வெள்ளி, அக்டோபர் 08, 2010

ஒரு காதல் என்பது ....


ஒரு காதல் என்பது ....

மனம் கவர்ந்த பாடல்கள் 4

நான் அவ்வபோது என் சொந்த ஊர் செல்வேன் இரவில் பேருந்தில் தான் செல்வேன் அப்படி செல்லும் போது ஜன்னலோரம் சீட் கிடைத்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும் கொஞ்ச நேரம் தான் தூங்குவேன்.

பேருந்து செல்லும் வேகத்தில் மரங்கள் வயல்வெளி வழியில் வரும் ஊர்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்த படி செல்வேன் . அப்படி செல்லும் போது கூடவே பாடல்கள் கேட்டு கொண்டு செல்வேன் எனது செல் போனில் பாடல்கள் சேமிப்பில் பெரும் பங்கு இளையராஜா மெலோடீஸ் தான் இருக்கும்.

அப்படி ஒரு முறை செல்லும் போது இந்த பாடலை கேட்டேன் பாலசுப்ரமணியம் ஜானகி அவர்களின் வசீகர குரல்களில் டிரம்ஸ் ஒலி எழுப்பும் இன்ப அதிர்வுகள் ,பாடல் முழுவதும் வரும் படி இளையராஜா அவர்கள் செய்திருக்கும் இசை இனிமை அருமையாக இருந்தது

இந்த பாடல் எத்தனையோ முறை கேட்டிருந்தாலும் அந்த இரவில்
அந்த பாடல் என்னை வெகுவாய் கவர்ந்தது

நீங்கள் கேட்டிருப்பீர்கள் இருந்தாலும் எனக்காக ஒரு முறை
இளையராஜா தந்திருக்கும் இந்த இனிமையை கேளுங்கள்

படம் சின்ன தம்பி பெரிய தம்பி

நடிகர் நடிகை சத்யராஜ், பிரபு ,நதியா

இயக்கம் மணிவண்ணன்

பாடல் வாலி

படம் வெளி வந்த ஆண்டு 1987

பாடலின் வீடியோ லிங்க் முகவரி

http://www.youtube.com/watch?v=NRCCjGLyD4o&feature=related

படம் நன்றி கூகுள்

ஆர்.வி.சரவணன்

10 கருத்துகள்:

  1. என்னோட ஆல் டைம் பேவரிட் நதியா, எனக்கு பிடித்த நடிகர்கலீல் ஒருவரான பிரபு கூடவே சக்கரவர்த்தி இளையராஜா, பாட்டு பிடிக்காமல் இருக்குமா? எனக்கும் தூர பயணங்களில் ஜன்னலோரத்தில் பாட்டுக்கேட்டுக்கொண்டே பயணிப்பது சுகமான சந்தோசம், வரும் ஞாயிறுகூட எனக்கு அந்த சந்தர்ப்பம் வரவிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. சின்னத்தம்பி பெரியதம்பி இசை கங்கை அமரன், ராஜா சார் இல்லை :-)

    பதிலளிநீக்கு
  3. நல்ல பட்டுதான் அமைதியான இசை..!!

    பதிலளிநீக்கு
  4. கேட்கும்போதே தாலாட்டும் உணர்வை கொடுக்க கூடிய பாடல்தான்.

    பதிலளிநீக்கு
  5. ந‌ல்ல‌ பாட‌ல் தான்... இனிமையான‌ ராக‌ம்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி ச‌ர‌வ‌ண‌ன்.

    பதிலளிநீக்கு
  6. நானும் இளையராஜாவின் 80-90 மெலோடீஸ் கேட்பதில் அதிக நேரம் செலவிடுவேன். நண்பரே. என் மொபைலில் 200 பாடல்களுக்கு மேல் இருக்கிறது.
    நல்ல பாடல் அறிமுகம் வாழ்த்துக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. Its my favourite too. Good to hear it after a while. Thanks for sharing the link (Nadhiya is my all time favourite same as Prabhu)

    பதிலளிநீக்கு
  8. நன்றி சுசி

    நன்றி தேவதர்ஷன் நான் கூட நதியா ரசிகன் தான்

    நன்றி ஜெய்லானி

    நன்றி சைவ கொத்து பரோட்டா

    நன்றி ஸ்டீபன்

    நன்றி குமார்

    நன்றி தங்கமணி

    பதிலளிநீக்கு
  9. //சின்னத்தம்பி பெரியதம்பி இசை கங்கை அமரன், ராஜா சார் இல்லை//
    உண்மைதான். ஆனால் "ஒரு காதல் என்பது" பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா.ஒரு நிகழ்ச்சியில் க்ங்கை அமரனே சொன்னது இது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்