வியாழன், டிசம்பர் 12, 2013

புண்ணிய ஸ்தலங்களை நோக்கி ஒரு பயணம்-4




புண்ணிய ஸ்தலங்களை நோக்கி ஒரு பயணம்-4
(மும்பை)

கார் ஏன் நிற்கிறது என்பதை தெரிந்து கொள்ள நான்  அப்போது தான் தூங்குவதற்கு முயற்சித்து கொண்டிருந்த  ஸ்ரீனிவாசன் சாரை  கேட்டேன்.  டிரைவர் தூக்கம் வருகிறது என்று கூறியதால் வண்டியை ஓரமாக நிறுத்த சொல்லி விட்டு தூங்கி ரெஸ்ட் எடுக்க சொல்லியிருப்பதாக சொன்னார். சாலையோரம் ஒரு டீ ஸ்டால் இருந்தது பல வாகனங்கள் வந்து நின்று இளைப்பாறி சென்று கொண்டிருந்தன. நான் நீங்க தூங்குங்க சார் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டு எழுந்து வெளி வந்து வாக்கிங் போல் கார் அருகிலேயே நிற்பதும் நடப்பதுமாக இருந்தேன் (தூக்க கலக்கத்துடனே) இரண்டு மணி நேரத்திற்கு பின் டிரைவர் கண் விழித்தார் உடனே முகம் கழுவி கொண்டு வண்டி ஸ்டார்ட்  செய்ய ஆரம்பிக்க நான்  சொன்னேன் ."எழுந்து வெளியில் வந்து ஒரு டீ சாப்பிட்டு ரிலாக்ஸ் பண்ணி கொள்ளுங்கள்" என்று. பின் கிளம்பினோம் 

டிரைவர்  மும்பைக்கு புதிது. மேலும் திரும்ப சோலாப்பூர்  செல்லும் போது தன்னால் ஓட்ட முடியாது என்பதால் தன நண்பரை வர சொல்லியிருந்தார் பன்வேல் என்ற இடத்திற்கு நாங்கள் சென்று கொண்டிருந்தோம் நடு நடுவே கண் விழித்து பார்க்கிறேன். முகவரி கேட்டு கொண்டிருக்கிறார்கள் ஒருமுறை கேட்டால் ஓகே ஒவ்வொரு முறை கண் விளிக்கும் போதா  கேட்பார்கள்  ஒரே இடத்திலே நின்று எவ்வவளவு மணி நேரமா அட்ரஸ் கேட்பீர்கள் என்றேன் கிண்டலடித்து. முரளி சொன்னார் 'சார் வர்ற வழியெங்கும் அட்ரஸ்  கேட்டுகிட்டு வரோம் என்றார். பார்த்து அதிகாலை நாலு மணிக்கு இப்படி மும்பைல இருக்கிற எல்லாரையும் அட்ரஸ் கேட்கிறேன் என்று எழுப்பி விட்டிற போறீர்கள் என்றேன் சிரித்த படியே 

பின் டிரைவரின் நண்பரை ஒரு வழியாக பிடித்து நாங்கள் தங்க வேண்டிய இடம் கிளம்பினோம்.  எனக்கு டீ வேண்டும் என்றேன் ஸ்ரீனிவாசன் சொன்னார் சரவணன் வீட்டுக்கு போய் சாப்பிடலாம் என்று. " எதுக்கு சார் அவங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டு" என்றேன். முரளி "இப்ப அவங்களை  எழுப்பறதே டிஸ்டர்ப் பண்ற மாதிரி தான் இலவச இணைப்பா இதுவும் இருக்கட்டும்" என்று சொல்ல வைத்யா சிரித்தார்.  சரி டீ காலையிலே  தான் கிடைக்கும் என்று மனதை  சரிபடுத்தி கொண்டு விட்டேன். நாங்கள் சென்றது ஸ்ரீனிவாசன் அவர்களின் அண்ணன் மகன் வீட்டுக்கு இந்த அதிகாலையில் நம் உறவினர் வீட்டுக்கு சென்றாலே நமக்கு ஒரு அவஸ்தை இருக்கும் இது நண்பரின் உறவினர் வீடு. எங்கள் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்

