புதன், மே 08, 2013

ஆங்கிலமே அருகில் வா....

ஆங்கிலமே அருகில் வா....


(இத்தனை நாளா நம்ம ப்ளாக் ல தொடர்கதை எழுதினதாலே, வேற எதை பத்தியும் 
எழுத முடியல. இதோ ஒரு அனுபவ பதிவு) 


ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்துட்டு போறப்ப இங்கிலீஷை  மட்டும் ஏன் விட்டுட்டு போனாங்க அதையும் எடுத்துட்டு போக வேண்டியது  தானே. இப்படி தான் நான் ஸ்கூல் படிக்கிறப்ப நண்பர்களிடம்  கடுப்படிப்பேன் . தமிழ் மீடியம் படிச்சதாலே இங்கிலீஷ் எனக்கு அவ்வளவா வராது.  நான் இருக்கிற இடத்திலிருந்து  ஒரு அஞ்சு கிலோ  மீட்டர் தூரம் வரைக்கும் எனக்கும் அதுக்கும் DISTANSE  உண்டுன்னா பார்த்துக்கங்க. ENGLISH  பாடத்துல மார்க் கம்மியா  இருக்கிறதை பார்த்து ஏன் உனக்கு இங்க்லீஷ் வரலே னு  வீட்டில் என்னை அடி பின்னிடுவாங்க நான் தான் வராதுங்கிறேன்ல  அதை ஏன் வர வச்சி பார்க்கணும் னு ஆசைபடறீங்க னு நான் புலம்பாத குறை தான் 

ஆங்கில பாடத்தில் ESSAY  எப்படி படிப்பேன் தெரியுமா. அதில் உள்ள   மீனிங் சுத்தமா புரியாம அப்படியே மனப்பாடம் பண்ணுவேன் . முதல் வரி ஆரம்பிச்சா கடைசி வரி வரைக்கும் சொல்ற மாதிரி நெட்டுரு போடுவேன்.நடுவிலே ஏதோ தடங்கல் வந்துச்சின்னா மறுபடியும் முதல்லேருந்தா கதை தான். காலேஜ் லே நான் அரியர்ஸ் வச்சது  கூட ஆங்கிலத்தில் தான்.   இப்படியே போயிட்டிருக்குமா வாழ்க்கை. படிப்பு முடிஞ்சு நான் சென்னை வந்தப்ப தான் தெரிஞ்சுது   ஆங்கிலத்தின்  சக்தி என்னனு 

வேலைக்கு செல்லும் இடங்களில் அப்ளிகேசன் கேட்கும் போது நான் ஏற்கனவே தயாராய் வைத்திருக்கும் மாடல் பார்த்து அப்படியே எழுதி கொடுப்பேன். ஒரு இடத்தில   டேபிள்க்கு கீழே வச்சி நான் எழுதி கொடுத்ததை அங்கிருந்த லேடி ரிசெப்சனிஸ்ட்  பார்த்துட்டு,  நான் வேலையில்  சேர்ந்த பின்னாடி என் கிட்டே சொல்லி கேலி  பண்ணாங்க 

ஒரு இடத்தில APPLICATION கேட்கிறப்ப நான் அது மாதிரி எழுதலாம்னு நினைச்சா மாடல் பேப்பர் வெளியிலே எடுக்க முடியலை.  காரணம் அந்த  கம்பெனி யின் முதலாளி என் எதிரிலேயே அமர்ந்திருந்து  எழுதி கொடு னு  சொன்னார். எப்படி காப்பி அடிச்சு எழுத முடியும்.  SO நான்  சொந்தமா எழுதி கொடுத்தேன்.அதை பார்த்துட்டு அவர் நீ இங்க்லீஷ் லே ரொம்ப வீக் போலிருக்கே  என்றார். ஆமாம்  சார் என்றேன் பரிதாபமாய் . FIRST IMPRESSION IS A BEST IMPRESSION னு  சொல்வாங்க முதல் சந்திப்பிலேயே என் ஆங்கிலம் பற்றி அவருக்கு தெரிந்து விட்டதால் அதற்கு பிறகு நான் என்ன தான் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டி வேலை செய்து வெற்றி பெற்றாலும் மற்றவர்களை விட எல்லா விதத்திலும் நான்    முன்னணியில் இருந்தாலும் அதெல்லாம் பெரிய விசயமாகவே தோன்றவில்லை முதலாளிக்கு 

 நான் ஆங்கில பேப்பரில்  எனக்கு பிடித்த சினிமா நியூஸ் அதிகமாக படிப்பேன். தொடர்ந்து படித்ததால் கொஞ்சம் நல்ல ரிசல்ட் கிடைத்தது. அதாவது வருகின்ற லெட்டர் படித்து புரிந்து கொள்ளவும் ஆங்கிலத்தில்  பேசுபவர்கள் சொல்வதை  புரிந்து கொள்ளவும் முடிந்தது.இப்போது வேலை  பார்க்கும் நிறுவனத்தில் நான் ஒரு DEPARTMENT ஹெட் அதற்கு தேவையான லெட்டர்ஸ் ரெடி செய்ய நான் லெட்டர் அடிப்பவருக்கு  தமிழில் டிக்டேட் செய்வேன் அவர் அடித்து தருவதில் இந்த இடத்தில பொருள் சரியாக வரவில்லை இன்னும் சரியாக வர  வேண்டும் என்று திருத்தும் அளவுக்கு புலமை வந்து விட்டது
(இப்போது இடைவெளி  மூன்று கிலோ மீட்டர் ) 

