புதன், ஜூலை 11, 2012

தமிழ் சினிமா தவிர்க்க வேண்டிய பத்து


தமிழ் சினிமா தவிர்க்க வேண்டிய பத்து

எனக்கு சினிமா ன்னா ரொம்ப பிடிக்கும். சின்ன பையனா இருக்கிறப்ப சினிமாவுக்கு போறப்ப எப்படி குதுகலமா இருப்பேனோ அப்படியே தான் இப்பவும் படம் போறப்ப பீல் பண்றேன். ஆனா பாருங்க அப்படி சந்தோசமா படத்துக்கு போயிட்டு படம் எதிர்பார்க்கிற அளவுக்கு இல்லேன்னா கடுப்பாயிடுது. அந்த கடுப்பிலே எந்த விசயங்களை படத்தில் தவிர்த்தா படம் ரசிக்கும் படி இருக்கும்னு மனசிலே ட்ரைலர் போட்டு பார்த்தேன். அதை தான் இங்கே தந்திருக்கிறேன். நான் சொன்னதெல்லாம் கரெக்ட் தான்னு நீங்க சொன்னீங்கன்னா என்னோட ரசிப்பு தன்மையை பற்றி நானே சபாஷ் சொல்லிக்கலாம்

ரீல் 1
* படம் ஆரம்பிச்சவுடன் ஹீரோ எண்ட்ரி கொடுப்பார் பாருங்க. ஸ்க்ரீன் லே வந்து ஒரு பைட் போட்டுட்டு அதை தொடர்ந்து ஒரு அறிமுக பாட்டு ஒண்ணு ஆடுவார் இல்லே பாடுவார் . இதெல்லாம் முடிச்சிட்டு தான் கதைக்குள்ளே வருவோம் கதையை ஆரம்பிப்போம் னு அடம் பிடிக்க கூடாது

ரீல் 2
* ஹீரோ பஞ்ச் டைலாக் பேசறேன்னு நம் காதை பஞ்சர் பண்ணாம இருக்கணும்

ரீல் 3
* ஹீரோயின் கேரக்டர் என்பது ஒரு வெகுளி பெண்ணாகவோ அல்லது கவர்ச்சியான கேரக்டராகவோ ஹீரோவுக்கு எவ்வளவு பிரச்னை இருந்தா எனக்கென்ன என் வேலை டூயட் பாடுவது மட்டும் தான் என்பதாகவோ இருப்பது

ரீல் 4
* ஹீரோவின் நண்பனாக காமெடி ஆர்டிஸ்ட் படம் முழுக்க வருவது ஒகே தான். ஆனா அப்படி வர காமெடி நடிகர் சில நேரங்கள்லே ஹீரோ வையே டாமினேட் பண்ணி டைலாக் பேசறது , கிளைமாக்ஸ் லே மட்டும் இல்லாமே போய் பின் வணக்கம் போடும் போது வருவது என்று லாஜிக் கை இடிக்க வைக்கலாமோ

ரீல் 5
* பாடல் காட்சி என்றால் கண்டிப்பாக பாரின் போய் தான் எடுப்போம்னு கண்டிப்பு காட்ட கூடாது. அப்புறம் இருக்கவே இருக்கு கான்டீன் என்று ரசிகர்களை இன்டர்வெல் க்கு முன்னாடியே அங்கே அனுப்ப வேண்டாமே

ரீல் 6
* பாடல் காட்சியில் நடன குழுவினர் கூடவே வந்து ஆடுவது என்பது கண்டிப்பா
சலிப்பை தரும் விஷயம்

ரீல் 7
* பாடலை மாடர்னாக கொடுக்கிறேன்னு தமிழையும் ஆங்கிலத்தையும் மிக்ஸ் பண்ணி கொடுத்து ஹை பிட்ச் லே அலற விடுவது. இன்னும் ஒரு கொடுமை என்னன்னா அருமையான பழைய மெலடி பாட்டை இப்படி கொடுக்கிறது இம்ஹும் முடியல

ரீல் 8
* வில்லன்கள் என்று ஒரு ரவுடி பட்டாளத்தையே அறிமுகபடுத்தி ஸ்க்ரீன் னே பற்றாத அளவுக்கு வர வைப்பது ஒரு பக்கம் என்றால், சுண்டெலி போல் இருக்கும் ஹீரோவுக்கு யானை போல் இருக்கும் வில்லனை காட்டி அவரை தான் ஹீரோ பந்தாடுவதாக நம் காதில் ரீல் சுற்றுவது. வில்லனை எத்தனையோ காட்சிகளில் அடித்து ஒழிக்க ஹீரோவுக்கு சான்ஸ் இருந்தும் அதை செய்யாமல் கிளைமாக்ஸ் வரை ஹீரோவை காத்திருக்க வைப்பது ஏன்

ரீல் 9
* கிளைமாக்ஸ்சில் ஹீரோ பக்கம் பக்கமா உபதேசம் பண்றது . இல்லேன்னா எல்லா பக்கத்துக்கும் வில்லன்களை தூக்கி வீசி எறிவதாக அமைக்க கூடாது. ஏன்னா கண்டிப்பா ஹீரோ தான் வெற்றி பெற போறார்னு தெரியும் அதை சுவாரஸ்யமா நாம் நகம் கடிக்கும் படபடப்புடன் அமைக்கலாமே

