை இனி மறக்கவே மாட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஹா மறக்காத நெஞ்சத்த மறந்துட்டீங்க போலிருக்கு... ஏதாவது ஆன்மிக புத்தகமா இருந்திருந்தா யாரும் தொட்டிருக்க மாட்டாங்க.. சுபா நாவல். அதான் கமுக்கமா இருந்திட்டாங்க...

    பதிலளிநீக்கு
  5. சரவணன் தவற விட்டது தவறல்ல ஆனால் அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை நீங்கள் சரியாக உணர்ந்து கொண்டதே இதனால் உங்களுக்குக் கிடைத்த பயன். கூட்டி கழித்துப்பார்த்தால் உங்களுக்கு லாபம் தான் :-)

    சிலர் இதைப்போல அனுபவம் கிடைத்தாலும் அந்த அனுபவத்தை உணர மாட்டார்கள் இதை நீங்கள் உணர்ந்து இருப்பது வாழ்க்கையை சரியாக புரிந்து வருகிறீர்கள் என்று அர்த்தம்.யார் ஒருவர் தன் அனுபவங்களில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்கிறாரோ அவர் நிச்சயம் ஒரு நல்ல நிலையை அடைவார்.

    பதிலளிநீக்கு
  6. சின்ன சின்ன விஷயங்கள் கூட நம்மை பாதிக்கும் ... உங்கள் பதிவும் அப்படிதான் .. நீங்கள் அனுபவித்ததை எங்களுக்கு தந்தமையால் நாங்கள் அறிந்து கொண்டோம் புரிந்தும் கொண்டோம்... மனம் கவர்ந்த பகிர்தலுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்