திங்கள், மே 09, 2016

பாக்யா வார இதழில் திருமண ஒத்திகைபாக்யா வார இதழில் திருமண ஒத்திகை 
(தொடர்கதை )

குமுதத்தில் வெளி வந்த மௌன கீதங்கள் திரைக்கதை தொடர்  படித்து, படம் பார்த்த பின் திரு. கே. பாக்யராஜ் அவர்களின்  ரசிகனானேன் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவரது படங்கள் வெளி வரும் நாளெல்லாம்  எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான்.பாக்யா வார இதழை பாக்யராஜ்  துவங்குகையில், வருடம் ஒரு முறை படங்களின் மூலமாக உங்களை சந்தித்த நான் இனி வாரம் ஒரு முறை பாக்யா வார இதழ் மூலமாக உங்களை  சந்திக்க இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 

பாக்யா வார இதழ் ஒவ்வொரு வாரம் வெளி வரும்போதும், அவரது படத்தை  எதிர்பார்க்கும் அதே குதூகலத்துடனே எதிர் கொண்டேன். தொடர்ந்து ஒரு வாசகனாய் மட்டுமே பாக்யாவை படித்து வந்த எனக்கு, இணையத்தில் எழுத ஆரம்பித்த பிறகு பாக்யாவில் என் படைப்பும் வெளியாக  வேண்டும் என்ற ஆசை துளிர் விட ஆரம்பித்தது. 

இப்படியான சூழலில் தான் முக நூல் நண்பர்  எஸ்.எஸ்.பூங்கதி்ர் மூலமாக பாக்யா வார இதழின் வாசகர் கமெண்ட் பகுதியில் முதன் முதலாக  எனது கமெண்ட் வெளியானது. சில வரிகளே தான் என்றாலும் அது எனக்கு கொடுத்த உற்சாகம் மிக பெரிது. அதற்கு பின்  பூங்கதிர் மூலமாக, பாக்யராஜ் அவர்களை சத்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அந்த அனுபவங்களை பதிவாகவும் எழுதியிருக்கிறேன்.

இது நம்ம பாக்யராஜ்

பின் எனது இரு சிறுகதைகள் பாக்யாவில்  வெளியானது. அது  வெளியான  விதத்தை பற்றி குறிப்பிடும் எனது பதிவு.

எனது இளமை எழுதும் கவிதை நீ.... நாவல் வெளியீட்டுற்கு பின் அடுத்ததாக நான் எழுத ஆரம்பித்த திருமண ஒத்திகையை குடந்தையூர் தளத்தில் பாதி வரை எழுதி  நிறுத்தியவன் மீதமுள்ள அத்தியாயங்களை  எழுதி முடித்து, புத்தகமாக வெளியிட முடிவு செய்த போதே, இந்த புத்தகத்திற்கான அணிந்துரையை  பாக்யராஜ் அவர்களிடம் தான் கேட்டு பெற வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். எவ்வளவு நாளானாலும் பரவாயில்லை என்ற உறுதியுடன்  அவரை சந்திப்பதற்காக  காத்திருந்தேன்.

இந்த சூழ்நிலையில், நண்பர் எஸ்கா மூலமாக நான் இணைந்த வாட்ஸ் அப் குழுமத்தில் நண்பர் பாப்பனப்பட்டு வ.முருகன் அவர்கள் பாக்யாவில் தொடர்கதை தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதைப் பார்த்து திருமண ஒத்திகை  கதையை பற்றி சொல்லி அனுப்பி வைத்திருந்தேன். சில நாட்களுக்கு பின் பாக்யாவிலிருந்து எனை வரச் சொல்லி பாக்யராஜ் உதவியாளர் மூர்த்தி நடராஜன் போன் செய்தார்.  ஆவலுடன் சென்றிருந்தேன். பாக்யராஜ் அவர்கள் கதையை கேட்டுவிட்டு சில கரெக்‌ஷனுடன் பாக்யாவில் தொடர்கதை வெளியிட ஒப்புதல் அளித்தார். 

