ஞாயிறு, ஜூலை 13, 2014

ஸ்வீட் காரம் காபிஸ்வீட் காரம் காபி

போட்டோ பிடிச்சால் இறந்துடுவோம் என்ற (மூட) நம்பிக்கை கொண்டு வாழும் ஊரில், இறக்கும் ஒருவரை போட்டோ எடுக்க செல்லும் 
விஷ்ணுவும் அவர் நண்பர் காளியும் எடுத்த போட்டோ சரியாக விழாமல் போக அவர்கள் செய்யும் குளறுபடியால்,அதை தொடர்ந்த சிக்கல்களில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை  சிரிக்கும் விதத்தில் படம் பிடித்திருக்கிறார் இயக்குனர்.
முதலில் இந்த படத்தில் எனை  ஈர்த்தது  முனிஸ் காந்த் என்ற பெயரில் வரும் ராமதாஸ் தான். படத்தில் அவர் வரும் நேரமெல்லாம் கை தட்டல்களை அள்ளுகிறார். அவர் உடல் மொழி வசனங்களை உச்சரிக்கும் விதம் எல்லாம் அசத்தல் ரகம். அடுத்து விஷ்ணு வின் நண்பராக வரும் காளி  கவனம் ஈர்க்கிறார். நந்திதாவை  கண்களாலேயே பேச வைத்திருப்பது குட் பீல் கொடுக்குது நமக்கு.இருந்தும் விஷ்ணு நந்திதா காதலில் அவ்வளவாக ஆழம் இல்லை. (விஷ்ணு தண்டனை ஏற்று வெட்டும் கிணற்றின் ஆழமாவது இருந்திருக்கலாம்).  கிணறு வெட்டும் தண்டனை அவ்வளவாக செட் ஆகவில்லை (போனா போகுது போ என்று கஷ்டமில்லாமல் கொடுத்த தண்டனை போல் இருக்கிறது) படத்தில் வரும் கதாபத்திரங்கள் காட்சிகளை ரசிக்கும் விதம் கொடுத்திருப்பதை பாராட்ட வேண்டும். (ஆனந்தராஜ் சீரியசாக துப்பாக்கியை பிடித்திருக்க அதை விலக்கி டேபிளில் சூப் வைப்பார் வேலையாள். ) சின்ன சின்ன வசனங்கள் (ஒரு ஸ்டாருக்கு சோறு இல்லியா, படம் மட்டும் என்னுது. ரத்த பொரியல் எனக்கில்லையா)  சிரிப்பை அள்ளி கொள்கிறது. ராஜா மகாராஜா பாடலில் இசையமைப்பாளரும் அந்த காலத்தை நம் கண் முன் நிறுத்துவதில் கலை இயக்குனர்  கவனம் பெறுகிறார்கள். ராஜா மகாராஜா  பாடலில் வரும் நந்திதாவின் முக பாவங்களும் மனதை அள்ளுகிறது. படம் பிடிக்க பயப்படும் ஊரை பிடிக்கும் விதம் இயக்குனர் ராம்குமார் தந்திருப்பதில் முண்டாசுபட்டி (கொஞ்சம்) கெட்டி 
(இந்த படம் முதல் முறை பார்த்ததை விட இரண்டாம் முறை பார்க்கும் போது தான் நல்லா ரசிச்சு சிரிச்சேன் )  

-------------

ஆனந்த விகடனில் (02-07-2014 ) சமுத்திர கனியின்  கட்டுரை படித்த போது திக்கென்றது. சினிமாவில் இயக்குனராக ஆசைப்பட்டு போராடிய தன் நண்பன் மன நோயாளியாகி இறந்து போய்  விட்டதை பற்றியும் அவரது  குடும்பத்தை சந்தித்தது பற்றியும் சொல்லியிருந்தார். அதிலும் அந்த நண்பரின் தாய் தந்தை தன் மகனை பற்றி சொல்லும் வரிகள் நெஞ்சை தொட்டது. (நியூ தமிழ் சினிமா அந்தணன் சினிமா பற்றி எழுதும் தொடர் பதிவில்  2000 உதவி இயக்குனர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருப்பது நினைவுக்கு வந்து சென்றது)

-----------------

அதே இதழில் பிரியா தம்பி எழுதும் பேசாத பேச்செல்லாம் கட்டுரையில் சென்னைக்கு வருபவர்கள் தன்னை நிலை நிறுத்தி கொள்ள படும் பாட்டை விவரித்ததை படித்தவுடன் எனக்கு நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. நான் சென்னை வந்து பட்ட கஷ்டங்கள் முன்னோக்கி வந்தன. அந்த கட்டுரையில் அவர் குறிப்பிடிருந்த சிறுகதை நெஞ்சை உருக்கும் கதைகளின் வகையில் சேர்ந்து கொண்டது 