ரீல் 10
* படம் வெளியாகும் முன்னாடி படத்தை பற்றி ஓவரா பில்டப் பண்ணி பேட்டி கொடுத்து விட்டு, அதை நம்பி நாம தியேட்டருக்கு படம் பார்க்க போறப்ப நான் சொன்னா படம் பார்க்க வந்துருவியா நீ என்று கேட்பது போல் படம் இருக்க கூடாது

இதெல்லாம் இல்லாமே படம் எடுத்தா வெற்றி பெறுமா னு கேக்கறீங்களா , நல்ல கதை அம்சம் கொண்ட பர பர திரைக்கதையுடன் ஒரு படத்தை தந்தால் வெற்றி பெறும் னு தான் நினைக்கிறேன்

பைனல் பஞ்ச்

அது சரி நீ டைரக்டர் ஆகி படம் எடுத்தா இதெல்லாம் இல்லாமே எடுப்பியானு என் மனசாட்சி என்னை கேட்டுச்சு (பயப்படாதீங்க நான் படம் எல்லாம் எடுத்து கஷ்டபடுத்த வேணாம்னு தான் நினைக்கிறேன் இருந்தாலும் ஒரு பேச்சுக்கு தான் சொல்றேன் ) நான் இதெல்லாம் இல்லாமே படம் எடுக்க ட்ரை பண்ணாலும், தயாரிப்பாளர் சொன்னாங்க, விநியோகஸ்தர் கேட்டாங்க , ரசிகர்கள் ஆசைப்படறாங்க னு காரணம் சொல்லி இந்த விசயங்களை வச்சு படம் எடுக்கிற சூழ்நிலை வந்தா நான் என்ன தான் பண்றதாம் னு திருப்பி கேட்டேன் என் மனசாட்சியை

அப்ப நீ ஒண்ணும் டைரக்டர் ஆக வேண்டாம்னு சொல்லிருச்சு மனசாட்சி

ஆர்.வி.சரவணன்

11 கருத்துகள்:

 1. // பாடல் காட்சியில் நடன குழுவினர் கூடவே வந்து ஆடுவது என்பது கண்டிப்பா
  சலிப்பை தரும் விஷயம்//

  உண்மைதான். ஆனா அதை வைத்து ஆயிரக்கணக்கானோர் பிழைக்கிறார்களே அதனால் பொறுத்துக்க வேண்டியுள்ளது

  பதிலளிநீக்கு
 2. சரவணன் கடைசியில நீங்களும் ஒரு பன்ச் வைத்துட்டீங்க ;-) ரொம்ப நல்லா இருக்கு.

  //நம்பி நாம தியேட்டருக்கு படம் பார்க்க போறப்ப நான் சொன்னா படம் பார்க்க வந்துருவியா நீ என்று கேட்பது போல் படம் இருக்க கூடாது//

  ஹி ஹி ஹி சூப்பர் :-)

  சரி இப்படி எல்லாம் இருந்தா அப்புறம் எப்படி நம்ம தலைவரு நடிப்பது :-)

  பதிலளிநீக்கு
 3. //நான் சொன்னா படம் பார்க்க வந்திருவியா நீ//
  - தலைவா, எந்த டைரடக்கரும் வித்தியாசமான கதை, மாறுபட்ட கோணம், இதுவரை யாரும் தராத டெலிவரி...
  இப்படித்தான் சொல்றது. கடைசியில படம் ஊத்திக்கும்.
  நமக்கு நல்ல பொழுதுபோக்கு.

  பதிலளிநீக்கு
 4. //நான் சொன்னா படம் பார்க்க வந்திருவியா நீ//
  - தலைவா, எந்த டைரடக்கரும் வித்தியாசமான கதை, மாறுபட்ட கோணம், இதுவரை யாரும் தராத டெலிவரி...
  இப்படித்தான் சொல்றது. கடைசியில படம் ஊத்திக்கும்.
  நமக்கு நல்ல பொழுதுபோக்கு.

  பதிலளிநீக்கு
 5. தமிழ் சினிமா தவிர்க்க வேண்டியது பத்து மட்டும்தானா?

  பதிலளிநீக்கு
 6. சூப்பர் சார் ... இதெல்லாம் களைந்தாலே பாதி சினிமா நல்லா இருக்கும் மீதி நல்ல கதை நேர்த்தியான நடிப்பு இருந்தாலே போதும் ... பதவிக்கு என் வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
 7. நீங்க சொல்லுறது சரிதான்.... அதுபோல எடுத்த படங்கள் நிறைய பொட்டியிலேயே தூங்குதுங்க எடுத்துக்காட்டுக்கு.... “கலவாடிய பொழுதுகள்”.

  பகிர்வுக்கும் உணர்வுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 8. தமிழ் திரையில் துணிச்சலும் குறைந்து விட்டது.... துணியும் குறைந்து விட்டது.

  பதிலளிநீக்கு
 9. எல்லா பாயிண்ட்டுமே கரெக்ட் தான்..பில்டப்பைக் குறைத்தாலே போதும்.

  பதிலளிநீக்கு
 10. ஒன்பது ருபாய் நோட்டு.. அது போல் வந்த படம்..மக்கள் ஆதரவு இருக்காது பாஸ்! மசாலா இருக்கட்டும், ஆனால் அளவோடு!!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்