ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

உச்சம் தரும் அருள் மிகு ஸ்ரீ உச்சி பிள்ளையார் கோவில் கும்பகோணம்


உச்சம் தரும் அருள் மிகு ஸ்ரீ உச்சி பிள்ளையார் கோவில்
கும்பகோணம்


இருநூறாவது பதிவு

வலையுலக நண்பர்களே இது எனது இருநூறாவது பதிவு என் இதயம் கனிந்த நன்றியை உங்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த பதிவில் கும்பகோணத்தில் உள்ள அருள் மிகு ஸ்ரீ உச்சி பிள்ளையார் கோவில்
பற்றி தெரிந்து கொள்வோம்

ல்லாவற்றிற்கும் மூலமாய் விளங்குவதால் விநாயகரே முழு முதற் கடவுள் ஆவார். பிள்ளையார் ஓம் என்னும் பிரணவத்தின் வடிவம் என்பர். அவரது நான்கு கரங்கள் தேவரையும் ,உடல் மனிதரையும் யானைத்தலை விலங்கையும்,பேழை வயிறும் குட்டையான பருத்த இரு கால்கள் பூதத்தையும்,ஒடிந்த கொம்பின் பாகம் பெண் உருவையும்,நீண்ட தந்தமானது ஆண் உருவையும் காட்டுகின்றன.

தல அமைவிடம்
நாகேஸ்வர சுவாமி திருகோவிலின் மேல வீதியில் வடக்கு திசை நோக்கி இக் கோயில் அமைந்துள்ளது. அதாவது கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் நகரின் மையத்தில் நான்கு சாலைகள் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. கும்பேஸ்வரர் கோவில் ,சாரங்கபாணி கோவில் ராமசாமி கோவில், நாகேஸ்வரன் கோவில் களுக்கு நடுவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



கோவிலின் அமைப்பு

புகழ், வழி, கல்வி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல்,நல்லூல்,நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள், என்னும் பதினாறு பேறுகளை குறிக்கும் வண்ணம் பதினாறு படிக்கற்களின் கொண்டு இத் திருகோயில் அமைந்துள்ளது. தரை மட்டத்திலிருந்து சுமார் இருபது அடி உயரத்தில் இருந்து, கருவறையில் ஞானத்தின் பேர் உருவாய் அமர்ந்து, அன்பும் கருணையுமாய் வடிவம் கொண்டு, பிள்ளையார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்

இத் திருகோவிலின் நிருத்த மண்டபத்தில் ஷோடச கணபதி (16 ) சுதைகள் அமைந்திருப்பது கண் கொள்ளா காட்சியாகும்.திருமணம் முடிந்தவுடன் சித்தி புத்தி மெட்டி அணிவித்தல், விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கலந்த தோற்றத்தில் (ஆதிந்திய பிரபு) சமய குரவர்கள் நால்வர், காஞ்சி மகா பெரியவர் சுவாமிகள் நூதன

சுதை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருகோயில் மேல் தளத்தில் கிழக்கு பாகத்தில் திருமணக்காட்சி வைபவம் மற்றும் மேற்கு பாகத்தில் ஓம் பிரணவம் வடிவத்தில் விநாயகர் சுதை வடிவம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது .

பிள்ளையாருக்கு உகந்த நாட்கள்

அவரை வழிபட ஏற்ற நாள் வெள்ளிகிழமை.

அம்மாவாசை கழித்து வரும் சதுர்த்தி திதியும் பௌர்ணமி கழித்து வரும் சதுர்த்தி திதியும்
பிள்ளையாருக்கு சிறந்த தினமாக கொண்டாடபடுகின்றன.

ஆவணி வளர்பிறை சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தி, இத் திருகோயிலில் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது

அன்றைய தினம் காலை பொழுதில் காவிரியில் தீர்த்த வாரியும், இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடும் சிறப்பாக நடைபெற்று வருகிறது

எனது அனுபவம்

நான் கல்லுரி படிக்கும் காலங்களில் நாட்டு நல பணி திட்டத்தில் சேர்ந்திருந்ததால், தீபாவளி பொங்கல் மற்றும் பண்டிகை நாட்களில் சாலை போக்குவரத்து மற்றும் மக்கள் கூடும் இடங்களை ஒழுங்கு படுத்தும் பணியினை காவல் துறையினருக்கு உதவியாக செய்வதுண்டு. இக் கோவிலுக்கு எதிரே ஒரு டிராபிக் பீட் இருக்கிறது அங்கு நின்று சாலை போக்குவரத்தை ஒழுங்கு செய்திருக்கிறேன். இப்போது நினைத்து பார்க்கையில் விநாயகர் என் வாழ்க்கை பாதையை அவரது அருட் பார்வையால் ஒழுங்கு செய்திருப்பதாக பரவசப்படுகிறேன்.

இத் திருக்கோயிலின் திருப்பணி நடைபெற்று 15-07-2012 ஞாயிறு அன்று திருக்குடமுழுக்கு விழா இனிதே நடைபெற்றது



கோவிலின் முன் வாசல்


கோவிலின் வலது பக்க சுவர்


கோவிலின் இடது பக்க சுவர்



2004 ஆண்டு மகாமகம் நடைபெற்ற போது நான் எடுத்த படம்

கும்பகோணம் வரும் போது கட்டாயம் இந்த விநாயகரை வந்து வழிபடுங்கள்
அவர் நம்மை வாழ்க்கையில் உச்சம் தொட வைப்பார்.
நம் உள்ளங்களில் இல்லங்களில் மகிழ்ச்சியை நிறைந்திருக்க வைப்பார்.

ஆர்.வி.சரவணன்

7 கருத்துகள்:

  1. அருமை சார். பொருத்தமான பதிவை 200-வது பதிவா எழுதியிருக்கீங்க

    பதிலளிநீக்கு
  2. பதிவு செம கலக்கல் சார் ... இரட்டை சதம் அடித்தமைக்கு என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான பதிவு... படங்கள் சேர்த்தது மேலும் சிறப்பு...

    200-வது பதிவிற்கு பாராட்டுக்கள் ஐயா...

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    தொடருங்கள்... நன்றி...



    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    பதிலளிநீக்கு
  4. மிகவும் சிற்ப்பான படங்களுடனான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. பொருத்தமான பதிவை 200-வது பதிவா எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  6. அட ச்சே ....இந்த 3,4 வருடங்களில் 10 தடவைக்கு மேல் கும்பகோணம் போய் இருக்கிறேன் ...இந்த பிள்ளையாரை பார்க்கவில்லையே ....கருவேலி கொட்டிட்டே ...என்ற கிராமத்தில் உள்ள கோவிலை கூட தேடி பிடித்து போய்வந்தேன் ...."பகவத் விநாயகர் கோவில் கூட வலைதளத்தை பார்த்தே போனேன் ...அதுசரி ...எந்த கோவிலுக்கு போக நினைத்தாலும் ...அங்கே இருப்பவன் நம்மை அழைத்தாலே போக முடியும் .....தாங்கள் திருச்செந்தூருக்கு உடனேயா போகமுடிந்தது ? நன்றி .

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்