திங்கள், ஆகஸ்ட் 19, 2013

எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது ?
எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது ?


அப்படி என்ன நடந்துச்சு னு தானே கேட்கறீங்க 
வாங்க என் கூட 

சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு வீட்டுக்கு செல்லும் வழியில் 
வாழைபழம் விற்பவரிடம் இரண்டு பழம்  கேட்டேன்.அவர் கொடுத்ததில் ஒன்று நன்கு கனிந்திருந்தது. நான் "சார் ஏற்கனவே கனிஞ்சிருக்கு 
வீட்டுக்கு போறதுக்குள்ளே இன்னும் கனிஞ்சிரும் அதனாலே வேற கொடுங்க" என்றேன் மென்மையாக.அவரோ கடுப்பாகி என்னது நான் 
கொடுத்த பழம் கணிஞ்சிருக்கா சான்சே இல்லை என்று அதிமேதாவி 
தனமாக சிடுசிடுத்தவர், பழத்தை வாங்கி பார்த்து விட்டு இது 
எங்கே கனிஞ்சிருக்கு என்று (சந்திரமுகி யில் ஜோதிகா கேட்பாரே எனக்கா எனக்கா என்று அது போல் ) கோபமாய் கேட்டார். நான் அமைதியாகவே, "கொஞ்சம் கொடுங்க இப்படி" என்று அதை வாங்கி அவருக்கு எதிரிலேயே தோலை உரித்தேன். பாதிக்கு மேல் நன்றாக கனிந்திருந்தது. பல்ப் வாங்கியவர் போலானது அவர் முகம். அவர் மனைவி உடனே வேறு பழம் எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் நீங்க வேற பழம் கொடுக்கணும் னு நான் இதை உரிக்கலை. கனியவே இல்லைன்னு சார் சொன்னாரே அதை ப்ரூப் பண்ண தான் இப்படி செஞ்சேன். இதையே சாப்பிட்டுகிறேன் என்றவாறு இடத்தை விட்டகன்றேன்.ஒரு பழம் கணிஞ்சிருக்கா இல்லியா என்று தெரியாமல் எப்படி தான் வியாபாரம் பண்றாங்களோ. ஒரு வேலை கனிந்ததை விற்பதற்கான வியாபார தந்திரமாக கூட இருக்கலாம். (ஒரு பழத்துக்கு இவ்வளவு பிரச்னையா னு கேட்கறீங்களா வாங்க அடுத்த பிரச்னைக்கு .  

மறு நாள் காலை செல் போன் ரீசார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்தேன். 
ஒரு ரூபாய் சில்லறை கேட்டார் கடையின் முதலாளி ( வயதானவர் ). நான் இரண்டு ஐம்பது காசுகள் கொடுத்தேன். அவர் பார்த்து விட்டு ஒரு ரூபாய் இருந்தால் கொடுங்க என்று சொல்லியிருந்தால் ஒன்றும் பிரச்னை இருந்திருக்காது. அதற்கு பதில் " பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான் 
இதை போய் நான் எப்படி வாங்கறது" என்றார் எடுத்த எடுப்பிலே. 

எனக்கு கோபம் வந்து விட்டது. " பிச்சைக்காரன் வாங்க மாட்டான் என்றால் அவனுக்கு காசோட அருமை தெரியவில்லை என்று அர்த்தம். அவனுக்கு 
நீங்க சப்போர்ட் பண்றீங்க என்றால் அவன் உழைக்காமல் சோம்பேறியாய் இருப்பதற்கு உதவுகிறீர்கள் என்று அர்த்தம்" என்று நான் சொன்னவுடன் அவர், "ஐம்பது காசு எல்லாம் இப்ப யாரும் வாங்கறதில்லே கொடுக்கறதில்லே" என்றார் சிடுசிடுப்புடன். "அது இங்கேயே உட்கார்ந்திருக்கிற உங்களுக்கு எப்படி தெரியும். டெய்லி ஊர் சுத்தி வரவங்களை கேளுங்க அவங்களுக்கு தெரியும். என்றேன். "நான் வாங்கறதில்லே சார் " என்றார் முடிவாய் . "வாங்க விருப்பமில்லை சொல்லுங்க" என்று சொல்லி விட்டு வெளி வந்தேன்.

ரொம்ப நேரத்திற்கு அவர் சொன்ன வார்த்தை என்னை டென்சனாக்கி கொண்டே இருந்தது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான் என்றால் நீ வாங்கியிருக்கே என்று நக்கலடிக்கிராரோ என்றும் தோன்றியது. 

