செவ்வாய், ஜனவரி 21, 2014

புத்தக காட்சி 2014 ஒரு பார்வை



புத்தக காட்சி 2014 ஒரு  பார்வை 


வழக்கமாய் நான் ஆரம்பத்திலேயே செல்வதுண்டு. பொங்கலுக்காக
 ஊருக்கு சென்று விட்டதால் இந்த ஞாயிறு தான் (நேற்று) செல்ல முடிந்தது.
புத்தக காட்சி அரங்கினில் நான் நுழைந்த போது பகல் 12 மணி 

என்ன தான் சினிமாவுக்கு டிக்கெட் எடுத்திருந்தாலும் தியேட்டரில் நுழையும் போது ஒரு பரபரப்பு தொற்றும் இல்லையா அது போல் பரபரப்பாய் நெருங்கினேன் 

டிக்கெட் வாங்கி கொண்டு உள் நுழைந்த எனக்கு ( செல் போன்
மூன்று நாட்களாக வேலை நிறுத்தம்  செய்து விட்டதால்  போன் செய்து 
யார் வருகிறீர்கள் என்று கேட்க முடியவில்லை ) அவ்வளவு 
கூட்டத்திலும் தெரிந்த முகங்கள் இல்லையாதலால் ஒரு அனாதை  
உணர்வு ஏற்பட்டாலும், அவை புத்தகங்களை பார்த்தவுடன்  மறைந்து 
போனது  (வெளி உலகமும் தான்  )


வழக்கம் போல் சுஜாதாவின் புத்தகங்களுக்குள் புகுந்து நேரத்தை நிறைய செலவிட்டு 6 புத்தகங்கள் வாங்கினேன்.காயத்ரி, ஆயிரத்தில் இருவர்,ஆதலினால் காதல் செய்வீர்,மறுபடியும் கணேஷ், சிறுகதை 
எழுதுவது எப்படி, கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு 

ஒரு ஸ்டாலில்  26 ரூபாய் கூடுதலாக   பில் போட்டு விட்டார்கள். பின் நான் சரி பார்த்து  சொன்ன போது சாரி கூட்ட நெரிசலில்  தவறாகி விட்டது என்றவர் மூன்று புத்தகங்கள் போட்டு கொடுக்க  கவர் தேடினார் .அவர் எடுத்த கவர் அனைத்தும் பெரிதாக இருக்கவே அதற்காக சளைக்காமல் சிறிய கவர் தேடி எடுத்தே போட்டு கொடுத்தார். அந்த புத்தகங்களை  தவிர எந்த ஒரு 
பேப்பரையும்  அதில்  வைக்க முடியாது ( கூடாது ) என்ற  அளவில் இருந்தது 


நான் மிகவும் எதிர்பார்த்த ராஜேந்திரகுமார் நாவல்கள் இரண்டு கிடைத்தது.
இரண்டு புத்தகங்களும் மொத்தமே 27 ரூபாய் தான் (பழைய பதிப்பு )
நான் பாக்கெட்டில் கை விட்ட போது "சார் சில்லறையா கொடுங்க" என்றார் பில் போடும் இடத்தில  அமர்ந்திருந்த பெண். நான் கேட்டேன் "கரெக்டா 27 ரூபாய்  தான் கொடுக்கணுமா" என்று. அவரது  பக்கத்தில் இருந்தவர் 
அவரிடம் "அவர் பாக்கெட்டிலிருந்து எடுக்க போறது நூறாவும் இருக்கலாம் 500 கூட இருக்கலாம்.  எதுனே  தெரியாமல் அதுக்குள்ளே ஏன் சொல்றீங்க" என்றார் சிரித்த படி . நான் 27 ரூபாய் கரெக்டாக எடுத்து கொடுத்தேன். இருந்தும் புத்தகம் மட்டும் கையில் கொடுத்தார்கள் கவர் என்றவுடன் பிளாஸ்டிக் கவர் கிடைத்தது .அருகில் இருந்தவர் "புத்தக விலை எவ்வளவு " என்றார் அந்த பெண்ணிடம் (அந்த கேள்வி எனக்காகவும் இருக்கலாம்.)

