வெள்ளி, டிசம்பர் 06, 2013

புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-3புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-3


கார் வந்து நாசிக்கில் நிற்கும் போது மணி இரண்டு. கோதாவரி ஆற்றின் நடுவே பாலம். 
அந்த பாலத்தின் கீழே தண்ணீர் தடுக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளி வருகிறது 
எல்லோரும் இறங்கி ஒவ்வொரு மண்டபமாக செல்ல வேண்டும் என்பதால் தான் நடுவில் 
அதை தடுத்தி நிறுத்தி கொஞ்சமாக தண்ணீர் வரும் படி அமைத்திருக்கிறார்கள்.மழை 
பொழிந்து வெள்ளம் போல் வந்த போது அந்த மண்டபங்கள் கூட முழ்கி இருந்ததாக ஸ்ரீனிவாசன் சொன்னார்.ஆற்றின் நடுவே ஏகப்பட்ட மண்டபங்கள் கோவில்கள் நடைபாதை என்று அந்த சூழலே பார்க்க ரம்யமாக இருந்தது சிறு குழந்தைகள் போல் நாங்கள் 
குதுகலமாக இறங்கினோம்.உடனே முதல் வேலையாக காமெராவை எடுத்து படம் பிடிக்க 
தொடங்கினேன்.எத்தனை படங்கள் எடுத்தாலும் அந்த சூழலை முழுமையாக கொண்டு வர முடியாதது போல் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் ஒரு அழகு  இருந்தது.
முரளிக்கு குளிக்கும் ஆர்வம் வந்து ஆற்றில் இறங்க கூடவே வைத்யாவும் நானும் வருகிறேன் என்று இறங்கினார். எனக்கோ டென்சன் ஆனது. காரணம் ஆழம் எப்படி இருக்குமோ என்று அவர்களை ரொம்ப தூரம் போகாதீங்க என்று கத்த ஆரம்பித்தேன். தண்ணீர் இடுப்பளவு தான் என்று தெரிந்த பின் தான் நிம்மதி வந்தது. இந்த டென்சனில் எனக்கு குளிக்கும் மூட் போய் விட்டது.அந்த இடம் முழுக்க சுற்றி சுற்றி வந்தோம்.கூட்டம் நிறைய இருந்தது.நேர்த்தி கடன் செய்து கொண்டிருந்தார்கள்.(ராமர் ஜடாயுவுக்கு  இங்கு தான் நேர்த்தி கடன் செய்ததாக சொன்னார்கள்.  அந்த ஆற்றை சுற்றிலும் தெருக்கள் இருந்தது நிறைய கடைகளுடன்
 பரபரப்பாக இருந்தன தெருக்கள். எங்கு திரும்பினாலும் சுற்றுலா வந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்தன.ஒருமணி நேரத்திற்கும் மேல் சுற்றி விட்டு அங்கிருந்து வெளி வந்து ராமர் சீதை குடில் நோக்கி நடந்தோம்.  

நாங்கள் சென்ற சாலை செல்ல செல்ல மேடாக ஆரம்பித்தது செல்லும் வழியெங்கும் சின்ன சின்ன கோவில்கள் இருக்க கூடவே வீடுகளும் இருந்தன.ஈஸ்வரன் கோவில் ஒன்றும் இருந்தது  நாங்கள் சென்று நுழைந்த தெருவில் கூட்டம் அதிகமிருக்க அந்த குடிலை நெருங்கி விட்டோம் சீதா குகை என்ற போர்டுடன் பழைய காலத்து ஓட்டு வீடு எப்படி இருக்குமோ அது
போல் திண்ணை எல்லாம் இருந்தது.  

