திங்கள், ஜூலை 18, 2011

பாட்ஷா பாரு பாட்ஷா பாரு ......பாட்ஷா பாரு பாட்ஷா பாரு ......

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீண்டு வந்துள்ள இந்த சந்தோசமான நேரத்தில் இந்த பதிவை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்


சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் எனக்கு ரொம்ப பிடிச்ச படம் பாட்ஷா (எங்களுக்கும் தான் அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது ) அந்த படத்தில் என்னை கவர்ந்த விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு (இவ்வளவு தாமதமானு கேட்காதீங்க) பழைய நினைவுகளை திரும்பி பார்ப்பதுஒரு இனிமையான அனுபவம் தானே எனக்கு பிடிச்சது தான் உங்களுக்கும் பிடிச்சிருந்துதா னு நீங்க சொல்லுங்களேன

இந்த படத்தின் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது இந்த படத்தில் ரஜினியின் நடிப்பில் என்னை வெகுவாக கவர்ந்த காட்சிகள் சிலவற்றை சொல்கிறேன்


* இந்த படத்திலேயே ரொம்ப முக்கியமான காட்சி இன்டர்வெல் க்கு முன்னாடி வர்ற பைட் சீன் தான் அந்த சீனுக்கு முன்னாடி ஒரு சீன் வரும் அதாவது ரஜினி சார் தம்பிக்கு பதிலா ரஜினி யை கட்டி வச்சி ஆனந்தராஜ் அடிச்சதுக்கு அப்புறம் ரஜினி கிட்டே அவர் தம்பி கேட்பார் "இப்படி அடிச்சிருக்காங்க உங்களுக்கு கோபமே வரலியா உங்களுக்கு கோபமே வராதா "அதற்கு ரஜினி தம்பியை பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க அர்த்தம் பொதிந்த சிரிப்பு இப்பவும் என் கண்ணிலேயே நிக்குது அவர் சிரிப்பு .

* அடுத்தது அந்த இன்டர்வெல் பைட் அப்ப ரஜினி தன தம்பி தங்கையைபார்த்து " உள்ளே போ" னு அதட்டலா மிரட்டலா சொல்வார் பாருங்க பார்க்கிற நமக்கு அப்படியே உடம்பு அதிரும் இன்னொரு முக்கியமான காட்சி காலேஜ் சீன் இந்த சீனை ரசிக்காதவங்க இருக்க முடியாது "எனக்கு இன்னொரு பேர் இருக்கு " னு ரஜினி சொன்னவுடனே சேதுவிநாயகம் சீட்டை விட்டு எழுந்து பயத்தோடு நிக்க ரஜினி இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி மெதுவா நடந்துகிட்டே பேசுவார். டயலாக் எதுவுமே இல்லாமல் ஆக்சன் லே ரஜினி சும்மா பின்னி பெடலடுதிருப்பார்


* அடுத்த காட்சி நக்மா கல்யாண சீன் ரஜினி நடந்து வர வர தேவனுக்கு பாட்ஷா வே எதிரில் வருவது போல் தோன்றும். இதிலே முக்கியமானது என்னன்னா நக்மா வின் கையை பிடிக்கு முன் ரஜினி தேவன் பக்கம் திரும்பி ஒரு லுக் விடும் போது தேவன் எடுத்துக்கோ எடுத்துக்கோ என்று அர்ப்பணிப்பது போல் செய்வாரே சும்மா கும்முன்னு இருக்கும் அந்த காட்சி கூடவே தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் என்று பாடல் தொடங்குவது அந்த காட்சிக்கு சிகரம் வைத்து போல் இருக்கும் .

* அதே போல் ரகுவரன் தான் தொத்து போயிட்டோம் னு தெரிஞ்சவுடன் போனில் "பாட்ஷா "என்று கத்த அதற்கு ரஜினி இங்கு "யா யா யா" என்று ஸ்டைல் ஆக சொல்வார் பாருங்கள் அரங்கமே அதிரும் நம் மனசே அதிர்வது போல் இருக்கும் .

