செவ்வாய், ஜூன் 25, 2013

ஜாலி கமெண்ட்ஸ் with பஞ்ச்

ஜாலி கமெண்ட்ஸ் with பஞ்ச் 


நம் தமிழ் திரைப்படங்களின் புகழ் பெற்றவசனங்களை வைத்து 
ஜாலியாக (கேலியாக அல்லசிலகமெண்ட்ஸ் எழுதியிருக்கிறேன். 


 ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா 

இருக்கட்டுமே கூடவே பெண் சிசுவுக்காக கள்ளி செடியும் அல்லவா 
வளர்த்தா

------

என் காதலி உங்கள் மனைவியாகலாம்
உங்கள் மனைவி என் காதலியாக முடியாது


இப்படிசொல்லி தப்பித்து அடுத்த பிகர் க்கு லெட்டர் போட்ற
வேண்டியது தான் 


------

ரெண்டு பழத்துல ஒன்னு இந்தாஇருக்கு
இன்னொன்னு எங்கே


பழனிக்கு போயிருக்கு
அநேகமா இந்நேரம் அது பஞ்சாமிர்தம் ஆகியிருக்கும்


-----

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே 

அப்படினா புரிஞ்சிக்கிற மாதிரி கேரக்டர் பண்ணுங்க 

------

என்னை பார்த்து சொல்லு என் கண்ணை பார்த்து சொல்லு

மெட்ராஸ்  வந்துருக்கிற நேரத்தில கண்ணை பார்க்க சொல்றியே நியாயமாரேரேரே 

------

சூடானேன் சுளுக்கெடுத்துடுவேன்

நீங்க ஹீட் ஆகிடுங்க எதுக்கு சொல்றேன்னா 
எனக்கு விழுந்த சுளுக்கை எடுத்தாகனும் 

------

கார் வச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கா

இதென்ன கேள்வி யாரு ஆசைபட்டோனோ அவன் வச்சிருப்பான்

------

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்
இப்படி இருக்கிற நீங்க  எப்படி அப்படி ஆகினீங்க ஆர்.வி.சரவணன் 

படம் : நண்பரின் முக நூலில் இருந்து 


11 கருத்துகள்:

  1. படம் சூப்பர் வரிகளும் அருமை.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. இப்படி தியேட்டர்ல வர்ற கமெண்ட்ஸ் பல சமயம் படத்துல வர்றத விட அருமையா இருக்கும்.,

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்