புதன், மே 26, 2010

என் கவிதை அரும்புகளும்

குடந்தையூர் ப்ளாக் ஆரம்பித்த இந்த இரண்டு மாதங்களில் 25 வது இடுகையை நெருங்கும் இந்த நேரத்தில், சைவ கொத்துபரோட்டா அவர்களும் ஜெய்லானிஅவர்களும் எனக்கு இரு விருதுகளை அன்புடன் தந்து என்னை மேலும் உற்சாக படுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு என் நன்றி.

இந்த இரு விருதுகளை என் இடுகைகளை தொடர்ந்து படித்து என்னை ஊக்கபடுத்தி வரும் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்

ஐந்தாவது படிக்கும் என் மகன் ஹர்ஷவர்தன் இந்த தளத்தில் வெளியிட வேண்டும் என்று விரும்பி வரைந்த ஓவியத்தை இங்கு வெளியிட்டுள்ளேன்.

கூடவே எனக்கு தோன்றிய சில வரிகளையும் தந்திருக்கிறேன்S. ஹர்ஷவர்தன்

பளிங்கு கின்னமெடுத்து அதில் தங்க குழம்பெடுத்து

வைர துகள்கள் சங்கமிப்பில்

விளைந்த பொற்சிலையே

உன் விழி பார்வை தொடுகையில்

என் கவிதை (வரிகள்) அரும்புகளும் பூக்கின்றன

ஆர்.வி. சரவணன்10 கருத்துகள்:

 1. சரவணன் ஹர்ஷா வரைந்த ரஜினி படத்தை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்

  பதிலளிநீக்கு
 2. நல்ல திறமை இருக்கிறது உங்கள் மகனிடம்... அவர் வரைவதை இப்படி அடிக்கடி பதிவு செய்து தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். எனது பாராட்டுக்களை தெரிவித்து விடுங்கள்.

  மகன் ஓவியன் என்றால் அப்பா கவிஞர்! ம்ம்.....அழகான குடும்பம்!

  பதிலளிநீக்கு
 3. யாரை பாத்து வரைஞ்சது இது. கண்ணழகி கனகாவா ? . படம் அழகு..இன்னும் டிரைனிங் குடுங்க .


  விருதுக்கு வாழ்த்துக்கள்.....

  பதிலளிநீக்கு
 4. பைய‌னின் திற‌மையை ஊக்க‌ ப‌டுத்துங்க‌ள்... ஓவிய‌ம் ந‌ல்லா இருக்கு.. வாழ்த்துக்க‌ள்..

  பதிலளிநீக்கு
 5. நன்றி கிரி

  நன்றி ப்ரியா
  நன்றி நாடோடி
  நன்றி பத்மா

  யாரை பாத்து வரைஞ்சது இது. கண்ணழகி கனகாவா

  இல்லை ஜெய்லானி

  சரித்திர கதையில் வரும் நாயகியை பார்த்து அதை போல் வரைய முயற்சித்திருக்கிறான்

  பதிலளிநீக்கு
 6. //சரித்திர கதையில் வரும் நாயகியை பார்த்து அதை போல் வரைய முயற்சித்திருக்கிறான்//

  'சரித்திர நாயகி'யை வரைந்த ஹர்ஷவர்தன்

  சரித்திர நாயகனாய் மிளிர

  எனது நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. மகன் வரைந்த ஒவியம் மிக அழகா இருக்கு,அவருக்கு என் பாராட்டுக்கள்..அவர் வரைந்த ஒவியத்தை தொடர்ந்து போட்டு ஊக்கபடுத்துங்கள்...

  பதிலளிநீக்கு
 8. சரவணன்... பையன இன்னும் என்கரேஜ் பண்ணுங்க... அப்பப்ப இந்தமாதிரி வரையச்சொல்லி ப்ளாக்ல போடுங்க... அவருக்கும் உற்சாகமா இருக்கும்... எங்களுக்கும் ஒரு சிறுவயது ஓவியனை பார்க்கும் திருப்தி கிடைக்கும்...

  எனது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள்....

  பதிலளிநீக்கு
 9. நன்றி நிஜாமுதீன்
  நன்றி மேனகா சத்யா
  நன்றி பாலாசி

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்