வியாழன், ஜூலை 19, 2012

முக நூலுக்காக....


முக நூலுக்காக....


நான் முக நுலுக்காக எழுதிய கிறுக்கல்களை இங்கே தந்திருக்கிறேன்


கமல் ஹாலிவுட் செல்கிறார்
(விஸ்வரூபம் எடுப்பதற்கு வாழ்த்துக்கள் )
----
பாக்யராஜ் கேரள அரசின் திரைப்பட விருது குழுவுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
(பாலக்காட்டு மாதவனுக்கு கிடைச்ச கௌரவம் இது )
----
இயக்குனர் ஷங்கரின் புதிய மேக பட்ஜெட் படம் ஐ
"ஐ" ( இது எனது மகிழ்ச்சி ஐ )
----
யுவன் சங்கர் ராஜாவின் நூறாவது படம் பிரியாணி
( லெக் பீஸ் நிறைய போடுங்க ச்சே சூப்பர் ஹிட் டியூன் நிறைய போடுங்க )
----
ஞாயிறு மதியமே தொடங்கி விடுகிறது
திங்கள் வருவதற்க்கான பதட்டம்
(ரெஸ்ட் எடுத்து களைத்ததால் வருதோ )
----
யார் ஒருவர் வரிசையில் நிற்பவர்களை பற்றி பொருட்டே இல்லாமல் டிக்கெட் கவுன்ட்டர் சென்று டிக்கெட் வாங்குகிறாரோ அவர் அப்பாடக்கர் என்று கருதபடுகிறார்
----

பார்ட்டியின் போது சரக்கடிக்காத நண்பனும் தேவைபடுகிறான்
(மட்டையாகும் போது வீட்டில் கொண்டு சேர்க்கணுமே)
----
மின் தடையை பொது மக்கள் பொறுத்து கொள்ள வேண்டும் என்று
மின்சார வாரியம் அறிவித்துள்ளது
(மறுபடியும் முதல்லேருந்தா )
----
அவ்ளோ பெரிய பைக் லே சின்ன பையன் போறதை பார்க்கும் போது
யானை மேலே சுண்டெலி போறப்பலேயே தெரியுது எனக்கு
(பொறாமை ஸ்டார்ட் ஆகுதோ )
----
டீ கடைக்கு போறப்ப டீ உடனே வந்துருச்சின்னா கூடவே ஒரு டவுட் டும் வந்துருது
(எப்பவோ யாருக்கோ போட்ட டீ நம்ம கிட்டே வந்துருச்சோன்னு )

ஆர்.வி.சரவணன்


8 கருத்துகள்:

 1. "முக நூலுக்காக" என தலைப்பை மாற்றுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. நன்றாக இருந்தது. குறிப்பாக கடைசி கமெண்ட். நான் அப்படி நினைத்திருக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 3. அடைப்புக்குறிக்குள் உங்களின் கருத்துக்கள் கலக்கல்...
  வாழ்த்துக்கள்...
  பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 4. ஞாயிறு பதட்டம் , லெக் பீஸ் , அப்பாட்டாக்கர் , யாருக்கோ போட்ட டீ.. ரொம்ப ரசித்தேன் சார் ...
  தொடரட்டும் இந்த முகநூலும் உங்க நச் கம்மன்ட்சும் ...

  பதிலளிநீக்கு
 5. ஞாயிறு மதியமே தொடங்கி விடுகிறது திங்கள் வருவதற்கான பதட்டம் என்பதிதான் அடங்கியிருக்கிறது என்பது போலவே எல்லாமே/நன்றி. வணக்கம்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்