--------------
சென்னை மவுலி வாக்கத்தில் இடிந்து விழுந்த பல மாடி கட்டிட இடிபாடுகளுக்கு பலியான உயிர்கள்  உள்ளே சிக்கியவர்கள் எந்த நேரம் வெளி வருவோம் என்று தெரியாமல் முடங்கி கிடக்க, வெளியில் இருக்கும் உறவினர்கள் உள்ளே எந்த நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாமலே பதறி கிடந்த  நிலை எவ்வளவு கொடியது. நான் இப்படி 
நினைத்து பார்த்தேன்.ஒரு வேலை நான்  இப்படி உள்ளே மாட்டியிருந்தால் என் குடும்பம் வெளியே எப்படி கஷ்டபடுவார்கள் என்பதை நினைத்த போது  மனது வலித்தது. இந்த வலி அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. 

----------------------
வண்டிக்கு பெட்ரோல் போடும் போது பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் 
காட்டும்  அவசரம் இருக்கே சொல்லி மாளாது. என்னமோ பிளைட் பிடிக்க போறவங்க மாதிரி தான் பறக்கிறாங்க.  ஒரு முறை  இப்படி தான் என் வண்டிக்கு  பெட்ரோல் ஒருவர் போட்டு கொண்டிருக்க இன்னொருவர் பணம் கொடுங்க சார் என்று கை நீட்டினார். நானும் ரெடியாக வைத்திருந்த பணத்தை நீட்டினேன்.அவர்  சில்லறையை என் கையில் திணிக்க நான்  அதை வாங்கி கொண்டு திரும்புவதற்குள் பெட்ரோல் போட்டு முடிக்கபட்டிருந்தது.சரி என்று நான் வண்டி சீட்டை மூடி  லாக் செய்வதற்குள் சீக்கிரம் எடுங்க சார் என்று அவர்கள் அவசரபடுத்தியவுடன் எனக்கு கோபம் வந்துடுச்சு. 

"எதுக்கு இப்படி அவசரபடுத்துறீங்க. இதனால் பெட்ரோல் மீட்டர்  எவ்வளவு ஓடுச்சு னு கூட என்னால் பார்க்க கூட முடியல" என்றேன். 

"நீங்க பார்க்க வேண்டியது தானே "

"எங்கே பார்க்க விடறே அந்த நேரத்தில் தான் காசை கொடுங்க னு வாங்கறே மீதி சில்லறை கொடுக்கறே நான் பார்க்க கூடாது னு தானே நீ இப்படி 
எல்லாம் செய்யறே .  கரெக்டா பெட்ரோல் போட்டியா னு நான்  இப்ப எப்படி செக் பண்றது சொல்லு"என்று கத்தினேன்.பின்னால் இருந்தவர்கள் சரி சரி விடுங்க என்று சமாதானபடுத்தும் நோக்கில் தங்கள் அவசரத்தை எனக்கு உணர்த்தினார்கள். உங்களுக்கும்  சேர்த்து தான் நான் கத்தறேன் என்பதை அவர்களுக்கு எப்படி உணர்த்துவது (இப்பலாம் டிரையின் பஸ் அவ்வளவு ஏன் பெட்ரோல் பிடிக்க போறதே பிளைட் பிடிக்க போற மாதிரி தான் இருக்கு)


------------------

வலைபதிவ நண்பர் நாஞ்சில் மனோ கமலின் அந்த ஒரு நிமிடம் படம் 
பார்த்து முகநூலில் எழுதியிருந்தார். உலக சினிமா ரசிகனும் படம் பற்றிய தகவல்களை சொல்லியிருந்தார். என் பங்குக்கு அந்த படம் பற்றிய ஒரு பிளாஷ் பேக் இருக்கு. அதாவது அந்த படம் மே மாதம் வெளியானது  இந்த படம் பார்த்து அடுத்த நாள் 12 ஆம் வகுப்பு முதல் நாள் பள்ளிக்கு சென்றேன். வகுப்பு வாத்தியார்  உயிரியல் ஆசிரியர்.(11 ஆம் வகுப்புக்கும் அவர் தான்)  யாரையாவது கிண்டலடித்து பேச ஆரம்பித்தால் எல்லோரும் நன்கு சிரித்து என்ஜாய் பண்ணலாம். கிண்டலடிக்கபடுபவர் தவிர. அன்றும் அவர் இப்படி ஆரம்பித்தார் 