நாங்கள் சென்று நுழைய (14 வது மாடி ) வரவேற்றார்கள்.சில நிமிடங்களில் 
காபி வந்தது. அந்த வேளையில் (நான்கு மணி) அவர்களின் உபசரிப்பு 
எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, நாங்கள் தங்கியிருந்த அந்த இரண்டு 
நாட்களிலும் ( சொந்த வீட்டில் இருந்தார் போன்ற எண்ணத்தை தரும் விதம் இருந்த உங்கள் உபசரிப்புக்கு நன்றி என்று கிளம்பும் போது சொன்னேன்)

நான் மும்பை வருவது இது இரண்டாம் முறை முதல் முறை அலுவலக வேலையாக சென்றிருந்தேன் ஆனால் மும்பையின்  பகலை பார்க்கவில்லை இப்போது தான் பார்க்கிறேன் (வான்வெளியில் நானும் என்ற பதிவில் அந்த அனுபவத்தை தந்திருக்கிறேன் )



மும்பையில் காரில் SEA LINK பாலம் வழியே சென்ற போது 


நாங்கள் அன்று காலை காரில் கிளம்பி முதலில் சென்றது கணபதி கோவிலுக்கு. அங்கும் கூட்டம் நிறைய இருந்தது  அங்கும் கேமரா கொண்டு செல்ல அனுமதி இல்லை. உள்ளே நுழையும் போது கடைகாரர்கள் மொய்ந்து கொண்டார்கள். நாங்கள் வற்புறுத்தி அழைத்த ஒரு கடையில் சென்று செருப்புகளை விட்டு அர்ச்சனை தட்டு கேட்டபோது தலை சுற்றியது அதன் விலையால். சரி அர்ச்சனை  வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்து அகன்ற போது அவர்கள் பொருள் வாங்கலே என்றால் செருப்பையும் எடுத்து செல்லுங்கள் என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லி விட மனது கஷ்டமாகி விட்டது காரணம் வருந்தி கூப்பிடவும் வேண்டாம் இப்படி முகத்தில் அடித்தார் போல் சொல்லவும் வேண்டாமே  பின் அதற்கென்று இருந்த இடத்தில விட்டு கோவிலுக்குள் சென்றோம்.சாமி கும்பிட்டு விட்டு வெளி வந்து காரில் ஏறும் போது கோபுரத்தை படம்
எடுத்தேன்




அடுத்து மகாலட்சுமி கோவில் சென்றோம். கடற்கரை பின்னணியில் இருந்த அந்த கோவில் எங்களை மிகவும் கவர்ந்தது. அங்கிருந்து வெளி வந்து வாசலில் புறாக்களை பார்த்தவுடன் அதற்கு தானியம் இட்டோம். அவைகள் உண்ணும் அழகை ரசிக்க தனி மனம் வேண்டும் (இயந்திர வாழ்க்கையில் )

பின் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஹான்கிங் கார்டன் சென்றோம்
அங்கே நாங்கள் குழந்தைகள் போல் என்ஜாய் செய்திருப்பதை படங்களில் பாருங்கள்










அங்கிருந்து அடுத்து சென்றது இந்தியா கேட். படங்களில் பார்த்திருந்த 
அந்த இடத்தை நேரில் கண்டோம். போட்டோ எடுப்பவர்கள் சுற்றி
வந்து  கொண்டிருந்தார்கள் எங்களையும்  விடவில்லை. முரளி மற்றும் வைத்யா எங்க கிட்டே கேமரா இருக்கு எங்க ப்ரெண்ட் எடுப்பார்  என்று 
என் மேல் நம்பிக்கை வைத்தார்கள். அப்படியும் அவர்கள் விடவில்லை 
எனக்கு கோபம் வந்து, எங்க கிட்டே கேமரா இருக்கு எடுத்துக்கிறோம் என்றேன்.( சீப்பு வச்சிருக்கோம் எடுத்தும் சீவுவோம் என்று வடிவேலு சொல்வது போல்)

