புதன், பிப்ரவரி 06, 2013

இளமை எழுதும் கவிதை நீ-20


இளமை எழுதும் கவிதை  நீ-20
நீ பேசாத பொழுதுகளில் உன் கொலுசுடன் 
உரையாடி கொண்டிருக்கிறேன் சிவாவை உட்கார் என்று ஆசிரியரும், உட்காராதே என்று உமாவும் ஆர்டர் போட்டதால் என்ன செய்வது என்று கொஞ்சம் தடுமாறிய சிவா, உமா சொல்லை கேட்கும் முடிவுக்கு  வந்து உட்காராமல் நின்றான்.

"என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முழிக்கிறே உட்கார்டா" என்றார் ப்ரோபசர்.

கார்த்திக் அவரது  ஒருமை க்கு கோபபட்டவன்,  பாலுவின் கை அழுத்தவே  கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான். சிவாவை,  இருவரும்  கண்களால் உட்கார சொல்லி ஜாடை காட்டினர்.

"இப்ப உட்காரியா இல்ல வெளில போறியா"

 "எனக்கு தெரியும் நான்  சொல்றேன் சார்"

"கெட் லாஸ்ட்" என்றார் சீற்றமாய்

சிவா இதனால் அதிர்ந்து என்ன முடிவெடுப்பது என்று திணறும் போது
கை கொடுத்தாள். உமாவின் பக்கத்தில் இருந்த அவளது தோழி

தொடரும் 

ஆர்.வி.சரவணன் 

the story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

ஓவியம் :இளையராஜா 

8 கருத்துகள்:

 1. கடுப்-படித்த பேராசிரியரே,
  படித்த சிவாவைப் பாராட்டிவிட்டார்.

  அதேபோல், சுரேஷும் சண்டை போடுவதை விட்டுவிட்டு, சிவாவை பாராட்டும் நாள் விரைவில் வரும்...

  பதிலளிநீக்கு
 2. கடுப்-படித்த பேராசிரியரே,
  படித்த சிவாவைப் பாராட்டிவிட்டார்.

  அதேபோல், சுரேஷும் சண்டை போடுவதை விட்டுவிட்டு, சிவாவை பாராட்டும் நாள் விரைவில் வரும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிசாமுதீன்

   நீக்கு
 3. முதல் பகுதி சுவாரசியமாக இருந்தது :-) இரண்டாவது சென்டிமென்டாக இருந்தது

  பதிலளிநீக்கு
 4. புது மணத்தம்பதிகளை நினைக்க வருத்தமா இருக்கு. சிவாவை பாராட்ட தயங்கும் பேராசிரியர் போலத்தான் நிறைய பேர் இருக்காங்க.

  பதிலளிநீக்கு
 5. அதீத அன்பு இருக்குமிடத்தில் தான் அதிகமான கோபம் இருக்கும் கார்த்திக் ..போல .

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்