அடுத்து நா .முத்துக்குமார் கவிதை தொகுப்பு  பட்டாம்பூச்சி விற்பவன் ,
 ஆனா ஆவன்னா வாங்கினேன்.(பிடிக்கும் ஆர்வத்திலும் 
படிக்கும் ஆர்வத்திலும் )

முத்து காமிக்ஸில்  (எழுத்தாளர் பாமரன் அவர்களுக்காக) இரும்பு கை மாயாவி கேட்டு அது இப்ப வரதில்லீங்க என்ற பதில் பெற்று நகர்ந்தேன் (கதையில் வருவதை போல் மாயாவி மாயமான  அதிசயம் )

 குறும்பட பயிற்சி தொடர்பாக முன்றில் ஸ்டாலில் விளம்பரம் பார்த்து விட்டு திருநாவுக்கரசு அவர்களிடம் அது குறித்த தகவல்கள் கேட்டு பெற்றேன் 
(குறும்பட ஆர்வம் நெடும் படமாக வருட கணக்கில் )

இப்படியாக சுற்றியதில் மணி 3.30 ஆகியிருந்தது .கால்களில் வலியுடன்  எந்த நண்பரையும் பார்க்காதது  ஏமாற்றமும் தந்தது. பசி வேறு நான் இருக்கிறேன் என்று அலறவே வெளி வந்து சாப்பிட வாங்க என்று அழைக்கப்பட்ட போர்டை நோக்கி நகர்ந்தேன் .சப்பாத்தி  ஒரு பிளேட் 50 ரூபாய் நன்றாக தான் இருந்தது. இருந்தும் சாப்பிட்ட பின் சாப்பிட்ட சுவடே தெரியாதது போல் இருக்கவே வயிறு  இது போதாது இன்னும் கொஞ்சம் போட்டு கொடுங்க  என்று ஆட்டோ காரர் போல் சொல்லவே ஸ்வீட் கார்ன் சாப்பிடலாம் ( 30 ரூபாய்)  என்று நெருங்க நினைத்தும் அந்த பிளாஸ்டிக் கப்  அளவு என்னை நெருங்க விடவில்லை. ஆகவே ப்ரூட் சாலட்  சாப்பிட்டேன் (கால் வலியால் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று காலியாக இருந்த சேர் பக்கம் வந்தால் 
அது கூட ரிசர்வேசன் ஆகியிருந்தது )


மீண்டும் உள்ளே நுழைந்த போது கூட்டம் அதிகமாக  இருந்தது. 
அக நாழிகை பதிப்பகம் ஸ்டால் பார்த்தவுடன் புத்தக ஆர்வத்தில் 
அருகே சென்றேன். எதிர்பாராத திருப்பம் போல் அங்கே செல்லப்பா சார் அமர்ந்திருந்தார்.அருகில் சென்று வணக்கம் வைத்தேன் நலம் பரிமாறிக்கொண்டு புத்தகம், வலை  எழுத்தாளர்கள் என்று பேசி கொண்டிருக்கையில் நண்பர்கள் வந்து கொண்டிருப்பதை எனக்கு தெரிவித்தார். 

அரூர் மூனா செந்தில், செல்வின், சிவகுமார் வந்து சேர்ந்து கொள்ள 
கூடவே பிலாசபி பிரபா அவ்வபோது மின்னலாய் வந்து ஆஜராகி விட்டு சென்று கொண்டிருந்தார் ஸ்டால்களுக்குள். கவியாழி மற்றும் புலவர் 
அய்யா ராமானுஜம் ,சீனு,ஸ்கூல் பையன் ரூபக் ராம் போலி
பன்னிகுட்டி , பாலகணேஷ் என்று நண்பர்கள் தொடர்ந்து வரவே  அந்த இடமே  களை கட்டியது (நான்கு மணி நேரமாக அனாதையானது போன்று  வலுகட்டாயமாக தோன்றிய எண்ணத்தை  அனைவரும் 
சொடக்கு போடும் நேரத்தில் வெளியேற்றினர்) 

தேனம்மை லக்ஷ்மணன், பத்மஜா நாராயணன்,எழுத்தாளர்  உஷா  
ராமச்சந்திரன், கவிஞர் உமா மோகன்,ஆகியோரும் வந்து விடவே  
பதிவர் ராய செல்லப்பா அவர்கள் எழுதிய தாத்தா தோட்டத்து
வெள்ளரிக்காய் சிறுகதை தொகுப்பை புலவர் அய்யா ராமானுஜம் 
அவர்கள் அகநாழிகை அரங்கில் பொன் .வாசுதேவன் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார் ( வாழ்த்துக்கள் சார்) 




