சனி, பிப்ரவரி 09, 2013

தொலைக்.................................காட்சி

தொலைக்.................................காட்சிதொலைகாட்சி பற்றி தொலை நோக்குடன் சிந்தித்த போது எனக்கு தோன்றிய சில குட் கொஸ்டின் களுக்கு உங்கள் யாருக்காவது பதில்  தெரியுமா 

*இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி ஒரு புதிய படத்தை ஒளிபரப்புபவர்கள் ஏற்கனவே நிறைய முறை ஒளி பரப்பான படங்களை போடும் போது மட்டும் இத்தனையாவது முறையாக எங்கள் சானலில் ஒளி பரப்பாகிறது என்று ஏன் சொல்வதில்லை

*விளம்பரங்களுக்கு பிறகு நிகழ்ச்சி தொடரும் என்று இருக்கும் நிலை வருங்காலத்தில் விளம்பரங்களுக்கு பின் நேரமிருந்தால் நிகழ்ச்சி ஒளி பரப்பாகும் என்று சொல்லப்படுமோ

*ஒரு சேனல் ஒரு புதிய நிகழ்ச்சியை உருவாக்கி ஒளி பரப்பும் போது மற்ற சானல்களும் அதே போல் ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி அதே நேரத்தில் ஒளி பரப்பி  அந்த நிகழ்ச்சி மீது இருக்கும்  நம் சுவாரஸ்யத்தை அடியோடு குறைத்து விடுகிறார்களே ஏன்

*விடுமுறை நாட்களில் நல்ல படம் ஏதேனும் போடுவார்களா பார்க்கலாம் என்று நாம் ஆர்வமுடன் அமரும் போது நல்ல படங்கள் போடாமல் வேலை நாட்களில் நல்ல படங்களை போட்டு நம்மை வெறுப்பேற்றுவது ஏன்


FINAL PUNCH 

ஒரு வேளை நான் டிவி ஆரம்பிச்சாலும் இப்படி தான் இருக்குமோ 


ஆர்.வி.சரவணன்

தளம் ஆரம்பித்த புதிதில் வெளியானது இது 

8 கருத்துகள்:

 1. ஒரு வேளை நான் டிவி ஆரம்பிச்சாலும் இப்படி தான் இருக்குமோ
  >>>
  இருக்குற இம்சைகள்லாம் பத்தாதுன்னு நீங்களும் டிவி ஆரம்பிக்க போறிங்களா?! நான் டிவியே இல்லாத ஊர் போறேன். அப்படி கிடைக்கலைன்னா வேற ஸ்டேட் போறேன். அதும் கிடைக்கலைன்னா வேற நாட்டுக்கு போறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதுக்கு பிரச்னை நான் டிவி யே ஆரம்பிக்கலை போதுமா

   நீக்கு
 2. விடுமுறை நாட்களில் குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடி வெளியில் சென்று மகிழுங்கள் இந்த டிவி டென்ஷனில் இருந்து விடுபடலாம்.

  பதிலளிநீக்கு
 3. டிவி யில் எனக்கு பிடிக்காததே விளம்பரம் தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில விளம்பரங்கள் கொள்ளை அழகு. என்னை மறந்து நான் பார்ப்பேன்

   நீக்கு
 4. விளம்பரங்கள் இல்லையெனில் பல நிகழ்ச்சிகள் ஏது...?

  பதிலளிநீக்கு
 5. விளம்பரங்கள்
  முடியும்போது,
  "சிறிது நிகழ்ச்சிக்குப் பின் விளம்பரங்கள் தொடரும்" என்றும்கூட
  அறிவிப்பு
  வரலாம்.

  பதிலளிநீக்கு
 6. விளம்பரங்கள்
  முடியும்போது,
  "சிறிது நிகழ்ச்சிக்குப் பின் விளம்பரங்கள் தொடரும்" என்றும்கூட
  அறிவிப்பு
  வரலாம்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்