* ரஜினியின் ஆட்டோ வை சேதப்படுத்தும் போது பொறுமையாய் நின்றிருப்பார் ,அது பொறுமையின் ஆரம்பம் என்றால் அந்த சேதமடைந்த ஆட்டோ அருகில் நின்று தன் அம்மாவை ஒரு கணம் பார்ப்பார் பாருங்கள் அது பொறுமையின் மையம் .நக்மா சாரி சொல்லும் போது உங்க ஆளுங்க வெயிட் பண்றாங்க பாருங்க நீங்க போங்க என்று சொல்லும் இடம் பொறுமையின் உச்சம் எனலாம்

பாடல்களில் எல்லாமே கேட்கவும் பார்க்கவும் அலுக்காதவை என்றாலும் நக்மா எல்லோரிலும் ரஜினியை பார்க்கும் அழகு பாடல் ஒரு நல்ல கான்செப்ட் இந்த கான்செப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது

எனக்கு இந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரே ஒரு ஆசைதோன்றும். அது என்னனா இப்படி ஒரு அருமையான படத்தின் கிளைமாக்ஸ் ஒரு பில்டிங் லே நடக்கிற மாதிரி வரும் . அதுவே ஒரு பெரிய கப்பல் அல்லது ஏர்போர்ட் அல்லது கார் பாக்டரி இந்த இடங்கள் லே நடக்கிறது போல் அமைச்சிருந்தா இன்னும் பிரம்மாண்டம் இருந்திருக்குமே என்று தான் .

அதே போல் "நான் ஒரு தடவை சொன்னா நுறு தடவை சொன்ன மாதிரி"வசனம் சூப்பர். இருந்தாலும் " ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான் நல்லவங்களை என்னிக்கும் கை விட மாட்டான்"என்று ரஜினி சொல்லும் வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு கஷ்டம் வரும் நேரங்களில் இதை சொல்லி தான் நான் மனசை சமாதானம் செய்து கொள்வேன்

இப்படி முழுவதுமே ரசிக்க தக்க எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மெகா ஹிட் படமான இது இந்த கால கட்டத்தில் எடுக்கபட்டிருந்தால் எவ்வளவுபிரம்மாண்டமாய் வந்திருக்கும் எவ்வளவு சாதனை படைத்திருக்கும் என்று நினைத்து பாருங்கள
நல்லாருக்கும் தானே


இந்த பதிவு நான் வலைத்தளம் ஆரம்பித்தவுடன் எழுதியது .பெரும்பான்மையோர் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் படிக்காதவர்களுக்காக மீண்டும் தந்திருக்கிறேன்


ஆர்.வி.சரவணன்

14 கருத்துகள்:

 1. இந்த படத்தை பற்றி சொல்வதானால் சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு காட்சியும் மனப்பாடம். நீங்கள் சொன்ன தங்கமகன் பாடலுக்கான லீட் சீன் அப்போது எல்லா பத்திரிக்கைகளிலும் குறிப்பிட்டு பாராட்டப்பட்ட காட்சி. பகிர்வுக்கு நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. தாங்கள் குறிப்பிட்ட அத்தனை சீனுமே மயிர்க்கூச்செறிபவை, அருமையான மீள்பதிவு .

  பதிலளிநீக்கு
 3. இவ்வளவு ஆழமான, அழகான விமர்ச்சனத்தை யாரும் தந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜராஜேஸ்வரி

  பதிலளிநீக்கு
 5. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவதர்ஷன்
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்

  பதிலளிநீக்கு
 6. எனக்கும் மிகவும் பிடித்த படம் இது.

  பதிலளிநீக்கு
 7. இந்தப் படம் நான் பாதிதான் பாத்திருக்கேன் சரவணன். பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
 8. மனதை விட்டு நீங்கா ஒரு அற்புத படைப்பை உங்களின் ஸ்டைலில்
  அழகாய் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க சார் ..

  பதிலளிநீக்கு
 9. இந்த படத்தில் தலைவரின் நடிப்பும்
  அழகும் நெஞ்சை அள்ளும்///

  பதிலளிநீக்கு
 10. நண்பரே உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்னு நினைக்காம, நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.

  http://balapakkangal.blogspot.com/2011/07/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 11. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமாரன்
  இன்னும் பார்க்கலையா பாருங்க தங்கள் வருகைக்கு நன்றி சுசி

  பதிலளிநீக்கு
 12. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா கண்டிப்பாக எழுதுகிறேன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்