பாக்யராஜ் அவர்களின. அணிந்துரையுடன் புத்தகமாக வெளியிட விரும்பியவனுக்கு,  பாக்யாவில் அது தொடர்கதையாகவே  வெளி வரும் வாய்ப்பையே  கடவுள் ஏற்படுத்தி தந்திருக்கிறார்.


இதோ திருமண ஒத்திகை தொடர்கதை இந்த வாரம் (மே 6-12) பாக்யா வார இதழில்  ஆரம்பமாகி விட்டது.எத்தனையோ நாட்கள் நம் எழுத்துக்களும் பத்திரிகைகளில் வராதா என்று ஏங்கியிருக்கிறேன்.  ஆனால் அப்படி வராதது இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைப்பதற்காக தான் எனும் போது மோதிரக்கையால் குட்டுப்பட்ட ஒரு சிஷ்யனின் உற்சாகத்தை உணர்கிறேன். 

இந்த இனிய  தருணத்தை எனக்களித்த ஆசிரியர்  பாக்யராஜ் அவர்களுக்கு 
என் இதயம் நிறைந்த நன்றி.

பாக்யா ஆசிரியர் குழு, தொடர்ந்து  ஊக்கமளித்து வரும்  நண்பர்கள் எஸ். எஸ் பூங்கதிர், பாப்பனப்பட்டு வ.முருகன், மூர்த்தி நடராஜன்,  அரசன், கோவை ஆவி, மனசு குமார், துளசிதரன், நிஜாமுதீன், எஸ்கா கார்த்திக், கீதா ரங்கன், மற்றும் வலைபதிவ நண்பர்கள், முக நூல் நண்பர்கள், வாட்ஸ்அப் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.

இரண்டாவது அத்தியாயம் 
தொடர்கதையை படித்து நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
என்றும் அன்புடன்

ஆர்.வி.சரவணன்.

10 கருத்துகள்:

 1. ரொம்ப சந்தோஷம் அண்ணா...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் சரவணன்.....

  பதிலளிநீக்கு
 3. சார்; சூப்பர்; வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் சரவணன் சார்!

  தங்கள் புதிய முயற்சிகள் வெற்றியுடன் தங்களிடம் தஞ்சமடைவதைக் காண்கையில் உள்ளத்தில் மகிழ்ச்சிப் பிராவகம்... தொடருங்கள்... வென்றிடுங்கள்!

  ...

  பதிலளிநீக்கு
 5. என்னிடம் போனில் பேசியபோதே, தகவல் தெரிவித்தீர்கள்.
  மீண்டும் அதை இங்கே பதிவாய் படிப்பதில்...
  மறுபடியும் மகிழ்ச்சி!

  ...

  பதிலளிநீக்கு
 6. // பாக்யராஜ் அவர்கள் கதையை கேட்டுவிட்டு சில கரெக்‌ஷனுடன் பாக்யாவில் தொடர்கதை வெளியிட ஒப்புதல் அளித்தார். //

  பதிலளிநீக்கு
 7. அவை என்ன கரெக்ஷன்ஸ்?

  சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்!!!

  பதிலளிநீக்கு
 8. எனது பெயர் முஹம்மத் பாரிஸ். ஜப்பானில் பொறியியலாளர் ஆக பணி புரிகின்றேன்.
  நான் திரு :பாக்கியராஜ் அவர்களின் ரசிகன். எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது திரு: பாக்கியராஜ் அவர்களுடன் சில நிமிடங்கள் கதைப்பதற்கு.இதற்கு நீங்கள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி உதவி செய்வீர்களா?

  Fathima.ameena16@gmail.com

  Mobile: +819091654582

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை வரும் போது சொல்லுங்கள். பார்க்க ஏற்பாடு செய்கிறேன்

   நீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்