அதோடு முடியவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் வேறொரு
 பிரச்னை வந்தது 

காலையில் சாப்பிடவில்லை என்பதால் சரி ஹோட்டல் போகலாம் 
என்று ரயில் நிலையத்தில் இருக்கும் பிரபல உணவகத்தில் சாப்பிட சென்றேன் அங்கே ஸெல்ப் சர்வீஸ். பரோட்டா வாங்கி கொண்டு சாப்பிட
ஆரம்பித்தேன். அவர்கள் கொடுத்த குருமா ஒரு பரோட்டாவுக்கு தான் கரெக்டா இருந்திச்சு. சரி னு அடுத்த பரோட்டா வுக்கு குருமா வாங்க  
நான் சென்ற போது  கூட்டம் அதிகமாக இருந்தாலும் பொறுமையாய்
நின்று (இரண்டு நிமிடம் இருக்கும்) வாங்கி கொண்டு வந்து பார்க்கிறேன். 
நான் சாப்பிட்ட இடத்தில் பரோட்டா பிளேட்டை காணும். அந்த இடத்தில் வேறொருவர் வேறு ஏதோ சாப்பிட்டு கொண்டிருந்தார். 

நான் கடுப்பாகி காசாளரிடம் வந்து சொன்னேன். அவருக்கு சிரிப்பு வந்து விட்டது இருந்தும் அதை வெளி காட்டாமல்  மேலாளரிடம் சொல்ல, 
அவர் டேபிள் கிளீன் செய்யும் பெண்ணிடம் விசாரித்தார். " சாப்பிட வந்தவங்க சாப்பிட்ட தட்டு  ஏன் எடுக்காமே வச்சிருக்கீங்க எடு னு சொன்னாங்க. எடுத்துட்டேன்" என்றார் சர்வ சாதாரணமாக. 

நான் கோபமாகி "என்ன சார் இது. ஆரம்பத்திலேயே குருமா கொஞ்சம் கூட கேட்டால் சாப்பிடுங்க தரோம் னு சொல்றீங்க, சரி னு பாதி சாப்பாட்டுல வந்து கேட்டா இப்படி தட்டையே எடுத்துடறீங்களே " என்றேன். "சாரி சார் 
ஒரு பரோட்டா தானே. நான் தர சொல்றேன். ஆர்க்யுமென்ட் வேண்டாம் ப்ளீஸ்" என்றார்."சண்டை போட்டு கேட்டு வாங்கி சாப்பிடறது  அசிங்கம். 
நீங்க முதல்ல சர்வீசை ஒழுங்கா பண்ணுங்க" என்று கத்தி விட்டு 
வந்து விட்டேன்


முதல் நாளிரவு பத்து மணியிலிருந்து அடுத்த நாள் காலை பத்து மணிக்குள் பிரச்னைகள் இப்படி வரிசை கட்டி வந்தன. இதை படித்த உங்களுக்கு,  இந்த முணு இடத்திலும் நான் ஏதோ விட்டு கொடுத்துட்டு (கத்திட்டு) வந்துட்டதா தோணும். எனக்கென்னமோ என் எதிர்ப்பை பலமா பதிவு பண்ணிட்டு வந்ததா தான் தோணுது 


FINAL PUNCH

மேற் கண்ட நிகழ்வுகளின் follows 

* வீட்டில் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைத்து வாங்கிய 
பழத்தை தெருவிலேயே சாப்பிட்டவாறு செல்ல வேண்டியதாயிற்று 

*அந்த இரண்டு ஐம்பது காசுகளை அன்றே வேறொரு கடையில் 
கொடுத்த போது வாங்கி கொண்டார்கள் . சமீபத்தில் வேறொரு 
கடையில் இதே போல் ஐம்பது காசுகள் கொடுத்தார்கள். வாங்க மாட்டேங்கறாங்க என்றேன். பரவாயில்ல என் கிட்டே கொண்டு வாங்க நானே வாங்கிக்கிறேன் என்றார் அந்த கடைக்காரர். இது எப்படி இருக்கு 

*அன்னிக்குன்னு பார்த்து பரோட்டா முறுகலா சூப்பரா இருந்துச்சு 


ஆர்.வி சரவணன் 

படம் நன்றி முக நூல் 

13 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா எனக்கும் சில சமயம் வரிசையாய் ஒரேநாளில் பல பல்புகள் கிடைத்துவிடுவது உண்டு

  பதிலளிநீக்கு
 2. மூன்று சம்பவங்களும் காரமாக இருந்தன;
  ஆனால், கடைசியில் சொன்ன தோசை முறுகலா
  டேஸ்டா இருந்தது.

  தோசை/
  பரோட்டா

  பதிலளிநீக்கு
 3. ஏன் இன்னும் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை சார்?

