சனி, பிப்ரவரி 26, 2011

நான் என்ன சொல்றேன்னா ...



நான் என்ன சொல்றேன்னா (பல் சுவை பதிவு )


பார்த்தது

யுத்தம் செய் பார்த்தேன் காதல் காமெடி என்று எதுவும் இல்லாமல் ஒரு த்ரில்லர் படம் சேரன் அழுத்தமாய் அலட்டல் எதுவும் இல்லாமல் நன்றாக செய்திருக்கிறார் ஒரு குடும்பம் பழி வாங்கும் வித்தியாசமான கதை களன் கொண்ட இந்த படம் பற்றி மிஷ்கின் சார் படம் நல்லா பண்ணியிருக்கீங்க என்று சத்தம் செய் ய தோன்றுகிறது
படித்தது

ஒரு கிரிக்கெட் குழுவை கோடிகணக்கில் பணம் கொடுத்து விலைக்கு வாங்க கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள் . அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கை கூட நாட்டு நல பணிகளுக்கு செலவு செய்ய செல்வந்தர்கள் இல்லை
(நண்பர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் படித்தது)



கேட்டது (தொடர்ந்து கேட்பது)

மலேசியா வாசுதேவன் திரை இசை யில் தன் குரலால் நமை வசீகரித்தவர் இப்போது இல்லை என்றாலும் அவர் குரலால் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் .அவர் பாடிய பூங்காற்று திரும்புமா நான் அடிக்கடி மனம் கஷ்டப்படும் நேரங்களில் கேட்கும் பாடல். இப்பொழுதும் கேட்கிறேன். மலேசியாவாசுதேவன் எனும் இந்த பூங்காற்று திரும்புமா ?

ஆதங்கம்

பஸ் டே என்ற பெயரில் மாணவர்களின் சந்தோச கொண்டாட்டத்தில் மற்றவருக்கு திண்டாட்டம் தான் ஏற்படுகிறது . இதை அவர்கள் கொஞ்சம் யோசிக்கலாமே .அவர்கள் சந்தோஷம் மற்றவர்களும் பார்த்து பெருமிதப்படுவதாக இருக்க வேண்டும் என்பது
அந்த மாணவ பருவத்தை கடந்தவர்களின் (எனது )ஆதங்கம்
வருத்தம்

தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுடப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் பிழைப்பில் மண் போடுவது என்று சொல்வார்கள் இங்கே மீனவர் உயிருக்கே உலை வைக்கப்படுகிறது. மீனவர் பிழைப்புக்காக கடலில் செல்லும் போது அவர் தம் குடும்பம் நல்ல படி திரும்ப வர வேண்டும் என்று காத்திருப்பது போய், இன்று உலகில் இருக்கும் அனைத்து தமிழர் களும் மீனவர்கள் கடலுக்குள் சென்று வரும் வரை கலக்கத்துடன் காத்திருக்கிறோம்

மகிழ்ச்சி
எனது நூறாவது பதிவு ஆனந்த விகடனின் யூத் புல் விகடன் தளத்தில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது விகடனின் நீண்ட நாள் வாசகனாகிய எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அள்ளி வழங்கியிருக்கிறது
உங்களுடன் அந்த மகிழ்வை பகிர்வதில் எனக்கு போனஸ் மகிழ்ச்சி தான்
நன்றி யூத் புல் விகடன்

final punch

தூரத்தில் உள்ளதை எதிர்பார்த்து
அருகில் உள்ளதை அலட்சியம் செய்யாதே

உழைப்பே ஓய்வுக்கு திறவு கோல்
சுறுசுறுப்பே செல்வத்திற்கு திறவு கோல்

ஆர்.வி.சரவணன்

17 கருத்துகள்:

  1. சார் அனைத்தும் கலக்கல் ...

    நல்ல பகிர்வு ...

    தொடர்ந்து கலக்குங்க

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சி
    எனது நூறாவது பதிவு ஆனந்த விகடனின் யூத் புல் விகடன் தளத்தில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது//

    தங்களின் இந்த மகிழ்ச்சியில் நானும் பங்கு எடுத்து கொள்கிறேன் ...
    மிக்க நன்றிங்க

    பதிலளிநீக்கு
  3. கடைசியில் தத்துவம் செம அருமை ...
    மொத்தத்தில் பதிவு செம கலக்கல்

    பதிலளிநீக்கு
  4. தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்...

    அன்புடன்
    பாரி தாண்டவமூர்த்தி

    http://blogintamil.blogspot.com/2011/03/1.html

    பதிலளிநீக்கு
  5. தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்...

    அன்புடன்
    பாரி தாண்டவமூர்த்தி

    http://blogintamil.blogspot.com/2011/03/1.html

    பதிலளிநீக்கு
  6. நல்லா இருக்கு எல்லாமே. விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. பல்சுவை பதிவு அருமை!
    உங்க மகிழ்ச்சியில் நானும் மகிழ்கிறேன்... வாழ்த்துக்கள் சரவணன்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லாமார்ச் 02, 2011 5:58 AM

    ஆனந்த விகடனில் பரிமளித்தமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்

    வாங்க அரசன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    என்னை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி பாரி

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பிரியா

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் குறட்டை புலி

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வானதி

    பதிலளிநீக்கு
  11. நல்ல பகிர்வு
    அருமை

    பதிலளிநீக்கு
  12. பார்த்தது;
    படித்தது;
    கேட்டது
    -இப்படி பலவகையான
    கதம்பமாய், பதிவு
    (பல்)சுவை!

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லாஜூன் 28, 2011 4:48 AM

    Better late than never. I am late in sharing my thoughts with you all. Knowledge is to be shared. Saravanan is doing that wonderfully. "Winning is not everything in the life but wanting to win itself is great" Keep it up Saravanan! - Rajaram, Mumbai

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்