வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

நட்புக்கு மரியாதை தரும் பதிவர் சந்திப்பு

நட்புக்கு மரியாதை தரும் பதிவர் சந்திப்பு


திங்கள் கிழமை ஒரு நெருங்கிய சொந்தத்தின் கல்யாணம் தஞ்சாவூரில். நடந்தது. அங்கு சென்றிருந்த போது ஒரு ஆவல் பிறந்தது. அது கரந்தையில் உள்ள நம் வலைபதிவர் நண்பர் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களை சந்தித்து விட்டு வரலாமே என்று.உடனே  கிளம்பினேன்.

அவருடன் அறிமுகமானது பற்றி சொல்ல வேண்டுமானால்,ஒரு 
நாள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்த போது கரந்தை
ஜெயக்குமார் http://karanthaijayakumar.blogspot.com/ என்ற ப்ளாக் கண்ணில் 
படவே நம் ஊர்  பெயர் கொண்ட பதிவர் என்றவுடன் உடனே அவர் தளத்திற்கு சென்றேன். நண்பராக்கி கொண்டேன். கரந்தை தமிழ் சங்க 
கல்வி நிலையங்களில் ஒன்றான உமா மகேஸ்வர மேனிலை பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராக பணியாற்றுகிறார்.தமிழ் பற்றி தமிழ் அறிஞர்கள்  பற்றி அவர் தொடர் பதிவுகள் எழுதி வருகிறார்.
கணித மேதை ராமானுஜம் பற்றி அவர் எழுதிய தொடர் பதிவு படித்து
வியந்தேன்.இப்போது கரந்தை மலர் என்ற தொடர் பதிவை எழுதி வருகிறார் 

அவர் பணி  புரியும் பள்ளிக்கு வந்து,ஆசிரியர்கள் அறையில் நுழைந்து என்னை  அறிமுகபடுத்தி கொண்டு ஜெயகுமாரை பார்க்க வந்திருப்பதாக தெரிவித்த போது எனக்குள் தயக்கம் இருந்தது. ஏனெனில் பள்ளி நடைபெற்று கொண்டிருந்த நேரம் அது. கூடவே முதல் முறை பார்க்க வருவதால் எப்படி என்னை எதிர் கொள்வாரோ என்ற தயக்கமும் இருந்தது. அவரை செல் போனில் தொடர்பு கொண்டு அவரது நண்பர் என்னை பற்றி
சொல்லி அழைக்கவும் அடுத்த சில நிமிடங்களில் வந்தார்.கை குலுக்கி கொண்டோம். அவரை பற்றி, என்னை பற்றி, பதிவுலக நண்பர்கள் பற்றி, பதிவர் சந்திப்பு பற்றி பேசினோம். 

எனக்கு ஒரு ஆசை தோன்றியது. என் செல் போன் காமெராவில் ஒரு போட்டோ எடுத்து கொள்ளலாமே என்று. இருந்தும் எப்படி கேட்பது 
என்று நான் தயக்கமாய் இருக்கையில் என் தயக்கத்தை அவரே தகர்த்தார்.  
சார் ஒரு போட்டோ எடுத்து கொள்ளலாமா என்று அன்புடன் கேட்டார். சந்தோசமாய் தலையசைத்தேன். கேமரா வும் கண் அசைத்தது. 

அவரது நண்பர்களான  திரு. துரைபிள்ளை நடராசன் மற்றும் திரு.கரந்தை சரவணன் இருவரையும் அறிமுகபடுத்தினார். அவர் எழுதிய புத்தகங்களில் இரண்டை பரிசளித்தார். விடை பெற்று கிளம்பும் போது நீங்கள் நடந்து செல்ல வேண்டுமே  நான் உங்களை கொண்டு வந்து விடவா என்றும் கேட்டார். நான் அன்போடு மறுத்து விட்டு  கிளம்பி வந்த பிறகும் அவரின் சந்தோசமும் உபசரிப்பும் என் நினைவில் தொடர்ந்து கொண்டே இருந்தது. பதிவுலகம் ஏற்படுத்தி கொடுத்த  நட்பை கொண்டாடிய  நிமிடங்கள் அவை என்று சொன்னால் அது மிகையல்ல.அவரது தமிழ் பணி வெற்றியுடன் 
தொடரட்டும். ஒரு நல்ல நண்பனாய் நானும் தொடர்கிறேன்.