செந்தில் ,மற்றும் சீனு என்ன புக் வாங்கி  இருக்கீங்க என்று  வாங்கி பார்த்து விட்டு ,வேற புக் வாங்கலியா என்று கேட்க இன்னும் பர்சேஸ் முடியவில்லை என்றேன் 

பாலகணேஷ் என்னப்பா இன்னும் சுஜாதா புத்தங்கள் படிக்க வேண்டியது இன்னும் மிச்சம் வச்சிருக்கியா  என்று கேட்டார்  

பேசி முடித்து விட்டு கிளம்பும் தருவாயில் எதாவது சாப்பிடலாம் என்று வெளியில் சென்றோம்.  அந்த எதாவது என்பது  குல்பி சாப்பிடலாம் என்பதாக டிக் செய்யப்பட  அரட்டையுடன் சிரித்து பேசி கொண்டே 
 சாப்பிட்டு விட்டு விடை பெற்றோம் 

நான் மீண்டும் அரங்கிற்குள் நுழைந்தேன். எழுத்தாளர் பாலகுமாரன் அமர்ந்து 
ஆட்டோகிராப் போட்டு கொண்டிருந்தார்.அவரது நாவல்கள் பல படித்திருக்கிறேன். அவர் நாவல்களில் எனக்கு பிடித்த  வரிகளை எனது டைரியில் குறிபெடுத்து வைத்திருக்கிறேன். அவரிடம் போட்டோ எடுத்து கொள்ள ஆர்வம்  இருந்தும் போன் இல்லாததால் நகர்ந்தேன்
 ( நகர மனமின்றி ) 


அங்கிருந்து கிளம்ப மனமில்லை.இருந்தும்,புத்தக காட்சி இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால் அதற்குள் ஒரு முறை செல்லும் ஆர்வத்துடன் இருக்கிறேன் 


FINAL PUNCH

இந்த பதிவில்  ஒரு விசயத்தை பத்தி எழுதலியே இவன் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். (நினைக்காமலும் இருந்திருக்கலாம் ) அது எனது இளமை எழுதும் கவிதை நீ .... நூல் பற்றியது. அதை  பற்றி இனி நீங்கள் தான் சொல்ல வேண்டும் 

அன்புடன்

ஆர்.வி.சரவணன் 


17 கருத்துகள்:

  1. அருமை நண்பரே
    தங்களின் நூலினைப் பெற்றுவிட்டேன். படித்துக் கொண்டிருக்கின்றேன் .
    விரைவில் தங்களின் நூல் பற்றி எழுதுகின்றேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கியிருக்கீங்க...விரைவில் அவற்றின் விமர்சனங்கள் எதிர்பார்க்கிறேன்.. உங்களின் கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. புத்தக விமர்சனங்கள் தொடரட்டும். உங்கள் கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மேடம் எனது நூல் கவிதை தொகுப்பு அல்ல அது ஒரு நாவல்

      நீக்கு
  4. நமது நண்பர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. அன்று உங்களை சந்திக்க முடியாது என்று நினைத்தேன்.. சந்தித்தில் மகிழ்ச்சி சார்.. வாங்கிய அத்தனை புத்தகங்களையும் சீக்கிரம் படிக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. திங்களன்று வந்தேன்! டிஸ்கவரியில் உங்கள் புத்தகத்தை கேட்டு வாங்கிவிட்டேன்! இனிதான் படிக்க வேண்டும்! படித்துவிட்டு சொல்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அண்ணா...
    நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கீங்க...
    நண்பர்களை சந்திச்சிருக்கீங்க.....

    புத்தக விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழல் எங்களுக்கு...
    புத்தகங்கள் வாங்க எண்ணம்... என்னசெய்வது...

    உங்கள் புத்தகம் படிக்க ஆவல்.. ஊருக்கு வரும்போது வாங்கி படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள்... புத்தகத் திருவிழாவி்ற்கு சென்றமைக்கு...
    வாழ்த்துக்கள்... புத்தகங்கள் வாங்கியமைக்கு...
    வாழ்த்துக்கள்... புத்தகங்கள் படிக்கயிருப்பதற்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நன்றி குமார் //

      இரு முறை சே. குமார் அவர்களுக்கு நன்றி சொன்னதற்கு, சே. குமார் அவர்களின் சார்பாக எனது நன்றி உங்களுக்கு! (joke!!!)

      நீக்கு
  9. அங்கும் உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்