இருந்தும் ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றால்  நான் அடுத்தவரை நாடும் அளவுக்கு தான் இருக்கிறது   நிலைமை. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நபர் என்னுடன் போனில் உரையாடும் போது அவர் கூறுவதை கேட்டு விட்டு நான் அதற்கு பதிலை என் உதவியாளருக்கு அல்லது  சக ஊழியருக்கு தமிழில் சொல்வேன். அவர் அதை ஆங்கிலத்தில்  போனில் மொழி பெயர்ப்பார் இப்படி தான் பொழுது சென்று கொண்டிருக்கிறது(இடைவெளி இரண்டு கிலோ மீட்டர் )


உனது கற்பனை திறனுக்கு ஆங்கிலத்தில் நீ CORRESPONDANCE லெட்டர்ஸ்  சூப்பரா  ரெடி பண்ணலாம் என்று ஊக்கமளிக்கிறார்கள் அலுவலக நண்பர்கள் எல்லாரும் .அப்படி நான் முயற்சித்து ஆங்கிலத்தில் புலமை பெற்றால் கண்டிப்பாக என்னால் கூடுதலாக சம்பளம்  கேட்டு  பெற  முடியும் 

இருந்தும் என்ன செய்ய , இங்கிலீஷ் பேப்பரை வைத்து கொண்டு படிக்க ஆரம்பித்தால் நாலு வார்த்தைக்கு மேல் கடினமான வரிகள் வரும் போது நான் டிக்சனரி கையில் எடுப்பதற்கு பதிலாக சலிப்பை கையில் எடுத்து கொண்டு பேப்பரை தள்ளி வைத்து விடுகிறேன் 


பல இடங்களில் ஆங்கிலம் தெரியாமல்  நான் விழித்ததுண்டு. இருந்தாலும் ஆரம்பத்திலேயே சொல்லி விடுவேன் எனக்கு ஆங்கிலம் வராது என்று இதற்காக வேட்கபடுவதில்லை.(தெரியாததை தெரியும் னு சொல்றதுக்கு தானே வெட்கப்படணும்.) அலுவலக வேலையாக  டெல்லி பாம்பே என்று பல இடங்களுக்கு   செல்லும் போதும் விமானத்தில் சென்ற போதும் ஆங்கிலம் தெரியாமல் நான் பட்ட பாடு இங்க்லீஷ் விங்க்ளிஷ் ஸ்ரீதேவி போல் தான் 

   
வீட்டில்,  நீங்க முயற்சி செய்தால் நல்லா பேச முடியும். ஆனால் நீங்க  அக்கறை எடுக்க மாட்டேங்கறீங்க என்று சொல்கிறார்கள். எனக்கு கூட ஆங்கிலம்  மிக  அருகில்  இருப்பதாக ஒரு பீலிங்  இருந்து கொண்டிருந்தாலும், பேசவோ எழுதவோ இன்னும் தயங்கி கொண்டு தானிருக்கிறேன் 
   
FINAL PUNCH 

செல் போன் க்கு ரீசார்ஜ் பண்ணுவோமே. அது போல் ஆங்கிலத்தை அப்படியே 
மூளைக்குள் சார்ஜ் பண்ற மாதிரி எதுனா இருக்கா சொல்லுங்களேன் 

ஆர்.வி.சரவணன்

(பதிவில் இங்கிலீஷ் விங்க்ளிஷ் படம் பற்றி ரெண்டு வார்த்தை சொன்னதால்   
அந்த படம் போட்டிருக்கேன்)  


4 கருத்துகள்:

 1. சிறு நம்பிக்கை + சிறு முயற்சி = வெற்றி

  செம பஞ்ச்...

  பதிலளிநீக்கு
 2. //தெரியாததை தெரியும் னு சொல்றதுக்கு தானே வெட்கப்படணும்//

  அட விடுங்க சார்... இதையெல்லாம் பெரிய பிரச்சனையா யோசிக்காதீங்க.. தப்பு தப்பா பேச ஆரம்பிங்க.. நம்மள கிண்டல் பண்றதுகாது நம்மள சரி பண்ணுவாங்க.. அப்டியே நம்மள நாமே திருத்திட்டு அடுத்த ஷேக்ஸ்பியர் ஆயிறலாம்

  பதிலளிநீக்கு
 3. பலர் சொல்வதில்லை நீங்க சொல்லிட்டிங்க. முயற்சியை தொடருங்கள் நிச்சயம் வெற்றி உண்டு.

  பதிலளிநீக்கு
 4. அண்ணா...
  மனதில் உள்ளதை சொல்லியிருக்கீங்க... வாழ்த்துக்கள்.
  நானெல்லாம் 12வது வரை தமிழ் மீடியம் தான்... காலேசில் போய் எங்கள் புரபஸர் சொல்லின் படி ஆங்கிலத்தில் (புரிந்து படித்தெல்லாம் இல்லை) எழுதினோம்... ஆங்கில பாடத்தில் அரியர் விழுகாதது கொஞ்சம் சந்தோஷமே... அப்படித்தான் ஓடியது... உங்களைப் போல்தான் தயக்கமே என்னையும் நிறைய இழக்கச் செய்தது. இங்கு வந்து அப்படி இப்படி ஓட்டி இப்போ ஓகேதான்...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்