  பதிலளிநீக்கு
 4. ஹா ஹா ஹா... அண்ணே அன்னைக்கு உங்களுக்கு நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன்... இருபத்து நாலு மணி நேரத்துல இத்தனை அடியா... ஆத்தீ...

  பதிலளிநீக்கு
 5. உண்மையிலேயே உங்க கருத்தை அழுத்தமாகத்தான் பதிந்து வந்திருக்கிறீர்கள் அண்ணா....

  பதிலளிநீக்கு
 6. குட் சரவணன்.. நீங்கள் நீங்களாவே இருப்பதுதான் நல்லது. அடுத்தவனுக்காக நம்மை ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்.

  //சண்டை போட்டு கேட்டு வாங்கி சாப்பிடறது அசிங்கம்.//

  -நம் வீட்டில் சண்டை என்றாலே பச்சைத் தண்ணீர் குடிக்காத நாம், யாரோ ஒரு மூன்றாம் நபரிடம் சண்டை போட்டுவிட்டு எப்படி சாப்பிட மனசு ஒப்பும்.

  இந்த மூன்று நிகழ்வுகளையும் நீங்கள் எழுதியிருக்கும் விதம், உங்கள் எழுத்து முதிர்ச்சியைக் காட்டுகிறது.

  தொடர்ந்து நிறைய எழுதுங்கள். வாரா வாரம் பயணத்திலேயே இருக்கும் உங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும். அத்தனையையும் எழுத்தாக்குங்கள்!

  -அன்புடன்
  வினோ

  பதிலளிநீக்கு
 7. உங்களுக்கு மட்டுமல்ல வீட்டை விட்டு கிளம்பிவிட்டாலே, நடப்பதை யாரறிவார்?

  பதிலளிநீக்கு
 8. எவ்வளவு பிரச்சனை ( பரோட்டா முறுகலா இருந்துச்சு)... ஹிஹி...

  பதிலளிநீக்கு
 9. தங்களின் பார்வைக்கு : பதிவர் சந்திப்பு திருவிழா 2013 - ஆதலால் பயணம் செய்வீர்

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html

  பதிலளிநீக்கு
 10. எம்புட்டு பிரச்சினையை சந்திக்க வேண்டி இருக்கு ... அவர்களைப் போல சண்டிக்குதிரை யாய் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள் போல , தவறை சுட்டிக்காட்டினால் போதும் தேவாரத்தையும், திருவாசகத்தையும் தேனாய் பொழியும் சமூகத்தில் வாழ்கிறோம் சார் ...

  பதிலளிநீக்கு
 11. லோகத்துல யாருக்கும் பொறுப்பில்ல.. ஐயோ ஐயோ ஒரே காமெடி.

  பதிலளிநீக்கு
 12. ஆசிரியர் கரந்தை ஜெயகுமார் வலை வழியே இங்கு வந்தேன். வாழ்த்துக்கள்! கனிந்த வாழைப்பழத்தில் தொடங்கிய கோபத்தை ஐம்பது பைசாவில் காட்டிவிட்டு குருமா வரை வலைப்பதிவில் கொட்டி தீர்த்து விட்டீர்கள். இது எல்லோருக்கும் ஏற்படும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. எனக்கும் இதுபோல் அடிக்கடி ஏற்படும். அந்த அனுபவங்களை ” யாரிடம் கோளாறு? “ என்ற தலைப்பில் http://tthamizhelango.blogspot.com/2012/11/blog-post.html கவிதையாக எழுதி இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. சரவணன் நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவர் அது தான் உங்களுக்கு இப்படி நடக்குது போல.. :-)

  நீங்க வேற பழம் வாங்கி இருக்கணும் என்று தோன்றுது.. இப்படி எல்லாம் விடாதீங்க சரவணன். நம்ம தலையில மிளகாய் அரைச்சுடுவாங்க

  எனக்கு ஐம்பது காசு மேட்டர் ஆச்சர்யமா இருக்கு.. அந்த ஆளை நீங்கள் பஞ்சர் ஆக்கி இருக்கணும்.. மவனே அடுத்த வர ஆளு கிட்ட... செல்லாது காசு இருந்தா கூட கொடுங்க.. வாங்கிக்கிறேன் என்று சொல்ற அளவுக்கு அவரை போட்டு கும்மியிருக்கணும் :-)

  ஹோட்டல் மேட்டர் கொஞ்சம் சிக்கலானது தான்.. இது பொதுவான பிரச்சனை தான் என்று நினைக்கிறேன். சோ இதை மன்னித்து விடலாம் :-)

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்