சனி, ஜூலை 09, 2011

முரண்பாடுகள்


முரண்பாடுகள்

இரு கை சேர்த்து பக்தியுடன் பெறும் குங்கும பிரசாதம்
ஆலயமெங்கும் இறைந்துகிடந்தது


இறைவனை தரிசிக்க அனேக நுழைவு முறைகள்
இருப்பினும் ஆலய சுவரில் இருப்பதேன்னவோ
இறைவனின் முன் அனைவரும் சமம்


தட்டில் விழும் தட்சனைக்கு
ஏற்றவாறே பிரசாதமும்


கை விரல்கள் சுத்தமாக வேண்டி
அசுத்தமாகிறது ஆலய சுவர்


ஆர்.வி.சரவணன்

-------------------

அடுத்த பதிவு

(கல்யாணம் பண்ணிய பிரம்மச்சரிய வாழ்க்கையில்
உள்ள சவுகரியங்கள்)

------------------6 கருத்துகள்:

 1. முரண்பாடுகள்-இறைவனுக்கும் பக்தனுக்கும்!
  நல்லாயிருக்கு!!

  பதிலளிநீக்கு
 2. //கை விரல்கள் சுத்தமாக வேண்டி
  அசுத்தமாகிறது ஆலய சுவர்//
  மிக அருமை பாஸ்!

  பதிலளிநீக்கு
 3. இப்பிடி யெல்லாம் சொன்னா சாமி உங்க கண்ணை குத்த போகுது .. :-)

  பதிலளிநீக்கு
 4. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி

  இப்பிடி யெல்லாம் சொன்னா சாமி உங்க கண்ணை குத்த போகுது .. :-)

  மனதை இந்த விஷயங்கள் உருத்துவதால் தான் இந்த முரண்பாடுகள் பதிவு
  இதை எழுத வைத்தவரும கடவுள் தான் ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சார்...
  முரண்பாடுகள் நித்தம் கண்கூடாக கண்ட வலிகளின் பிரதிபலிப்பு ...
  இறைவனுக்கும் பணத்தாசை காட்டிய மனிதன் எவ்வளவு பெரிய புத்திசாலி...
  பதிவு செம கலக்கல் சார்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்