சனி, அக்டோபர் 16, 2010

மௌனமான நேரம் .............


மௌனமான நேரம் .............

மனம் கவர்ந்த பாடல்கள் 5

சலங்கை ஒலி படத்தில் வரும் மௌனமான நேரம் .............

இந்த பாடலின் காட்சியில் தன் நண்பனையும் அவன் மனைவியையும் முதலிரவு அறைக்குள் அனுப்பி விட்டு கமலும் ஜெயப்ரதாவும் தங்கள் காதலை எப்படி தங்களுக்குள் பரிமாறி கொள்வது என்ற தவிப்புடன் நடந்து வருவார்கள் ஒருவரை ஒருவர் பார்த்த படி. இளையராஜா இந்த காட்சிக்காக செய்திருக்கும் இசை யாகம் தான் இந்த பாடல் எனலாம் .

S.P.பாலசுப்ரமணியம் ,S. ஜானகி இருவரும் அந்த காதல் தவிப்பை தங்கள் வசீகர குரல்களில் (அந்த இசை யாகத்தில் ஊற்றப்படும் நெய் போல்) அப்படியே பதிவு செய்திருப்பார்கள்

எப்பொழுது கேட்டாலும் நம்மை அமைதியின் சிகரத்திற்கு அழைத்து செல்லும் இந்த ராக தேவனின் இந்த இசை வார்ப்பை நீங்களும் ஒரு முறை எனக்காக கேளுங்கள்

இந்த பாடலின் படம் சலங்கை ஒலி

நாயகன் நாயகி கமல்ஹாசன் ஜெயப்ரதா

இந்த பாடல் எழுதியது வைரமுத்து

பாடல் பாடியவர்கள் S.P.பாலசுப்ரமணியம் ,S. ஜானகி

இயக்கம் கே.விஸ்வநாத்

படம் வெளியான ஆண்டு 1983

ஆர்.வி.சரவணன்

10 கருத்துகள்:

 1. எனக்கு மிகவும் பிடித்த பாடல், சிறப்பாக காட்சியும் அமைக்கப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலில் ஜெயப்பிரதாவின் அழகை என்னவென்று சொல்வது? :-)

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பாட்டு! இதிலும் கமழும் ஜெயப்ரதாவும் அவ்வளவு அழகு!

  YouTube ல இருந்து பாட்டை போட்டு இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல பாடல். கேட்கும்போதே காட்சி நினைவு வரும்..

  பதிலளிநீக்கு
 4. பாட‌ல்க‌ள் எல்லாம் ந‌ல்லா தேர்ந்தெடுத்து போடுறீங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்..

  பதிலளிநீக்கு
 5. நன்றி தேவதர்ஷன் எனக்கு பிடித்த நடிகைகளில் ஜெயப்ரதாவும் ஒருவர்

  நன்றி கிரி பாடல் காட்சி யை இனி இணைக்க முயற்சி செய்கிறேன்  நன்றி சுசி

  நன்றி ஸ்டீபன்

  பதிலளிநீக்கு
 6. என்பெயர் தேவதர்ஷன் இல்லை, ஜீவதர்ஷன் :-)

  பதிலளிநீக்கு
 7. நன்றி ஜீவதர்ஷன்

  நன்றி சைவ கொத்துபரோட்டா

  நன்றி குமார்

  நன்றி வானதி

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்