வலை பதிவர்,திரு.கரந்தை ஜெயக்குமார் அவர்களை நான் 
சந்தித்த அந்த நிமிடங்கள் தந்த சந்தோஷம் ஒரு ஆரம்பம் 
என்பதை போல் இதோ சந்தோஷம் தொடர்கிறது  
நூற்றுகணக்கில் வலை பதிவர்களை ஒன்றாக ஓரிடத்தில் 
இணைக்கும் பொன்னான வாய்ப்பை தந்திருக்கிறது. 
செப்டம்பர் 1 ஞாயிறு அன்று நடைபெறும் 
தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா 

நிகழ்ச்சி நிரல் இதோ 
சிறப்புரையாற்றும் திரு.பாமரன் அவர்கள், திரு.கண்மணி குணசேகரன் அவர்கள்  மற்றும் பதிவர்களின் தனி திறன் நிகழ்ச்சிகள், பதிவுலக தோழமைகளின் நூல்கள் வெளியீடு என்று கோலாகலமாக நடைபெறும் இப் பதிவர் சந்திப்புக்கு, இன்னுமொரு சிறப்பு சேர்க்கிறது நண்பர் திரு.வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸ்  புத்தக அரங்கு 


நம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த நட்புக்கு நாம் மரியாதை செய்யும் 
விழா. மகிழ்ந்து கொண்டாட வருகை தரும் அனைவரையும் வருக வருக என்று (விழா குழுவினர் சார்பாகவும்) குடந்தையூர் சார்பாகவும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் 

வருங்காலம் நமதாகட்டும் 
வெற்றி நம் வசமாகட்டும் 

ஆர்.வி.சரவணன் 

11 கருத்துகள்:

 1. இந்த பதிவர் சந்திபிளுங்களை சந்தக்க ஆவலுடன்... கடந்த பதிவர் சந்திப்புக்கு பின் மீண்டும் நாம் இப்போது தான் சந்திக்க இருக்கிறோம் என்று நினைக்கிறன்...

  பதிலளிநீக்கு
 2. உங்களின் நினைவை மீட்கும் பதிவு///


  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. பதிவின் தலைப்பு மேலும் சிறப்பு... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. தங்களின் ஒவ்வொரு எழுத்துக்களும் மட்டில்லா மகிழ்வினைத் தருகின்றன நண்பரே. நன்றி.
  வலை பதிவர் திருவிழாவில் மகிழ்வுடன் கலந்து கொண்டு, திருவிழா பற்றி எழுதுங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றேன். நன்றி

  பதிலளிநீக்கு
 5. பதிவுலகம் ஏற்படுத்தி கொடுத்த நட்பை கொண்டாடிய நிமிடங்கள் அழகானவை ..

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 6. அன்பு நெஞ்சங்களின் சங்கமத்தினை வடித்த அழகாக பதிவு!.. வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
 7. அன்பின் சரவணன் - எங்கு சென்றாலும் அங்குள்ள பதிவர்களைக் கண்டு அல்வளாவி மகிழ்வது நன்று - இப்படித்தான் பதிவர் சந்திப்பு எல்லா இடத்திலும் நடந்து வருகிறது - நல்வாழ்த்துஆல் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான பகிர்வு! வலையுலகம் நல்ல நண்பர்களை பெற்றுத்தருவதில் மகிழ்ச்சிதான்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. பதிவின் தலைப்பு அருமை...
  பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. கரந்தையாருடன் சில நிமிட நேரமே சந்திப்பு!
  எனினும் அதை பெரும் சிலிர்ப்புடன் விவரித்தது உவப்பு!
  படித்து எனக்கு தித்திப்பு!

  பதிலளிநீக்கு
 11. உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அண்ணா..

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்