ஆனால் பாருங்கள் அவர்கள் அப்படியும் அகலவில்லை.மாறாக எட்டி நின்று  எங்களை வேடிக்கை பார்த்தார்கள். நீ எப்படி எடுக்கிறே பார்த்திடறேன் என்று சொல்வது போல் இருந்தது . வைத்யா முரளி இருவரும் இந்தியா கேட் முழுக்க வர வேண்டும் நாங்களும்  க்ளோஸ் அப்பில் இருக்க வேண்டும் என்று சொல்ல நான் முயன்றேன் வரவில்லை. எனக்கே திருப்தி தரவில்லை
வைத்யா முரளியின் ஆர்வம் பார்த்து என்ன செய்வது என்று யோசிக்கையில் சடாரென்று வேடிக்கை பார்த்தவர் உடனே என்டர் ஆனார். இதற்கு முன்பு தாங்கள் எடுத்த படங்களை காண்பித்தார். நன்றக தான் இருந்தது.நான் அவரையே எடுக்க சொல்லி விட்டேன்.உடனே பிரிண்ட் போட்டு கொடுத்தார்.  எப்படி எடுக்க போகிறார் என்ற என் ஆர்வம்,நடுவில் ஒரு ஸ்லைட் மாட்டி எடுத்ததை பார்த்து அகன்று விட்டது.





பின் கடலை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தோம் சிவாஜி சிலை கீழே அமர்ந்து  படம் எடுத்து கொண்டு கிளம்பினோம்.  கார்  வருவதற்காக 
நாங்கள் ரோட்டில் நின்ற போது வைத்யா முரளி இருவரும் அங்கிருந்த அலங்கார வண்டி குதிரை பார்த்து (கல்யாண ஊர்வல ரதம் ) போட்டோ எடுக்க சொன்னார்கள் நானும் எடுத்தேன். முரளியை வைத்து எடுத்த போது ஒன்றும்  பிரச்னையில்லை. வைத்யா வை நிற்க வைத்து எடுத்த போது 
குதிரை நகர தொடங்கி விட்டது. அப்போது பார்த்து அவர் சட்டை எல்லாம் சரி செய்து கொண்டிருந்தார். சிரித்து  விட்டோம்.  ஒருவாறு படம் எடுத்தேன்.






பின் நாங்கள் கிளம்பி எனது தாய் மாமா வீட்டிற்கு வந்தோம் அவர் முலண்ட் டில் தான் குடும்பத்துடன் இருக்கிறார். அவர் வீடு செல்லும் ஐடியா இல்லை எனக்கு. ஏனெனில் சிரமம் தர வேண்டாம் என்று தான். இருந்தும் மாமா விடவில்லை கண்டிப்பாக வர வேண்டும் என்று கட்டளையிட்டு விடவே அங்கே சென்றோம் மாமா வீட்டில் இரவு டின்னர். அத்தை ஒரு விசேஷத்தில் ஏற்பாடு செய்யும் மெனு போல் ஸ்வீட் முதல் பழம் வரை ஏற்பாடு செய்திருந்தார்கள். சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.மாமா பையன் நாங்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு காரில் கொண்டு வந்து விட்டு சென்றார்
நண்பர்கள் மூவரும் எங்கள் மாமா வீட்டுக்கு சென்று வந்ததை திருப்தியுடன் குறிப்பிட அதுவே எனக்கு தனி மன நிறைவை தந்தது.





கரும்பு ஜூஸ் குடிக்க காத்திருக்கும் நேரத்தில் 

நாங்கள் அடுத்த நாள் ஜவேரி பசார் மும்பா தேவி கோவில் சென்று 
வணங்கி விட்டு அங்கிருந்து தாதர் மார்க்கெட் வந்தோம்  பர்சேஸ் பண்ண ஆரம்பித்ததில் நேரம் பத்தவில்லை .அன்று முழுக்க டிரெயின் மற்றும் நடை தான். டாக்சி பிடித்து மழையில் ரயில் நிலையம் வந்தோம் இரவு சென்னைக்கு கிளம்பினோம் 

நாங்கள் சோலாப்பூர் ஹோட்டலில் சாப்பிட்டோம் என்று சொன்னேன் தெரியுமா அந்த ஹோட்டலின் பெயர் AJINKYA  முகவரி 131,MURARJI PETH,LUCKY CHOK,SHOLAPUR 

சோலாப்பூரில் இருந்து காரில் இரவு 8 மணிக்கு கிளம்பிய நாங்கள் அடுத்த நாள் 6 மணிக்குள் பண்டரிபுரம்,சனி சிக்னாபூர்,ஷிர்டி,நாசிக்,திரிகம்பெச்வர் கோவில் ஸ்தலங்களை தரிசித்திருக்கிறோம் 

