வியாழன், மே 07, 2015

உத்தம வில்லன்




உத்தம வில்லன் 

திரைப்படத்திற்குள் ஒரு திரைப்படமாக  வரும் உத்தமன் கதையில்,
கமல் அரண்மனைக்குள் நுழையும் வரையிலான காட்சிகள், 
மகளும் மகனும் பேசிக்கொண்டிருக்க வெளியில் வந்து ஜன்னலில் பார்த்து கமல் பெறுமிதப்படும் காட்சி, 
காதலியின் கடிதத்தை எம் எஸ் பாஸ்கரை விட்டே கமல் படிக்க விடும் தியேட்டர் காட்சி, 
அழகான ஆறுதலாய்  ஆண்ட்ரியா, 
கோப முகம் காட்டி வார்த்தை கத்தி வீசும் கே.பாலச்சந்தர், 
கோபத்துடன் எழுந்து வெளியேறும் போது கமல் உதவ முற்படுகையில் வேண்டாம் என்று உக்ரம் காட்டி தானே சிரமத்துடன் கம்பீரம் காட்டி நடந்து செல்லும் விஸ்வநாத், 
சினிமா நடிகன் மனோ ரஞ்சனுக்கு இருக்கும் நோய் வீட்டுக்கு தெரிய வருகையில் அது வரை வீட்டில் எதிர்த்தவர்கள் காட்டும் உணர்வுகளின் வெளிப்பாடுகள் 
என்ற சுவாரஸ்யமான காட்சிகளின் சிகரமாக,
கமலும் அவர் மகனும் பந்து விளையாடி கொண்டே உரையாடி நெகிழ்ந்து கட்டி கொள்ளும் காட்சியை ஒரு அற்புதம் எனலாம்.என்ன,அந்த உத்தம காட்சியை ரசிக்க விடாமல் என் கண்களை வில்லனாய் மாறி கண்ணீர் திரையிட்டு விட்டது.
ஒரு மிக பெரிய இயக்குனர் இயக்க பெரிய நடிகர் நடிக்க உருவாகும் படத்தின் கதை இன்னும் வலுவானதாக இருந்திருக்க வேண்டுமே என்ற கேள்வி எழுந்தாலும் இரு கதைகளையும் ஆங்காங்கே இணைத்த படி நகரும் திரைக்கதை ரசிக்க வைத்திருக்கிறது.(உதாரணமாக ஹீரோ மனோரஞ்சன் சாவை எதிர்பார்த்தவராகவும்  அவர் நடிக்கும் கதையில் வரும் உத்தமன் சாகாவரம் பெற்றவனாகவும் காட்டப்பட்டிருப்பது)  
கமலை பாராட்ட வார்த்தைகளை நமக்கு விட்டு வைக்காமல் படத்தில் வரும் மார்கதர்சி (பாலச்சந்தர்)யே மனோரஞ்சனை நிறைய முறை பாராட்டி விடுகிறார். இருக்கட்டும் 

வாழ்த்துக்கள் கமல் சார். 

நண்பர் கோவை ஆவியும் நானும் இப் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றால் படம் வெளியாகவில்லை என்ற தகவல் பலகை தான் எங்களை வரவேற்றது. பின் நாங்கள் குறும்பட படப்பிடிப்புக்காக அன்று பாலக்காடு செல்ல வேண்டி இருந்தது. அங்கே பாலக்காடு அரோமா தியேட்டரில் தான் இப் படம் பார்த்தோம். அது ஒரு இனிய அனுபவமாக இருந்தது.

ஆர்.வி.சரவணன் 

3 கருத்துகள்:

  1. அவசியம் பார்க்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. படத்துக்குள்ளே ஒரு படம் என்ற கான்செப்ட் சத்யஜித் ரே யினால் சுமார் 50 ஆண்டுகட்கு முன்னாலே கையாளப்பட்டது.

    அதுவும் ஒரு நடிகன் ( அங்கே டைரக்டர் ) வாழ்க்கையை மிகவும் as is where is என்று சொல்வார்களே அது போல, இயல்பாக காட்டி இருந்தார். உலக அளவில் பிரபலமான படம் அது.

    நீங்கள் சொல்வது போன்று தான் பத்திரிகைகளும் விமரிசனம் எழுதியிருக்கின்றன.

    ஒரு நடிகரின் சொந்த வாழ்வு சொர்க்கம் என்றுபலர் நம்மிடையே நினைக்கிறோம். அந்த வாழ்க்கையிலும் சுக துக்கங்கள், ஏற்றத் தாழ்வுகள், தவறுகள், நல்லவை கெட்டவைகள் ஒரு சராசரி மனிதனின் வாழ்வு போல் தான் என்று

    இந்தப் படம் சொல்கிறது போலும்.

    உங்களுக்கே உரித்தான பாணியில் விமர்சனம் செய்து
    எங்கள் பாராட்டுகளைப் பெற்று விட்டீர்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்