திங்கள், அக்டோபர் 20, 2014

மூன்றாம் ஆண்டு தமிழ் வலைபதிவர் திருவிழா 2014
மூன்றாம் ஆண்டு  தமிழ் வலைபதிவர் திருவிழா 2014

நதிகள் பலவும் ஒன்றிணைந்து கடலொன்று உதயமாகிறது என்று வலைபதிவர் சந்திப்பை பற்றி முன்பு சொல்லியிருந்தேன். 
 இதோ அந்த கடல் இந்த வருடம் மதுரையில். இரண்டு வருடங்களாக சென்னையில் நடைபெற்ற வலைபதிவர் சந்திப்பு திருவிழா  இவ் வருடம்  மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில்  நடைபெறுகிறது.

 தென் தமிழ் மாவட்டங்களில் எனக்கு பிடித்த   ஊர்களில் மதுரையும் ஒன்று. மதுரையில் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இதை நான் சொல்லவில்லை. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அழகர் மலை பழமுதிர்சோலை திருபரங்குன்றம்,  மாரியம்மன் கோவில் தெப்பக்குளம்
 என்று பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒரு புறம், வருடா வருடம் வைகையில் அழகர்  இறங்கும் அழகும், அதை தொடர்ந்து அவர் வரும் திருவீதி உலா 
என்று நான் ரசிக்க தூங்கா நகரமான மதுரையில் ஏராளம் உண்டு.  இப்படி எனக்கு பிடித்தமான  மதுரையில் பதிவர் திருவிழா நடைபெறுகிறது எனும் போது மகிழ்ச்சி தானே 

பதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி

பதிவர் திருவிழா 2013 - ஒரு பார்வை

சென்ற இரண்டு வருடங்களின் பதிவர் சந்திப்பை பற்றிய என் அனுபவ பதிவுகளை இன்று படித்த போது,  வீட்டில் நடைபெறும் விழாவுக்கு வரும் உறவினர்களை சந்திக்கும் குதூகலத்திற்கு நிகரானது தான் இந்த விழா 
என்றே தோன்றுகிறது.

மூன்றாவது வலைபதிவர் சந்திப்பை பற்றி பார்ப்போம் 

 மதுரை வலைபதிவர் சந்திப்பில் தங்கள் வருகையை பதிவு செய்ய


 நன்கொடை அளிக்க

விழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள்  மற்றும் விழா நிர்வாக குழு பற்றிய விபரங்கள் 
விழாவின் நிகழ்ச்சி நிரல்  


இப் பதிவர் திருவிழாவின் ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி வரும் 
திரு .சீனா ஐயா , திரு ரமணி, திரு .தமிழ்வாசி பிரகாஷ், திரு திண்டுக்கல் தனபாலன் மற்றும் அனைத்து  நண்பர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்தும்

தொழில்நுட்ப பதிவர்களுக்கு பாராட்டு, பதிவர்கள் சுய அறிமுகம், சிறப்பு விருந்தினர்கள் உரை, வலைபதிவ நண்பர்களின் நூல் வெளியீடுகள் என்று 
சிறப்பான அம்சங்கள் கொண்ட இவ் விழாவில் இணையம்  உருவாக்கி தந்த நட்பை கொண்டாடி மகிழ்வோம். வாருங்கள் நண்பர்களே 

வருங்காலம் நமதாகட்டும்
வெற்றி நம் வசமாகட்டும்

FINAL PUNCH


இந்த வருட பதிவர் திருவிழாவில்  எனது குறும்படமான சில நொடி சிநேகம் வெளியிடப் படுகிறது என்பதில் இந்த குறும்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இனம் புரியாதோரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது 
என்பதை நான் சொல்லவும் வேண்டுமா.அந்த மகிழ்ச்சியுடன் விழாவில் கலந்து கொள்ள வரும் அனைவரையும் அன்புடன்  வரவேற்கிறோம் ஆர்.வி.சரவணன்


13 கருத்துகள்:

 1. பதிவர் திருவிழாவிற்கு அழைத்த உங்கள் பதிவு நன்று!

  பதிலளிநீக்கு
 2. தங்கள் "சில நொடி சிநேகம்" குறும்படம் சிறப்புடன் வெளியிடப் பட எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. மதுரையில் நடைபெற இருக்கும், பதிவர் திருவிழாவில் தங்களது ” சில நொடி சிநேகம்” என்ற குறும்படம் வெளியிட இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி! சகோதரர் அவர்களுக்கு எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார். தங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

   நீக்கு
 4. வாழ்த்துக்கள் நண்பரே
  குறும்படத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

   நீக்கு
 6. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார் .தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்

   நீக்கு
 7. டைரக்டர் சார்! உங்களது இந்த பதிவினை எனது, மதுரை - வலைப்பதிவர்கள் சந்திப்பு (2014) அழைப்பு – என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி உள்ளேன். நன்றி!

  மீண்டும், சகோதரர் அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் மீண்டும், எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்