சீதை குகை 

போட்டோ எடுக்க கூடாது என்று சொல்லி விட்டதால் உள்ளே போட்டோ எடுக்க முடியவில்லை. அங்கே இருந்த போடோக்கள் விக்ரகங்கள் பார்த்து வணங்கிய படி செல்கையில் ஓரிடத்தில் எலி பொந்து என்று சொல்வோம் இல்லையா அதே போல் ஒரு மனிதர் நுழைய கூடிய அளவில் ஒரு பொந்து இருந்தது. ஒருவர் பின் ஒருவராக குனிந்து உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். ஸ்ரீனிவாசன் வைத்யா இருவரும் சரவணா பார்த்து வா இடிச்சிக்க போறே என்று உஷார் படுதியவாறே சென்றார்கள். (ஏன் அப்படி சொன்னார்கள் என்று கேட்கிறீர்களா.நான் கொஞ்சம் எதிலுமே வேகமாக செயல்படுவேன் இடித்து கொள்ள போகிறேன் என்று தான்)  நானும் குனிந்து அந்த பொந்தில் மெதுவாக நுழைந்தேன்.கால்களை முன்னே விட்டு செல்ல ஆரம்பித்தோம். இருட்டை விரட்ட அந்த சுவரின் மேல் பொடி சைசில் சீரியல் லைட் பொறுத்த பட்டிருந்தது.உள்ளே கீழ் நோக்கி இறங்கியஅந்த பொந்து திடீரென்று ஒரு ரூமிற்குள் சென்று முடிந்தது.

 கற்களை குடைந்த ஒரு அறை போல இருந்தது. அங்கே ராமர் சீதை லக்ஷ்மணன் விக்ரகங்கள் இருந்தன. சாமி கும்பிட்டு விட்டு அகல மீண்டும் ஒரு வழி ஆரம்பித்தது.ஆனால் உடனே முடிந்து விட்டது. மற்றொரு சிறு அறை அங்கே ஒரு  ஒரு பெரிய கல் மட்டும் இருந்தது.
 ராமன் லக்ஷ்மணன் காட்டுக்கு வேட்டையாட செல்லும் போது சீதையை அங்கு தான் அமர வைத்து விட்டு செல்வார்களாம். அவர்கள் வரும் வரை அங்கே தான் இருப்பாராம்  நினைக்கவே கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது. அங்கிருந்த படி யோசித்தேன்.இப்போதெல்லாம்  வெளியில் சென்றவர்கள் வர தாமதமாகி விட்டால் போன் வந்து கொண்டே இருக்கும் எங்கே இருக்கீங்க எப்ப வருவீங்க என்று செல் போன் பேசி தெரிந்து கொள்வார்கள். ஆனால் அப்போது இதெல்லாம் இல்லையே. ராமர் எப்போது வருவரோ தெரியாது. அவர் வரும் வரை அவருக்காக அந்த பீடத்திலேயே அமர்ந்து காத்திருந்திருக்கிறார் என்பதை நினைத்த போது கொஞ்சம் கவலையாக கூட இருந்தது.அதாவது அவர் அப்போது அடைந்த வேதனையை நானும் அடைந்தேன். (இதெல்லாம் நம்ப வேண்டுமா என்று கூட சிலர் நினைக்கலாம். நான் கூட வெளியில் இந்த வீட்டை பார்த்து விட்டு சாதாரணமாக தான் நினைத்தேன் ஆனால் 
உள்ளே இருக்கும் இந்த குகை பார்க்கும் போது தான் இது நிஜம் தான் என்று தோன்றியது)
அங்கிருந்து ஒரு வழி இருந்தது அதில் நுழைந்து குனிந்த படியே வெளி வந்தால்  சிவன் லிங்கம் இருந்தது. அதை தான் சீதை ராமர் பூஜிப்பார்களாம்.நாங்களும்  வணங்கி விட்டு கிளம்பி மீண்டும் ஒரு பொந்தில் மேல் நோக்கி பயணித்தோம். வெளியே வந்த போது உள்ளே சென்ற போந்துக்கு அருகிலே வெளி வந்தோம். அந்த பிரமிப்பு ரொம்ப நேரத்துக்கு அகலவில்லை. எதிரில் ஒரு குடில் இருந்தது அதில் ஒரு ரூபாய் வாங்கி கொண்டு உள்ளே அனுமதித்தார்கள் அனேகமாக அது லக்ஷ்மணனின் குடிலாக இருக்க வேண்டும். உள்ளே ஓவியமாகவும் பொம்மைகளாகவும் ராமாயண காட்சிகள் இருந்தன. போட்டோ எடுத்து  கொண்டோம் 