ஒரு கல்யாணம் என்றாலே ஏதேனும் ஒரு மனஸ்தாபம் வரும் போது இதில் இல்லாமல் இருக்குமா. சிறு சிறு சச்சரவு எங்களுக்குள் தோன்றினாலும் அவற்றை அந்த நேரத்திலேயே ஜன்னலில் குப்பை எறிவது போல் எரிந்து விட்டோம் . ஆகவே  எங்கள் நட்பில் எந்த விரிசலும் இல்லை 

கார் டிரைவர் நல்லவர் எந்த முக சுளிப்பும் இல்லாமல் எங்களுடன் ஒரு நண்பர் போலவே பயணித்தார் அவருக்கும் நன்றி 



இப்போது இந்த தொடர் பதிவின் முடிவு பகுதிக்கு வருகிறேன். 15 வருடங்களுக்கு முன் வைத்யா சென்னையில் மயிலாப்பூரில் இருக்கும் சாய்பாபா கோவில் செல்வார்.அவருடன் நானும் செல்வேன்.ஆனால் ஈர்ப்பில்லாமலே தான் சென்று கொண்டிருந்தேன். நான் கடவுள் பக்தி உள்ளவன் தான் இருந்தும் ஏன் ஈர்ப்பில்லை என்று  தெரியவில்லை.
 வைத்யா எங்கு வணங்குகிறாரோ அங்கே வணங்குவேன் அவ்வளவு தான் இப்படி தான் கோவிலுக்கு பல முறை சென்று கொண்டிருந்தேன்.
  
வாழ்க்கை எனை புரட்டி அடிக்க ஆரம்பித்தது. (மனிதரின் வாழ்க்கை எனும் திரைகதையை தான் ஆண்டவன் எவ்வளவு நகம் கடிக்க வைக்கும் டென்சனுடன் படைக்கிறார் என்று தோன்றும்) அடி மேல் அடி விழுந்தது எனக்கு. என் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் போராடினேன் ஆண்டவன் பேரிலும்  நம்பிக்கை வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் மீண்டு எழ ஆரம்பித்தேன். ஒவ்வொரு கோவிலாக ஏறி இறங்கும் போது தான் ஸ்ரீனிவாசன் சார் சொன்னார் 'சரவணன் நீங்க ஒரு முறை ஷிர்டி போய் வாருங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும் சாய்பாபா ஆசி கிடைக்கும்" என்று. அப்போது தான் எனக்கு உரைத்தது.

ஏற்கனவே எத்தனையோ முறை கோவில் சென்ற போதும் நான் பிடிப்பில்லாமலே போய் வந்ததை நினைத்த போது, இது எனக்கு ஒரு குறையாகவே பட்டது. கண்டிப்பாக ஷிர்டி செல்ல வேண்டும் என்ற முடிவெடுத்தேன் இப்படி தான் இந்த புண்ணிய பயணம் முடிவானது ஷிர்டி மட்டுமில்லாமல் அருகிலிருக்கும் மற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாமே என்று இப்படி ஒரு பயண திட்டம் ஏற்பாடு செய்தோம்.சென்று வந்த பின் என் குறை அகன்றது போல் மனது நிறைவாகி இருக்கிறது 


FINAL PUNCH 

நான் ஷிர்டியில் சாய்பாபாவை தரிசிக்கும் போது அவரது  புன்னகையில் எனக்கு ஒரு செய்தி இருப்பதாக  தோன்றியது 

 நீ என் மேல் ஈர்ப்பில்லாமலே இருந்தாலும் நான் எப்போதும் உன்னுடனும் ஈர்ப்புடன்  இருக்கிறேன் 


ஓம் ஸ்ரீ சாய் ராம் 

ஆர்.வி.சரவணன் 


13 கருத்துகள்:

  1. நீ என் மேல் ஈர்ப்பில்லாமலே இருந்தாலும் நான் எப்போதும் உன்னுடனும் ஈர்ப்புடன் இருக்கிறேன் ;)

