புதன், ஆகஸ்ட் 29, 2012

பதிவர் திருவிழாவில் கவியரங்கில் வாசிக்க மறந்த கவிதைபதிவர் திருவிழாவில் கவியரங்கில் வாசிக்க மறந்த கவிதை

நதிகள் பல
ஒன்று சேர்ந்து
புது கடலொன்று உதயம்


பல திசைகளில் இருந்தும்
புறப்பட்ட
படையொன்று
ஒன்றாய்
புதிய திசை நோக்கி

குன்றுகள் பலவற்றின் அணி
வகுப்பில் ஒரு மலை தொடர்ச்சி
இதோ


எங்கெங்கோ பூத்த
மலர்கள் சேர்ந்து
அமைத்த
நந்தவனம் இதோ

மத்தாப்புகளின்
கூட்டணியில்
ஒரு மாபெரும்
வாணவேடிக்கை

நூற்றுகணக்கில்
தீபங்கள் ஒன்றிணைந்து
தந்திருக்கும்
யாகமொன்று

மழை துளிகள்
பல ஒன்றிணைந்து
அருவியாய்
இறங்கிய
அதிசயம்


புள்ளிகள்
பலவற்றை
ஒன்றிணைத்து
உருவான
அழகிய கோலம்


கனிகளின்
கூட்டமைப்பில்
ஒரு பழமுதிர்சோலை


எழுத்துக்கள் பல
கை கோர்த்து
உருவாக்கிய
கவிதை


இவை
அனைத்தும்
உணர்த்துவது
இந்த வலை பதிவர்
திருவிழாவை
தான்
என்பது
இங்கு
நான் சொல்லாமலே
அனைவருக்கும்
புரிந்திருக்கும்


இந்த
பதிவர் சந்திப்பின்
வெற்றியை
இவ் வையம்
இந்நேரம்
உணர்ந்திருக்கும்

வருங்காலம் நமதாகட்டும்
வெற்றி நம் வசமாகட்டும்


பதிவர் திருவிழாவில் கவியரங்கில் எல்லோரும் கவிதை வாசிக்கையில் எனக்கும் வாசிக்கும் ஆர்வம் வந்தது இருந்தும் நான் பெயர் கொடுக்கவில்லை என்பதால் வாசிக்க முடியவில்லை ஆகவே தான் அதை இங்கு இதோ இணைய மேடையில் வாசித்து விட்டேன்


ஆர்.வி.சரவணன்

10 கருத்துகள்:

 1. அருமை... வாழ்த்துக்கள்...

  என்ன சார் இப்படி...? பெயர் கொடுத்திருக்கலாமே...

  நன்றி...

  பதிலளிநீக்கு
 2. நன்றாகத்தானேயுள்ளது? ஏன் பெயர் கொடுக்காமல் விட்டுவிட்டீர்கள்?
  இருப்பினும் அருமை நண்பரே!

  பதிலளிநீக்கு
 3. செம ஸ்டைலா மைக்கில பேசுறீங்க.

  பதிலளிநீக்கு
 4. அருமையான படைப்பு
  வாய்விட்டு சப்தமிட்டு படித்து மகிழ்ந்தேன்
  மிகச் சிறப்பாக இருந்தது
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அழகிய கவிதை சார் ...
  இனி வரும் மேடைகளில் கவியரங்கத்தில் தவறாமல் பெயரை பதிவு செய்து விடுங்கள் ..
  அழகிய பதிவு ...

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

  பதிலளிநீக்கு
 7. நன்றி தனபாலன் சார்
  நன்றி மோகன் சார்
  நன்றி நிசமுதீன் சார்
  நன்றி ரமணி சார்
  நன்றி கருண்
  நன்றி அரசன்
  நன்றி சுரேஷ்

  பதிலளிநீக்கு
 8. முகம் தெரியாத நம்மை ஒன்றினைப்பது எழுத்தே/எழுத்திற்கு அந்த சக்தியிருக்கிறது.அந்த எழுத்துக்கு முதலில் நன்றி. அடுத்து நம்மைப்போன்ற பதிவர்வகளுக்கும்,எழுத்தாளர்களுக்கும்/
  அடுத்ததாக நம்மையெல்லாம் ஒன்றினைந்து சந்திக்க வைத்த சென்னை பதிவர்கள் சங்கமத்திற்கு/நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்