வெளி வந்து சீதை குகையை ஒட்டி இருந்த மரத்தின் மேடையில் அமர்ந்து போட்டோ எடுத்து கொண்டோம். மக்கள் சென்று கொண்டும் வந்து கொண்டும்இருந்ததால்  
எத்தனை பேரை நிறுத்தி வைத்து விட்டு  போட்டோ எடுப்பது எனவே மக்கள் சென்று கொண்டிருக்கையிலேயே போட்டோ எடுத்தோம் 
அங்கிருந்து கிளம்பி காருக்கு வந்தோம் மதியம் ஒன்றும் சாப்பிடவில்லை. முரளி ஸ்ரீனிவாசனை மதிய சாப்பாடு கூட வாங்கி குடுக்கல என்ன டூர் அழைச்சிட்டு
போறீங்க என்று கிண்டலடித்தார். எங்களுக்கு சாப்பிடும் மூட் இல்லை. கையில் 
இருந்த பழங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட படி கார் ஏறி கிளம்பினோம் 


அடுத்து நாங்கள் கிளம்பியது. திரிகம்பெஸ்வரர் ஆலயத்திற்கு.அது நாசிக்கிலிருந்து முப்பது கிலோ மீட்டார் தொலைவில் இருந்தது நான் 
கூட அந்த கோவிலை சாதாரணமாக தான் நினைத்திருந்தேன். ஆனால் மலைகள் சூழ்ந்த பின்னணியில் இருந்த அந்த கோவிலையும் கோவிலின் வேலைபடுகளையும் பார்த்தவுடன் அதிசயித்தோம். அங்கிருந்து கிளம்ப மனமே வரவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்.இணையத்தில் எடுத்த படம் 

நாங்கள் சென்று இறங்கி ஐந்து மணிக்கு வரிசையில் நின்றோம்.  சாமி தரிசனம் செய்ய ஒரு மணி நேரமானது. அந்தளவு கூட்டம் முதலில் கோவில் கோபுரத்திற்கு முன் உள்ள சிறு கோபுரத்தில் நுழைந்தோம்.அங்கே நந்தி சிலை இருந்தது. அதை சுற்றி ஒரே பண மழை தான் பக்தர்கள் பணத்தை அதில் செலுத்தி கொண்டிருந்தார்கள்.அங்கிருந்து பெரிய கோபுரத்திற்கு வந்தோம்.சன்னதியில்  அக் வடிவத்தில் மூன்று லிங்கங்கள் இருக்கிறது.(சிவன் விஷ்ணு பிரம்மா) மூவரும் சேர்ந்த நிலை என்பதால் திரிகம்பெஸ்வரர் என்று பெயர். அதன் மேல் கோதாவரி ஆற்று நீர் ஊற்று போல் வெளிப்படுகிறது. அதை துடைத்து கொண்டே இருக்கிறார்கள்.அருகே நின்று பார்க்க முடியாமல் வரிசையை நகர சொல்லி  கொண்டே இருந்தார்கள்.தரிசனம் முடிந்து கோபுரம் சுற்றி வந்தோம். அந்த மாலை வேளையில் அந்த கோவில் கோபுரம் பார்க்க ரொம்ப நன்றாக இருந்தது.(அடுத்த முறை நாசிக் சென்றால் கண்டிப்பாக இந்த கோவில் செல்லாமல் வர மாட்டேன் அந்த அளவுக்கு இந்த கோவில் 
என்னை ஈர்த்து விட்டது) அங்கிருந்து கிளம்பி நாசிக் வந்து சேர்ந்தோம். ஹோட்டல் லில் டிபன் சாப்பிட்டு விட்டு
நாங்கள் கார் பயணத்தை முடித்து மும்பை கிளம்ப முடிவு செய்தோம் தொடர்ந்து காரிலே வந்ததால் மும்பைக்கு பஸ் என்ற போது கொஞ்சம் சலிப்பாக இருந்தது. தனியார் பேருந்தில் விசாரித்த போது மும்பையிலிருந்து அவர்களது கார் வந்து விட்டு மும்பை காலியாக செல்வதாகவும் அதில் செல்லுங்கள் 2500 ரூபாய் தான் என்றும் சொன்னார்கள். எங்களுடன் வந்த டிரைவர் 2000 கொடுங்க நானே கொண்டாந்து விட்டுடறேன் என்று சொல்ல சரி என்று சந்தோசமாய் காரிலேயே பயணத்தை தொடர்ந்தோம். 