    அருமையான பயணம் பற்றி இனிமையாகச் சொல்லி முடித்தது அழகு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பயணம் இனிதே முடிவடைந்தது போல உங்களுடனே நாங்களும் இதுவரை பயணம் செய்து வந்தது போன்ற ஒரு இனிமையான அனுபவம்.த்யம்பகேஷ்வரர் ஆலயத்தைக் குறித்த விவரங்கள் அங்கு செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆசையைத் தூண்டியது. அது மட்டுமல்ல, மும்பை விவரணங்கள் எல்லாமே அருமை. இது போல கும்பகோணம், கும்பகோணத்தைச் சுற்றி உள்ள கோவிலகளைப்பற்றியும், இனியும் மேற்கொள்ளப்போகும் புனித யாத்திரை பற்றியும் விவரணங்களை வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. அருமை நண்பரே. உங்களுடன் இணைந்து பயணித்ததைப் போன்ற ஓர் உணர்வு . நன்றி

    பதிலளிநீக்கு
  4. //மனிதரின் வாழ்க்கை எனும் திரைகதையை தான் ஆண்டவன் எவ்வளவு நகம் கடிக்க வைக்கும் டென்சனுடன் படைக்கிறார் என்று தோன்றும்//

    ஹஹஹா நானும் இதை உணர்ந்திருக்கிறேன் பாஸ்!!

    பதிலளிநீக்கு
  5. இனிய பயணத்தை அருமையாக சொல்லி உள்ளீர்கள்... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. அருமையான எழுத்து நடையில் அழாகான பயண கட்டுரை

    பதிலளிநீக்கு
  7. ஈர்க்கவைக்கும் பயணப்பகிர்வுகள்...பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  8. இறுதியில் சொன்ன வரிகள் அருமை! அருமையான பயணக்கட்டுரை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. நன்றி வை .கோபாலகிருஷ்ணன் சார்

    நன்றி துளசிதரன் சார்

    நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்

    நன்றி ஆனந்த் விஜயராகவன்

    நன்றி தனபாலன் சார்

    நன்றி ராஜபாட்டை ராஜா

    நன்றி சகோதரி

    நன்றி சுரேஷ்

    பதிலளிநீக்கு
  10. நீ என் மேல் ஈர்ப்பில்லாமலே இருந்தாலும் நான் எப்போதும் உன்னுடனும் ஈர்ப்புடன் இருக்கிறேன் ....


    பயணப் பகிர்வு அருமை அண்ணா...

    வாழ்க்கையில் எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  11. "டிரைவர் தூக்கம் வருகிறது என்று கூறியதால் வண்டியை ஓரமாக நிறுத்த சொல்லி விட்டு தூங்கி ரெஸ்ட் எடுக்க சொல்லியிருப்பதாக சொன்னார்"

    நல்லவேளை செய்தீங்க!

    "சரி அர்ச்சனை வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்து அகன்ற போது அவர்கள் பொருள் வாங்கலே என்றால் செருப்பையும் எடுத்து செல்லுங்கள் என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லி விட மனது கஷ்டமாகி விட்டது"

    சரவணன் மாதிரி எல்லோரும் நல்லவராக இருப்பார்களா :-)

    கில்லாடி சரவணன் வெற்றிகரமாக பயணம் சென்று வந்து விட்டீர்கள்.. அதையும் சிறப்பாக எழுதியும் விட்டீர்கள் :-). திரும்ப இது போல ஒரு பயணம் அமைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. // வாழ்க்கை எனை புரட்டி அடிக்க ஆரம்பித்தது. (மனிதரின் வாழ்க்கை எனும் திரைகதையை தான் ஆண்டவன் எவ்வளவு நகம் கடிக்க வைக்கும் டென்சனுடன் படைக்கிறார் என்று தோன்றும்) அடி மேல் அடி விழுந்தது எனக்கு. என் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் போராடினேன் ஆண்டவன் பேரிலும் நம்பிக்கை வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் மீண்டு எழ ஆரம்பித்தேன் //
    வாழ்க்கையே புதிர்தான். உங்கள் வார்த்தைகள், நீங்கள் எவ்வளவு பட்டு இருந்தால் இவற்றை சொல்லி இருப்பீர்கள் என்று புரிய வைக்கின்றன.

    ( கடுமையான முதுகுவலி காரணமாக பலருடைய வலைப் பதிவுகள் பக்கம் என்னால் தொடர்ந்து வர இயலவில்லை. படிக்காமல் விட்டுப்போன உங்கள் பதிவுகளை இப்பொழுதான் படித்தேன்.)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்