திங்கள், ஜூன் 10, 2013

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு....


செவ்வந்தி பூக்களில் செய்த வீடு....

(மனம் கவர்ந்த பாடல்கள்) 

படம். மெல்லப் பேசுங்கள் 

வெளியான வருடம் 1983  
இயக்குனர்கள்: பாரதி வாசு (சந்தானபாரதி – P.வாசு )
நாயகன்: வசந்த் (ராஜாதிராஜா படத்தில் ராதாரவி கூட வருவார் 
சீரியல்களில் நடித்திருக்கிறார் 
நாயகி: பானுப்ரியா (அறிமுகம்)

பாடல் : எம்.ஜி.வல்லபன் இந்த படத்தில் ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்ற  ஒரு சுகமான 
காதல்  பாடல் கேட்பதற்கு  வெகு இனிமையானது 
இந்த பாடல் ஆரம்பிக்கும் முன் ஒரு ஒற்றைக் குயிலின் பாட்டுச் சத்தமும்… தொடர்ந்து புள்ளினங்களின் சத்தமும், மாணிக்கவாசகரின் சிவபெருமான திருப்பள்ளியெழுச்சி வரிகளும் ஒலிக்கும்.. கேட்கும் நமக்கு பரவசத்தை அளிக்கும் 
‘கூவின பூங்குயில், கூவின கோழி…
குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்..
யாவரும் அறிவறியாய்! எமக்கு எளியாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே…’
உமா ரமணன் குரலில் ஆரம்பிக்கும் வரிகளுக்கு பின்  ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்று பாடல் ஒலிக்க ஆரம்பிக்க கூடவே  தொடர்வது   தீபன் சக்ரவர்த்தியின்  இனிய குரல். இந்த குரல்களே ஒரு இனிமை என்றால் அந்த இனிமைக்கே  மகுடம் வைத்தார் போன்றது  இந்த பாடலுக்கு இளையராஜா தந்திருக்கும் இசை 
கேட்காதவர்கள் கேட்டுப் பெறுங்கள் இந்த உற்சாகத்தை

இது என்வழி வலை தளத்தில் 2010 இல் நான் எழுதியது 

நன்றி வினோ என்வழி 


ஆர்.வி.சரவணன் 7 கருத்துகள்:

 1. படம் வந்த புதிதில் எத்தனை முறை இப் பாடலை ரசித்தேன் என்று ஞாபகமில்லை... இனிமையான பாடல்... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. மிகவும் ரசித்தேன் நல்ல பாடல் வரிகள்.

  பதிலளிநீக்கு
 3. இன்னும் காதில் ஒலிக்கும் மனதை மயக்கும் பிடித்த பாடல் சார்!!

  பதிலளிநீக்கு
 4. மிகவும் அழகான பாடல்..

  ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 5. நீங்களும் ரசித்து, அதை எங்களுக்கும் பகிர்ந்ததற்கு நன்றி!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்