நான் தூங்க ஆரம்பித்து விட்டேன். திடீரென்று கண் விழித்தேன் பார்த்தால் அந்த இருட்டில் 
கார் மும்பை பை பாசில் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. எல்லோருமே தூங்கி கொண்டிருந்தார்கள் டிரைவர் உட்பட 

அடுத்த பதிவுடன் நிறைவு செய்கிறேன் 

ஆர்.வி.சரவணன் 

17 கருத்துகள்:

 1. படங்களுடன் பயணக்கட்டுரை அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் நன்றி சார்

   நீக்கு
 2. படங்களுடன் அனைத்தும் அருமை...

  அடுத்த சுற்றுலா என்னுடன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தனபாலன் சார் தங்களின் அழைப்பிற்கு நன்றி சுற்றுலா செல்வோம்

   நீக்கு
 3. நீங்கள் விவரிக்கும் போதே - நாம் எப்போது தரிசிக்கப் போகின்றோம் என்று மனம் ஏங்குகின்றது!..

  பதிலளிநீக்கு
 4. பதிவின் முகப்பு படம் அழகாக இருக்கின்றது!..

  பதிலளிநீக்கு
 5. படங்களுடன் பயணக் கட்டுரை இனிமை...

  தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 6. படங்களுடன் பயணக் கட்டுரை அருமை.


  பதிலளிநீக்கு
 7. சென்று வந்த பயணத்தை, படங்களுடன் சேர்த்து அழகாய் விளக்கியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 8. படங்களுடன் பயணக் கட்டுரை அருமை நண்பரே
  அதிலும் முதல் படம் அருமை

  பதிலளிநீக்கு
 9. "அவர் வரும் வரை அவருக்காக அந்த பீடத்திலேயே அமர்ந்து காத்திருந்திருக்கிறார் என்பதை நினைத்த போது கொஞ்சம் கவலையாக கூட இருந்தது.அதாவது அவர் அப்போது அடைந்த வேதனையை நானும் அடைந்தேன்."

  :-)) சரவணன் விட்டா... சீதைக்கு குமுதம் விகடனாவது கொடுத்து இருந்து இருக்கலாம் என்று கேட்பீங்க போல :-)

  நீங்க எடுத்த நிழல் படத்தில் அந்தக் கையும் Flash ம் இல்லை என்றால் அது எடுத்த நிழல் படம் போலவே தெரிந்து இருக்காது.

  நாசிக் என்று சொன்னால் தலைவர் பாட்ஷா தான் நினைவிற்கு வருகிறது. நாசிக் நகரில் நோட்டடித்தால் பாட்ஷாவுக்கும் பங்கு பாரடா! ;-)

  பதிலளிநீக்கு
 10. நானும் உங்களைப் போலத்தான். தெரியாத இடத்தில் தண்ணீரில் இறங்க எனக்கு எப்போதும் பயம். நானும் எச்சரிக்கை செய்வேன். ஆனாலும் நம்மை யாரும் சட்டை செய்வதில்லையே என்ற வருத்தம் உண்டு.

  பதிலளிநீக்கு
 11. நல்ல பயணக் கட்டுரை வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்