"நேத்து ஒரு படம் போனேன் அந்த படத்துல கமல் டான்ஸ் ஆடினால் இங்க ஒரு பையன் டான்ஸ் ஆடறான் அவர் அழுதா இங்க அழுகை அங்க அவர் சண்டை போட்டால் இங்க பக்கத்தில உள்ளவங்க முகத்தை இவன் பதம் பாத்திருவான் போலிருக்கு" என்று நக்கல் அடிக்க எல்லோருடனும் சேர்ந்து நானும் சிரிக்க, "அவன் நமக்கு தெரிஞ்ச பய தான். அது நம்ம சரவணன் தான்" என்று என்னை கை காண்பித்தார். கோ எஜுகேசன் வேறு. எல்லோரும் என்னை சிரித்த படி பார்த்த பார்வையில் அவ்வளவு தான் நான் நொந்து இடியாப்பம் ஆனேன். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை சில காட்சிகளில்  வேண்டுமானால் கை தட்டியிருப்பேன் அதுக்கே நம்மை இப்படி பில்டப் கொடுத்து அன்றைய ஜாலிக்கு என்னை நாயகனாக்கி விட்டார். 

படத்தை பற்றி ஒன்றும் நியூஸ் இல்லியா என்று கேட்பவர்களுக்கு அந்த படத்தில் இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ராகம். கமலின் மாறுவேடங்கள் டான்ஸ் பைட் என்று அவருக்கு சரியான தீனி இருந்தும் கதை இன்னும்  நன்றக இருந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த படம். அந்த ஆண்டு மட்டும் கமல் ரசிகர்களுக்கு  ஒரு கைதியின் டைரி, காக்கி சட்டை ஜப்பானில் கல்யாணராமன் என்று சூப்பர் விருந்து. மேஜர் சுந்தராஜன் வில்லனாக நடித்து இயக்கி தயாரித்து இருந்தார். சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே பாடல் எப்போது  கேட்டாலும்  என் சந்தோசத்திற்கு 
சிறகு முளைக்க வைக்கும் 

------------------

முகநூலில் எனை கவர்ந்த  படம் ஒன்று FINAL PUNCH 

ஒரு கிண்டல் என்பது கிண்டலடிக்கபடுபவரும் வயிறு வலிக்க சிரிக்குமாறு இருக்க வேண்டும். தப்பி தவறி கூட அவர் மனது வலிப்பதாக இருந்து விட கூடாது. 

என்றும் அன்புடன் 

ஆர்.வி.சரவணன் 12 கருத்துகள்:

 1. எஸ் கே.சி அருமை.
  Final punch உண்மையில் பின்பற்றப் படவேண்டிய ஒன்று

  பதிலளிநீக்கு
 2. சுவீட் காரம் காபி அருமை அண்ணா...
  அந்த ஒரு நிமிடம்... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 3. சமுத்திர கனி அவர்கள் அந்த விபரீதத்தை வைத்து ஒரு படமே எடுக்கலாம்...

  அந்த ஒரு நிமிடம் பாடல்கள் மறக்க முடியாதவை...

  பதிலளிநீக்கு
 4. மற்றவர் வேதனைகளை உங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் எண்ணமே பெரியது.. கீப் இட் அப் பாஸ்

  பதிலளிநீக்கு
 5. பஞ்ச்தான் பதிவுக்கே டாப்!!

  பதிலளிநீக்கு
 6. சிறிய பறவை சிறகை விரித்து பாடல் எனக்கும் பிடிக்கும்! உதவி இயக்குனர்கள் நிலை வேதனைக்குரியது. பைனல் பஞ்சும் முகநூல் இடுகையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தன! நன்றி!

  பதிலளிநீக்கு
 7. படம் அருமை நானும் ரசித்து மகிழ்ந்தேன். ப்ரியா தம்பியின் கட்டுரை குறித்து எனக்கும் வலி இருந்தது. சமுத்திரக்கனியின் கட்டுரையும் படித்தேன். எல்லாம் இருந்தும் ஏனோ அந்தப் படம் கமலின் ஹிட் லிஸ்டில் வரலைன்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. ஸ்வீட், காரம் காப்பி எல்லாமே நல்லாருந்துச்சு சார்! அதுல முக நூல் படம் செம ஸ்வீட்! ரொம்ப ரசிச்சோம். சமுத்ரகனி எழுதியிருக்கும் அனுபவம் நிஜமாகவே மனதை நெகிழவைத்த ஒன்று சார்! எத்தனைபேர் சினிமா கனவுகளுடன் அதன் வாயிலில் நிற்கின்றார்கள்?!!! நாமும் தான்...இல்லையா சார்! ஃபைனல் பஞ்ச் மிக அருமை! அது முன் நிற்கின்றது!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்